மும்பையை கட்டுப்படுத்திய பிரசித் மற்றும் சிராஜ்.. குஜராத்துக்கு முதல் வெற்றி!

18வது ஐபிஎல் சீசன் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (மார்ச் 29) 9வது லீக் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் … Read more

100நாள் வேலை திட்டத்தை சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் மோடி அரசு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: 100நாள் வேலை திட்டத்தை சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் மோடிஅரசு  செயல்பட்டு வருவதாக  முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக தமிழ்நாட்டுக்கு  தரவேண்டிய ”ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து,  திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில், 100நாள் வேலை திட்டத்தை ஒழித்துகட்டும் வேலையில் மத்தியஅரசு இறங்கி உள்ளது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து … Read more

Vikatan Weekly Quiz: எம்.பி-க்கள் சம்பளம் உயர்வு டு ATM கட்டணம் உயர்வு – இந்த வார க்விஸ்க்கு ரெடியா?

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு, ஏடிஎம் கட்டணம் உயர்வு, இளையராஜாவுக்கு பாராட்டு விழா அறிவிப்பு, சர்வதேச கால்பந்து போட்டியில் கின்னஸ் சாதனை என இந்த வாரத்தின் சம்பவங்கள் பல பல… அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். விகடன் App வழியே இந்த Quiz-ல் பங்கேற்கப் பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும். https://forms.gle/bxar5nwL6K6ZRadr5?appredirect=website … Read more

“யாருடைய கூட்டணிக்காகவும் அதிமுக துடிக்கவில்லை” – செல்லூர் ராஜூ 

மதுரை: “யாருடைய கூடடணிக்காகவும் அதிமுக துடிக்கவில்லை” என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் புதூர் கிராமத்தில் ரூ.17.95 லட்சம் மதிப்பீட்டில் கிராம சாவடி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியது: “திமுக கூட்டணி கொள்கை கூட்டணி என்பது சுத்த பொய். அது சூட்கேஸ் கூட்டணி. நடிகர் விஜய் தற்போதுதான் களத்துக்கு வந்துள்ளார். தனது கட்சித் … Read more

சத்தீஸ்கரில் 16 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை – இரண்டு வீரர்கள் காயம்

சுக்மா: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் இன்று (மார்ச் 29, 2025) நடந்த மோதலில், பாதுகாப்புப் படையினர் 16 மாவோயிஸ்ட்டுகளை சுட்டுக் கொன்றனர். இந்த மோதலில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் காயமடைந்தனர். சுக்மா மாவட்டத்தின் கேரளபால் காவல் நிலையப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அவர்களுக்கு எதிரான நடவடிக்கை நேற்று தொடங்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “சுக்மா மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி), மத்திய ரிசர்வ் காவல் படையின் கூட்டுப் … Read more

நிலநடுக்க காரணம் முதல் தற்காப்பு வரை: மியான்மர் பூகம்பத்தை முன்வைத்து நிபுணர்கள் சொல்வது என்ன?

நைப்பியிதோ: மியான்மரின் மாண்டலேவுக்கு அருகே வெள்ளிக்கிழமை முற்பகல் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 800 கிலோ மீட்டர் தாண்டி, அண்டை நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் வரை உலுக்கியது. மியான்மரை அடுத்தடுத்து தாக்கிய இரண்டு பூகம்பத்தால் மியான்மரின் இரண்டு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் நைப்பியிதோவில் இடிபாடுகளுக்கு இடையே இருந்து இறந்தவர்களின் உடல்களை மீட்புக் குழுவின் வெளியில் எடுப்பதை எங்கும் காண முடிகிறது. அதேநேரத்தில் வானுயர்ந்த கட்டிடம் உட்பட கட்டுமான பணிகள் நடந்து … Read more

அதிமுகவின் வாக்கு தவெகாவிற்கு செல்வது உறுதி – எம்பி மாணிக்கம் தாகூர்!

அதிமுகவின் வாக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்வது உறுதியாகிவிட்டது. அந்தக் கட்சி கடைசி காலத்தை நெருங்கி வருகிறது என்று எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு துரோகம் இழைக்கப்பட்டதா? தோல்விக்கு இதுதான் காரணமா?

18வது ஐபிஎல் சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. இச்சூழலில் இந்த ஐபிஎல் தொடர் நடக்கும் 13 மைதானங்களில் அதிகமான மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  நேற்றைய (மார்ச் 28) போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியுடன் தோல்வியை தழுவிய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை … Read more

Dushara: 'கலைவாணியாக பயணித்த இந்த அனுபவம்..'- வீர தீர சூரன் பாகம் 2 குறித்து நடிகை துஷாரா நெகிழ்ச்சி

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீர தீர சூரன் பாகம் -2’.   பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை (மார்ச் 27) மாலை வெளியாகியிருந்தது இப்படம். ஊர்த் திருவிழாவின்போது சொந்த ஊர் ரௌடி கும்பல் மற்றும் போலீஸ் இடையே மாட்டிக் கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காவும், தன்னைச் சுற்றி இருக்கும் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் போராடும் விக்ரமின் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது, ரசிகர்களிடையே நல்ல … Read more