குழந்தையை கொன்றதாக வழக்கு: அபுதாபியில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜாதி கான் என்ற பெண்ணுக்கு அபுதாபியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜாதி கான் (33) என்ற பெண், கடந்த 2021ஆம் ஆண்டு வீட்டு வேலைக்காக அபுதாபி சென்றுள்ளார். 2022-ம் ஆண்டு அந்த வீட்டின் உரிமையாளரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து அந்த குழந்தையை பராமரிக்கும் வேலையையும் ஷாஜாதி கான் செய்து வந்துள்ளார். இதனையடுத்து வழக்கமாக போடப்படும் தடுப்பூசிகள் … Read more

சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை! உச்சநீதிமன்றம்

டெல்லி: சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சியின் புகாரின் பேரில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக, சென்னை உயர்நிதிமன்றத்தின் உத்தரவின் பேரில்,   நடிகை கொடுத்த பாலியல் வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும்,   சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் நடத்திய விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை … Read more

பட்டாசு பார்சலை இறக்கியபோது பயங்கர வெடி விபத்து – 5 தொழிலாளர்கள் படுகாயம்

காக்கிநாடா, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் மூட்டைக்குள் வெங்காய வெடிகள் இருந்தது தெரியாமல் பட்டாசு பார்சலை கீழே போட்டபோது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இன்று காலை காக்கிநாடாவில் உள்ள ஒரு டிரான்ஸ்போட் நிறுவனத்துக்கு லாரியில் வந்த பார்சல்களை தொழிலாளர்கள் இறக்கிக் கொண்டு இருந்தனர். அப்போது அதிலிருந்த ஒரு பார்சலை தொழிலாளி ஒருவர் இறக்கி தரையில் போட்டபோது அது பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இதில் அங்கிருந்த 5 … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நார்த் ஈஸ்ட் யுனைடெட்

சென்னை , 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி முதல் பாதியிலேயே 3 கோல்கள் (7, 26, 38-வது நிமிடம்) அடித்து அசத்தியது. இதன் காரணமாக முதல் … Read more

ராஜினாமா செய்ய சொன்ன அமெரிக்க செனட்டர்… பதிலடி கொடுத்த ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்ததால் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, உக்ரைனுக்கு அமெரிக்கா செய்த உதவிகளை குறிப்பிட்டு பேசிய டிரம்ப், அமெரிக்காவின் ஆதரவு இல்லாவிட்டால் ரஷியாவுடனான போரில் உக்ரைனின் கதையே வேறு, என மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். “நாங்கள் இருப்பதால் போரில் நீடிக்கிறீர்கள். இல்லையொன்றால் இந்த போரில் இன்னும் மோசமாக சிக்கி இருப்பீர்கள். உங்களுக்கு இந்த போரில் வெல்லும் வாய்ப்பே இல்லை. நீங்கள் மூன்றாம் உலகப்போரை … Read more

IND Vs AUS: “முதலில் அவரைக் கண்டு பயப்படாதீர்கள்" – ஆஸ்திரேலியாவை வீழ்த்த ஹர்பஜன் தரும் `3' ஐடியாஸ்

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கின்றன. நாளை துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் குரூப் A-ல் முதலிடம் பிடித்த இந்தியாவும், குரூப் B-ல் இரண்டாமிடம் பிடித்த ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. Champions Trophy இந்திய அணி 2011 ஒருநாள் உலகக் கோப்பை காலிறுதிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவிடம், 2015 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதி, … Read more

கல்குவாரிக்கு எதிர்ப்பு: செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

செங்கல்பட்டு: கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த மக்களை அனுமதிக்காததால் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களை தடுக்க முயன்ற காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே வயலூர், நெற்குணம் ஆகிய கிராமங்களில் புதியதாக அமையவுள்ள கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பொதுமக்கள் தொடர்ந்து மனு அளிக்க வந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. புதிய கல்குவாரிக்கு … Read more

சார்ஜர் கேபிளால் கழுத்தை நெரித்து கொலை: ஹரியானா காங். தொண்டர் மரண வழக்கில் நண்பர் கைது

ஹரியானா காங்கிரஸ் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட ‘பாரத் ஜோடோ’ யாத்திரையில் அவருடன் பங்கேற்று பிரபலமானவர் ஹிமானி நர்வால். ஹரியானா காங்கிரஸ் சார்பில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரம் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கட்சிப் பணிகள் மட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு பிரபலமாக இருந்தார். இந்நிலையில் ஹரியானாவின் ரோத்தக் நகரில் கடந்த சனிக்கிழமை ஹிமானியின் உடல் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் … Read more

‘தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழ் விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடப்பதாகத் தெரிகிறது’! உச்ச நீதிமன்றம்

சென்னை: ‘தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழ் விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடப்பதாகத் தெரிகிறது’ என்று  உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. ‘தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழ் ஒரு பெரிய பிரச்சனையாகத் தெரிகிறது; மிகப்பெரிய மோசடி நடப்பதாகத் தெரிகிறது’ வழக்கின் விசாரணையின்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் போலி சாதிச் சான்றிதழ்களை வழங்குவதில் “பெரிய மோசடி” இருப்பதாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முதல் பார்வைக் கருத்தை வெளியிட்டது. ஒரு வழக்கில், பிரதிவாதி தான் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர் … Read more

இந்திய ஆறுகளில் 6 ஆயிரத்து 300 டால்பின்கள் – ஆய்வில் தகவல்

டெல்லி, இந்திய ஆறுகளில் உள்ள டால்பின்களை கணக்கெடுக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி 2020 ஆகஸ்ட் 15ம் தேதி அறிவித்தார். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆறுகளில் வாழும் டால்பின்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. அதன்படி, 2021 முத்ல 2023 வரை நாட்டின் 8 மாநிலங்களில் உள்ள 58 ஆறுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. உத்தரபிரதேசம், பீகார், ஜாக்கண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், அசாம், பஞ்சாப் ஆகிய 8 மாநிலங்களில் உள்ள … Read more