மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை! அமைச்சர் மா.சு. தகவல்…

காஞ்சிபுரம்: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாட்டில்,  காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருபத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத நிலையில், அங்கு புதிய மருத்துவ கல்லூரிகள்  தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்புட்குழி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்  ரூ.4.80 கோடி மதிப்பில் கட்டப்பட்ட … Read more

ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்த 10 மசோதாக்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் அமல்: அரசிதழில் அறிவிக்கை வெளியீடு

பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் வகையில் இயற்றப்பட்ட 10 சட்டங்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிக்கை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், கடந்த 8-ம் தேதி தீர்ப்பு வெளியானது. இதில், தமிழக ஆளுநருக்கு எதிராக பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், சட்டப்பேரவையால் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவும் கால நிர்ணயம் … Read more

மாநில மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு: குடியரசுத் தலைவருக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு

புதுடெல்லி: மாநில மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என குடியரசு தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்துள்ள உச்ச நீதிமன்றம், முடிவெடுப்பதற்கு முன் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது விவேகமானது என்று தெரிவித்துள்ளது. தமிழக அரசு அனுப்பிய மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாக அவருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த 8-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த … Read more

அபிஷேக் சர்மா சதம்.. தொடர் தோல்விகளில் இருந்து மீண்ட ஹைதராபாத்!

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இத்தொடரின் 27வது லீக் ஆட்டம் இன்று ஹைதராபாத்தின் ராஜுவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களான பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஸ் … Read more

தலையாட்டி பொம்மை எடப்பாடி பழனிச்சாமி! அதிமுக பாஜக கூட்டணி குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்…

சென்னை: தலையாட்டி பொம்மை எடப்பாடி பழனிச்சாமி என அதிமுக பாஜக கூட்டணி குறித்து  திமுக அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ள தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி,  எடப்பாடி பழனிச்சாமை,  ”தலையாட்டி பொம்மையாய் இருந்து கூட்டணியை உறுதி செய்துள்ளார்  என கூறி உள்ளார். தமிழ்நாட்டு நலனுக்கான எந்தவித உறுதியையும் பாஜகவிடம் கேட்காமல் அடிமை சாசனம் எழுதி கொடுப்பது போல கூட்டணிக்கு சரி என தலையாட்டி … Read more

பாஜக கூட்டணி: "விழி பிதுங்கிப் பதறும் திமுக; ஆனந்தத்தில் அதிமுக" – ராஜேந்திர பாலாஜி குதுகல பேச்சு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராஜதந்திரத்தோடு அற்புதமான கூட்டணியை அமைத்துள்ளார். ராஜேந்திரபாலாஜி எடப்பாடியார் என்ன செய்வார், என்ன செய்துவிட முடியும், என்ன செய்யப் போகிறார் என்று பொதுமக்களும், செய்தி சேனல்களும் எதிர்பார்த்த இந்த நேரத்தில் அற்புதமான கூட்டணியை அமைத்துள்ளார். இதன்மூலம் … Read more

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை

கோவை: தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கோவை கணபதி பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கோவை கணபதி பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு அடிக்கடி வந்து சிகிச்சை பெற்று செல்கிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கோவை வந்த ஓ.பன்னீர்செல்வம், கோவை கணபதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு சென்று தங்கினார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நீராவி குளியல், … Read more

''அரசியலுக்காக கலவரத்தை தூண்டாதீர்கள்'' – வக்பு சட்ட எதிர்ப்பு போராட்டத்துக்கு மம்தா கண்டனம்

கொல்கத்தா: வக்பு சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தை அடுத்து, அனைவரும் அமைதி காக்குமாறு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அனைத்து மதத்தினருக்கும் எனது மனமார்ந்த வேண்டுகோள், தயவுசெய்து அமைதியாகவும் நிதானமாகவும் இருங்கள். மதத்தின் பெயரால் எந்த மதச்சார்பற்ற நடத்தையிலும் ஈடுபடாதீர்கள். ஒவ்வொரு மனித உயிரும் விலைமதிப்பற்றது, அரசியலுக்காக கலவரங்களைத் தூண்டிவிடாதீர்கள். கலவரம் செய்பவர்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிறார்கள். வக்பு சட்டத்தை நாங்கள் … Read more

மேற்குவங்கத்தில் வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை.. 2 பேர் பலி!

மேற்குவங்கம் மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.