''தலையாட்டி பொம்மையாய் இருந்து கூட்டணியை உறுதி செய்துள்ளார் பழனிசாமி'': அமைச்சர் ரகுபதி

சென்னை: தமிழ்நாட்டு நலனுக்கான எந்தவித உறுதியையும் பாஜகவிடம் கேட்காமல் அடிமை சாசனம் எழுதி கொடுப்பது போல கூட்டணிக்கு சரி என தலையாட்டி பொம்மையாய் பேச்சின்றி தலையை மட்டும் ஆட்டி கூட்டணியை உறுதி செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “இரண்டு ரைடுகளுக்கு அரண்டு போய் அமித் ஷா முன்னிலையில் ஒருவார்த்தை கூட பேசாமல் தலையாட்டி பொம்மை போல அமர்ந்து கூட்டணியை உறுதி செய்த பழனிசாமியின் … Read more

'வக்பு' வன்முறை | மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் கலவரத்தில் 2 பேர் உயிரிழப்பு: போலீஸ் தகவல்

கொல்கத்தா: வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் உள்ள சம்சர்கங்ஜில் ஏற்பட்ட வன்முறையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள வன்முறை மோதல்களால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, வக்பு திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது என்று தெரிவித்திருக்கிறார். இதனிடையே முர்ஷிதாபாத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 118 … Read more

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பெரிய நிம்மதி… அமைச்சர் சொன்ன விஷயம் என்ன?

TN Government Transport Employees: அரசு போக்குவரத்து கழகம் தனியார்மயமாக உள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

மார்க்ரம், பூரன் அதிரடி.. லக்னோ அணிக்கு நான்காவது வெற்றி!

ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இத்தொடரின் 26வது லீக் ஆட்டம் இன்று (ஏப்ரல் 12) லக்னோ எக்னா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.  இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் குஜராத் டைட்டன்ஸ் … Read more

`அஜித் சாருக்காக காத்திருக்கிறேன்' – 'Thottu Thottu Pesum Sulthana' புஷ்பவனம் குப்புசாமி

குட் பேட் அக்லி’ படத்தின் மூலம் மின்சாரத்தைப் பாய்ச்சுவதுபோல் மீண்டும் வைரல் ஹிட் அடித்துள்ளது ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடல். ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ கடந்த 1999-ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளியான ‘எதிரும் புதிரும்’ படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரமும் சிம்ரனும் துள்ளிக்குதித்து பவர்ஃபுல் எனர்ஜியோடு ஆட்டம் போட்டிருப்பார்கள். அப்போதே, ஹிட் அடித்த இப்பாடல் தற்போது ‘குட் பேட் அக்லி’ மூலம் மீண்டும் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. சிம்ரனுக்கு பதிலாக … Read more

UP affair : மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்…

உத்திர பிரதேச மாநிலம் அலிகார் அருகே மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் மாமியார் ஓடிப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்ராக் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு டாடன் பகுதியைச் சேர்ந்த ஒரு பையனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணத்திற்கு அழைப்பிதழ்கள் அச்சடித்து சொந்த பந்தங்களுக்கு விநியோகித்த நிலையில் மணமகளின் தாயும் மணமகனும் வீட்டை விட்டு ஓடிப்போயுள்ளனர். மகளுடன் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் பரிச்சயம் ஏற்பட்டு காதலாக மாறிய நிலையில் இவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் … Read more

அம்பேத்கர் சிலையைக் கைப்பற்ற அதிகாரிகள் முயற்சியா? தலித் அமைப்பிடம் சிலை ஒப்படைப்பு; நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் உள்ள அருள்ஞானபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பில் கடந்த ஜூலை மாதம் நிறுவப்பட்ட அம்பேத்கர் முழு உருவ வெண்கலச்சிலை மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. புதிய சிலை அருகிலேயே திறந்தவெளியில் சிமெண்டால் ஆன அம்பேத்கரின் மார்பளவு சிலையும் உள்ளது. புதிய சிலை பட்டா நிலத்தில் அமைந்துள்ள நிலையில், புறம்போக்கில் இருப்பதாகக் கூறி அதிகாரிகள் கையகப்படுத்த முயல்வதாகவும், இதன் பின்னணியில் அரசியல் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது பற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு தலித் உரிமைகள் … Read more

''பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது ஏன்?'' – வைகைச்செல்வன் விளக்கம்

காஞ்சிபுரம்: அதிகார பலம் மற்றும் பண பலத்துடன் இருக்கும் திமுகவை வீழ்த்த வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கையைத் தொடர்ந்து பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம், ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த தண்ணீர் பந்தலை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னாள் … Read more

காங். தொடர்புடைய நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் சொத்துக்களை கையகப்படுத்த அமலாக்கத்துறை நோட்டீஸ்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிட் (ஏஜேஎல்)-க்கு எதிரான பண மோசடி வழக்கில் முடக்கப்பட்ட ரூ.661 கோடி மதிப்புள்ள அசையாச் சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏஜேஎல்-க்கு சொந்தமான டெல்லியின் ஐஒடியில் உள்ள ஹெரால்ட் ஹவுஸ், மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள வளாகம் மற்றும் லக்னோவின் பிஷேஸ்வர்நாத் சாலையில் உள்ள ஏஜேஎல் கட்டிடம் ஆகிய மூன்று இடங்களில் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த … Read more

Viral Video: சூட்கேஸ் உள்ளே இளம்பெண்… ஹாஸ்டலுக்கு கொண்டசெல்ல முயன்ற மாணவன்!

Bizarre Viral Video: மாணவர் ஒருவர் பெண்ணை சுட்கேஸில் அடைத்து ஹாஸ்டலுக்குள் கொண்டுசெல்ல முயன்றுள்ளார். அப்போது பாதுகாவலர்கள் கையும் களவுமாக பிடித்த வீடியோவை இங்கு விரிவாக காணலாம்.