அமெரிக்காவில் தமிழக மாணவர்களுடன் அண்ணாமலை கலந்துரையாடல்

சென்னை: இந்தியா கொள்கை மற்றும் பொருளாதார ஆராய்ச்சி குறித்து அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துரையாடினார். தமிழக பாஜகவின் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தலைவர் மாற்றத்துக்கு பிறகு அண்ணாமலை பல்வேறு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, கடந்த 14-ம் தேதி ஆன்மிக பயணமாக அண்ணாமலை இமயமலை சென்றார். இமயமலையில் ஸ்ரீ ஸ்ரீ மகாவதார் பாபாஜி குகையில் … Read more

நடிகர் அஜித், லட்சுமிபதி, அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம விருது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்

புதுடெல்லி: நடிகர் அஜித் குமார், லட்சுமிபதி, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று பத்ம விருதுகளை வழங்கினார். குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பத்ம … Read more

Pahalgam News: காஷ்மீரின் 48 சுற்றுலா தலங்கள் மூடல்… அரசு அதிரடி – முழு பின்னணி

Pahalgam News In Tamil: காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்களை தற்காலிகமாக மூடுவதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்திருக்கிறது.

மே மாதம் வெளியாகும் முக்கியமான 5 படங்கள்! கண்டிப்பா ஹிட் தான்!

May Month Releasing Tamil Movies: மே மாதம் சூர்யா, விஜய் சேதுபதி, சந்தானம், சூரி நடித்துள்ள படங்கள் வெளியாக உள்ளதால் சினிமா ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

Ajith Kumar: "குறைந்தபட்சம் அவர்களுக்காகவாவது…" – விருது பெற்ற கையோடு பஹல்காம் தாக்குதல் பற்றி AK

நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமார், நேற்று (ஏப்ரல் 28) டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி கைகளால் `பத்ம பூஷண்’ விருது பெற்றார். அதைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அஜித் குமார் இரங்கல் தெரிவித்து, அனைவரும் வேற்றுமைகளை ஒதுக்கிவைத்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கூறியிருக்கிறார். `பத்ம பூஷண்’ … Read more

துணைவேந்தர் பதவி நியமனம் மற்றும் நீக்கம் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா பேரவையில் நிறைவேற்றம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரலவையில்,  துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதா தாக்கல் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலை.க்கு துணைவேந்தர் நியமனம் மற்றும்  துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைகிறது. இன்றைய அமர்வில்,  துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், துணைவேந்தரை நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் … Read more

Doctor Vikatan: ஒருநாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம்.. பால் குடித்தால் உடல் எடை கூடுமா?

Doctor Vikatan: சராசரி நபர் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம்… குறிப்பாக, பெண்கள் எவ்வளவு பால் குடிக்கலாம்… பால் குடித்தால் வெயிட் அதிகரிக்குமா… சைவ உணவுக்காரர்கள் கால்சியம் தேவைக்கு பாலையே நம்பியிருக்க வேண்டிய நிலையில், அதைத் தவிர்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது? சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ் பாலில் புரதம், கால்சியம் உண்டு என்றாலும் அதை எல்லோருக்கும் பொதுவாகப் பரிந்துரைக்க முடியாது.  பால் மற்றும் பால் பொருள்கள் … Read more

வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை: தமிழக அரசு பரிசீலனை

சென்னை: வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க பரிசீலிக்கப்படும் என சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தி.வேல்முருகன் எம்எல்ஏ பேசும்போது, “வெளிமாநிலத் தொழிலாளர்களால் தமிழகத்தில் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அதனால் அவர்கள் என்ன பணிக்காக வருகிறார்கள், எங்கு செல்கிறார்கள், எந்த நிறுவனத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள், எப்போது மாநிலத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல, … Read more

16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத உள்ளடக்கத்தை பரப்பியதற்காக மொத்தம் 6.3 கோடி சந்தாதாரர்களை கொண்ட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் பேரில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. டான், சமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், ரஃப்தார், ஜியோ நியூஸ், சுனோ நியூஸ் உள்ளிட்ட செய்தி சேனல்களுக்கும் பத்திரிகையாளர்கள் இர்ஷாத் பாட்டி, அஸ்மா ஷிராசி, உமர் சீமா, முனீப் ஃபரூக் ஆகியோரின் யூடியூப் … Read more

அண்ணாமலைக்கு எம்பி பதவி இல்லை! வேறு ஒருவருக்கு கொடுத்த பாஜக!

தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எம்பி பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அது வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.