அரசு ஊழியர்களுக்கு டி.ஏ. உயர்வு, திருமண முன்பணம் அதிகரிப்பு: முதல்வரின் 9 முக்கிய அறிவிப்புகள் என்ன?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு, திருமண முன்பணம் ரூ.5 லட்சம், பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிப்பு, ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல் என்பது உட்பட 9 முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின்கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் … Read more

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் ஆலோசனை: 40 நிமிட சந்திப்பில் பேசியது என்ன?

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, காஷ்மீர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முப்படைகளும் உஷார் நிலையில் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்தவர்கள் வீடுகளில் … Read more

பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து வெளியேறிய 1200 வீரர்கள்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து 1200 வீரர்கள் வெளியேறி உள்ளனர். கடந்த 22-ந் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டி பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பாகிஸ்தான் உடனான சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து, நாட்டில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, அட்டாரி-வாகா எல்லை மூடல் உள்ளிட்ட … Read more

ரெயிலுக்கு காத்திருந்த பெண் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை – அதிர்ச்சி சம்பவம்

பாட்னா, பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டம் ஷியாம்பூர் கிராமத்தை சேர்ந்த பெண் உத்தரபிரதேசத்தில் வசித்து வந்தார். இதனிடையே, அப்பெண்ணின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பெண் கடந்த சில நாட்களுக்குமுன் சொந்த ஊருக்கு வந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையை கவனித்து வந்தார். இந்நிலையில், அப்பெண் இன்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் உத்தரபிரதேசத்திற்கு செல்ல அப்பகுதியில் உள்ள சசமுசா ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். உத்தரபிரதேச ரெயிலுக்கு காத்திருந்த அப்பெண் அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: 14 வயது வைபவ் அரைசதம் அடித்து சாதனை

ஜெய்ப்பூர், ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடி … Read more

ஈரான் துறைமுக வெடி விபத்து; பலி எண்ணிக்கை உயர்வு

தெஹ்ரான் ஈரான் நாட்டின் பாந்தர் அப்பாஸ் நகரில் துறைமுகம் உள்ளது. இது ஈரானின் மிகப்பெரிய வர்த்தக துறைமுகம் ஆகும். இந்த துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. துறைமுகத்தில் கண்டெய்னர்கள் நிறுத்தி வைத்திருந்த பகுதியில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது. ஏவுகணைகளுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்களை சரிவர கையாளாததால் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அமோனியம் பெர்குளோரேட் என்ற வேதிப்பொருள் அந்த … Read more

RR v GT: ஆட்டம் காட்டிய 'பாஸ் பேபி' சூர்யவன்ஷி, அரண்டு போன குஜராத்! – என்ன நடந்தது?

தொடர்ச்சியாக ஐந்து தோல்விகள்… கேப்டன் சஞ்சு சாம்சன் காயம்… வெற்றிபெற்றிருக்க வேண்டிய 2 போட்டிகளைக் கோட்டை விட்டது என சுழலில் சிக்கியிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று தோற்றால் மொத்தமாக பிளே-ஆஃப் கனவை மறந்துவிடலாம் என்ற நிலை. இப்போது ஐந்து போட்டிகளை வென்றாலும் மற்ற முடிவுகள் அவர்களுக்குச் சாதகமாக அமைய வேண்டியாக இருக்கும். ஆனால், மறுபுறத்தில் தன்னம்பிக்கையில் திளைத்து கொண்டிருந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. இன்று வென்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி குவாலிஃபையர் 1 வாய்ப்பை நோக்கி … Read more

தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானியர்கள் 200 பேர் தமிழகத்திலிருந்து வெளியேற்றம்

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, தமிழகத்துக்கு பல்வேறு காரணங்களுக்காக வந்திருந்த 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் கடந்த 27-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த கால அவகாசத்துக்குள் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுகிறார்களா என்பதை அந்தந்த மாநில அரசுகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை … Read more

செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு: முழு விவரம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று முடித்துவைத்தது. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டு ஜூனில் அமலாக்கத் துறை அவரை கைது செய்தது. சிறையில் இருந்தபோது அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் … Read more

53 நாடுகளைச் சேர்ந்த 402 மலையேறுபவர்களுக்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அனுமதி

8,848.86 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நேபாள சுற்றுலாத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த முறை, 53 நாடுகளைச் சேர்ந்த 74 பெண்கள் உட்பட 402 மலையேறுபவர்களுக்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 75 பெண்கள் மற்றும் 330 ஆண்கள் உட்பட 414 பேர் சிகரத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நேபாளத்தில் பல்வேறு சிகரங்களை ஏற வழங்கப்பட்ட அனுமதிகளிலிருந்து மொத்தம் ₹68.4 கோடி பர்மிட் … Read more