காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாளாவது விடுமுறை வழங்க தமிழக பாஜக வலியுறுத்தல்

சென்னை: காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாளாவது விடுமுறை வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மாநில அரசு எந்த காரணமும் சொல்லாமல் அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவல் துறை மீது எனக்கு எப்போதுமே ஒரு நல்லெண்ணம் உண்டு. காரணம், அவர்களுக்கு இருக்கும் கடுமையான பணிச் சூழல். எப்போதுமே நெருக்கடியில் இருக்கக்கூடியவர்கள் அவர்கள். எந்த உடல் … Read more

26 ரஃபேல் மரைன் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்: இந்தியா – பிரான்ஸ் கையெழுத்து

புதுடெல்லி: இந்தியக் கடற்படைக்கு 26 ரஃபேல்-மரைன் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா – பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே இன்று (திங்கள்கிழமை) கையெழுத்தானது. இதில் 22 ஒற்றை இருக்கை விமானங்களும் 4 இரட்டை இருக்கை விமானங்களும் அடங்கும். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியக் கடற்படைக்கு 26 ரஃபேல்-மரைன் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா – பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே இன்று (திங்கள்கிழமை) கையெழுத்தானது. இதில் 22 ஒற்றை இருக்கை விமானங்களும் 4 இரட்டை இருக்கை … Read more

பஹல்காம் தாக்குதலால் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம்: சீனா நிலைப்பாடு என்ன?

பீஜிங்: ‘பஹல்காம் தாக்குதல் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் நிதானத்தை கடைபிடிக்கும் என நாங்கள் நம்புகிறோம்’ என சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறும்போது, “பஹல்காம் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் நிதானத்தை கடைபிடிக்கும் என நாங்கள் நம்புகிறோம். இருநாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் சீனா வரவேற்கிறது” என்று தெரிவித்துள்ளார். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 … Read more

CBSE Board Result 2025: சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு; எந்த தளத்தில் முடிவுகளை பார்க்கலாம்?

CBSE Result 2025: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இடைநிலை மற்றும் முதுநிலைப் பள்ளி தேர்வு முடிவுகளுக்கான எந்த நேரம் வேண்டுமானாலும் வெளியாகலாம்.   

பத்மபூஷன் விருது பெற்ற அஜித்..உடனே அவரது குடும்பம் செய்த செயல்! வைரலாகும் வீடியோ..

Ajith Kumar Padma Bhushan Award 2025 First Photo: பிரபல நடிகர் அஜித் குமார், தனது முதல் பத்ம பூஷன் விருதினை பெற்றிருக்கிறார். இதன் முதல் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மீண்டும் அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜ்… பால்வளத்துறை ஒதுக்கீடு!

Minister Mano Thangaraj: கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏவான மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு பால்வளத்துறை இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது.  

CSK: 2026இல் தோனி விளையாடுவார்… அவர் தான் கேப்டன் – காரணம் இதுதான்!

MS Dhoni: தற்போது 18வது ஐபிஎல் தொடர் (IPL 2025) நடைபெற்று வருகிறது. இதில் 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு சீசன்களை தவிர்த்து மொத்தம் 16 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) விளையாடியிருக்கிறது. நடப்பு சீசனை தவிர்த்தால், 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு வந்துள்ள சிஎஸ்கே 10 முறை இறுதிப்போட்டியில் விளையாடியிருக்கிறது.  இதில் சிஎஸ்கே (CSK) 5 முறை தோல்வியை தழுவியிருந்தாலும், 5 முறை கோப்பையை வென்று அசத்தியிருக்கிறது. … Read more

Padma Awards: `பத்ம பூஷண்' அஜித்; விருது விழாவில் நெகிழ்ந்த ஷாலினி

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு. பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்ம விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்திலிருந்து 19 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்துக்கும், கிரிக்கெட்டர் அஷ்வினுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. பெருமிதத்துடன் நடிகர் அஜித் குமாரின் குடும்பம் இந்நிலையில் இன்று நடிகர் அஜித்குமாருக்கு … Read more

ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் நாட்டில் பெரும் மின் தடை : விமான நிலையம், ரயில்கள், மெட்ரோ சேவைகள், பணப்பரிமாற்றம் பாதிப்பு

ஸ்பெயின், போர்ச்சுகலில் திங்களன்று பரவலான மின் தடை ஏற்பட்டதால், மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். இந்த மின் தடையைத் தொடர்ந்து பிரான்சின் சில பகுதிகள் தற்காலிகமாக மின்சாரத்தை இழந்ததாக பிரெஞ்சு கிரிட் ஆபரேட்டர் RTE தெரிவித்துள்ளது. இந்த மின் தடை காரணமாக மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்டம் நிறுத்தப்பட்டபோது பிரிட்டிஷ் டென்னிஸ் வீரர் ஜேக்கப் ஃபியர்ன்லி மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று பிபிசி தெரிவித்துள்ளது. லிப்சனில், கார்டு … Read more