அரபி கடல் பகுதியில் 2,500 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தது கடற்படை

புதுடெல்லி: அரபி கடல் பகுதியில் 2,500 கிலோ போதைப்பொருளை இந்திய கடற்படை பறிமுதல் செய்தது. இதுகுறித்து இந்திய கடற்படை அதிகாரிகள் நேற்று கூறியதாவது: அரபிக் கடல் பகுதியில் போதைப்பொருளுடன் சில கப்பல்கள் பயணிப்பதாக மார்ச் 31-ம் தேதி எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரபி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஐஎன்எஸ் டர்கஷ் கப்பலில் இருந்த அதிகாரிகள், ஹெலிகாப்டர் மூலம் சந்தேகத்துக்கிடமான சில கப்பல்களின் நடவடிக்கைகளை கண்காணித்தனர். இந்த கண்காணிப்புப் பணியில் கடற்படை கமாண்டோக்களும் … Read more

விரைவில் கோவையில் சீரானகுடிநீர் விநியோகம் : அமைச்சர் கே என் நேரு

சென்னை அமைச்சர் கே என் நேரு கோவையில் விரைவில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்/ இன்றைய தமிழக சட்டசபை கேள்வி நேரத்தின் போது அமைச்சர் கே என் நேரு, “கோவை மாவட்டத்திற்கு 380 எம்எல்டி தண்ணீர் கொடுத்தாலும் குடிநீர் பிரச்சினை உள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக ஒரு சில பகுதிகளுக்கு 3 நாட்களுக்கும், 7 நாட்களுக்கும் ஒரு முறை குடிநீர் வருவதாக கூறி உள்ளார்கள். எனவே, கோவை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் … Read more

RCB vs GT : இயல்புநிலைக்குத் திரும்பியதா RCB? ருத்ரதாண்டவம் ஆடிய பட்லர் – எப்படி வென்றது குஜராத்?

‘பெங்களூரு Vs குஜராத்’ சின்னச்சாமி மைதானத்தில் முதல் ஆட்டத்தை ஆடி முடித்திருக்கிறது பெங்களூரு அணி. ‘உன் ஆளுங்கள பார்த்தா எதிரிக்குதான் பயம். என் ஆளுங்களை பார்த்தா எனக்கே பயம்.’ இந்த டோனில்தான் பெங்களூரு அணிக்கு சின்னச்சாமி மைதானம் இருக்கும். இன்றும் எந்த வித்தியாசமும் இல்லை. என்ன வழக்கம்போல இங்கே பரிதாபமாகத் தோற்காமல், கொஞ்சம் போட்டியளித்து தோற்றிருக்கிறார்கள். RCB vs GT குஜராத் அணியின் கேப்டன் கில் டாஸை வென்றிருந்தார். சேஸ் செய்யப்போவதாக அறிவித்தார். அதிலேயே ரஜத் பட்டிதர் … Read more

புதுச்சேரியில் முதல் முறையாக பேரவைத் தலைவர்கள் மாநாடு – விரைவில் தேதி அறிவிப்பு

புதுச்சேரி:புதுச்சேரியில் பேரவைத் தலைவர்கள் மாநாடு முதல் முறையாக நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. புதுச்சேரியில் பேரவைத் தலைவர்கள் மாநாடு நடத்த புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அனுமதி கோரினார். மேலும், முதல் முறையாக புதுச்சேரியில் பேரவைத் தலைவர்கள் மாநாடு நடத்துவது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்நிலையில், இம்மாநாடு தொடர்பாக விசாரித்தபோது, “மக்களவை சபாநாயகர் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பினார். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என … Read more

உலகத் தலைவர்கள் அனைவரிடமும் பேசக்கூடிய ஒரே தலைவர் பிரதமர் மோடி: சிலி அதிபர் கேப்ரியல் போரிக் புகழாரம்

புதுடெல்லி: அதிபர்கள் ட்ரம்ப், புதின், ஜெலன்ஸ்கி என உலகத் தலைவர்கள் அனைவரிடமும் பேசக்கூடிய ஒரே தலைவர் பிரதமர் மோடி என சிலி அதிபர் கேப்ரியல் போரிக் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா – சிலி இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது. இதை முன்னிட்டு சிலி அதிபர் கேப்ரியல் போரிக் ஃபான்ட் 5 நாள் பயணமாக கடந்த 1-ம் தேதி இந்தியா வந்தார். டெல்லி, ஆக்ரா, மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு அவர் செல்கிறார். டெல்லியில் … Read more

இயக்குநர் மகேந்திரன் நினைவு ஃபிலிம் & மீடியா அகாடமி

நக்கீரர் தமிழ்ச் சங்கம் வழங்கும் இயக்குநர் மகேந்திரன் நினைவு ஃபிலிம் & மீடியா அகாடமி துவக்க விழா! 

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம்  அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 5ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு … Read more

Siraj : '7 சீசன்களாக RCBக்காக ஆடியிருக்கிறேன் இருந்தும்…' – உணர்ச்சிவசப்பட்ட சிராஜ்

‘குஜராத் வெற்றி!’ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. Gujarat Titans குஜராத் சார்பில் பௌலிங்கில் சிராஜ் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பேட்டிங்கில் பட்லர் சிறப்பாக ஆடி 73 ரன்களை எடுத்திருந்தார். சிராஜூக்குதான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ‘உணர்ச்சிவசப்பட்ட சிராஜ்!’ ஆட்டநாயகன் விருதை வாங்கிவிட்டு சிராஜ் பேசுகையில், ‘போட்டிக்கு முன்பாக நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் … Read more

“ஆர்எஸ்எஸ், பாஜக உறவால் மதச்சார்பின்மை சீர்குலைவு!” – மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் மாணிக் சர்கார் சாடல்

மதுரை: “ஆர்எஸ்எஸ் – பாஜகவின் வலுவான உறவால் மதச்சார்பின்மை, கூட்டாட்சி முறை சீர்குலைந்துள்ளது” என்று மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில், அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், திரிபுரா முன்னாள் முதல்வருமான மாணிக் சர்க்கார் குற்றம்சாட்டினார். மதுரையில் நடக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டில் திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் பேசியது: “டொனால்டு ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியம் மேலும் உறுதியானதாக மாறியுள்ளது. இந்த நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் … Read more

“பிற சமூகத்தினரின் சொத்துகளையும் குறிவைக்கலாம்!” – வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில் காங். சாடல்

புதுடெல்லி: “அரசு இன்று ஒரு சமூகத்தின் சொத்துகளைக் குறிவைத்துள்ளது. நாளை அது பிறரையும் குறிவைக்கலாம்” என்று வக்பு சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் விமர்சித்தார். மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு புதன்கிழமை மக்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தார். அந்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மக்களவைத் துணைத் தலைவர் கவுரவ் கோகாய் பங்கேற்றுப் பேசினார். “அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் வக்பு சட்டத் திருத்த … Read more