இறந்த தந்தையின் உடலை அலமாரியில் 2 வருடங்களாக மறைத்து வைத்த மகன்.. அதிர்ந்த போலீசார்

டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த 56 வயதான நோபுஹிகோ சுசுகி என்பவர், சீன உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக இவர் உணவகத்தை திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டு அலமாரியில், எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், வேலை … Read more

“தொகுதி ஒதுக்கீடு குறித்து இபிஎஸ், அமித்ஷா பேசிக்கொள்வார்கள்” – நயினார் நாகேந்திரன் 

திண்டுக்கல்: தொகுதி ஒதுக்கீடு குறித்து இபிஎஸ், அமித்ஷா இருவரும் பேசிக்கொள்வார்கள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மக்களுக்கு ஆதரவான திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு செய்யும். ஹைட்ரோ கார்பன் அனுமதி கொடுத்தது யார் என்று உங்களுக்கு தெரியும். அவர்களுடைய கூட்டணி ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட ஒன்று. எல்லோருக்கும் எல்லாம் கொடுப்பது தவறில்லை. ஆனால் அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும். சொல்வது முக்கியமில்லை … Read more

டெல்லியில் வசிக்கும் 5,000 பாகிஸ்தானியர்கள் – காவல்துறைக்கு பட்டியல் அளித்த உளவுத்துறை

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் சொந்தநாடு திரும்புவதை உறுதி செய்வதற்காக 5,000 பாகிஸ்தானியர்களின் பெயர் பட்டியலை டெல்லி போலீஸாரிடம் உளவுத்துறை (ஐபி) ஒப்படைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை மத்திய அரசு ரத்து செய்தது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்ப உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகம் (எஃப்ஆர்ஆர்ஒ), பாகிஸ்தானியர்களின் பெயர் பட்டியலை டெல்லி சிறப்பு பிரிவு … Read more

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி ராஜினாமா…

தமிழக அமைச்சரவையிலிருந்து அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கீடு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொது 'வைபை' பயன்படுத்தும்போது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் – மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி, ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் மற்றும் பிற முக்கிய நடவடிக்கைகளுக்கு பொது ‘வைபை’ நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மத்திய அரசின் இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- விமான நிலையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வைபை வசதி வழங்கப்படுகிறது. ஆனால் அது உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதி தகவல்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். இந்த பொது ‘வைபை’ நெட்வொர்க்குகளில் பல முறையாக பாதுகாக்கப்படவில்லை. இதனால் அவை ஹேக்கர்கள் மற்றும் … Read more

ஐபிஎல்: டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் போரல், பாப் டு பிளஸ்சிஸ் இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் முறையே … Read more

54 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்

பெஷாவர், அண்டை நாடான தலீபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற 54 “பயங்கரவாதிகளை” சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வசிரிஸ்தான் அருகே நடந்தது. அங்கு அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் எல்லைக்குள் நேற்று இரவு ஊடுருவினர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், 54 … Read more

IPL 2025: `அதிரடி S.K.Y ' சூர்யகுமார் யாதவ் படைத்த முக்கிய சாதனை

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், தனது ஐபிஎல் கேரியரில் 4000 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார். இன்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் 54 ரன்கள் விளாசியதன் மூலம் இந்த மைல் கல் ரன்களை எட்டியுள்ளார். SKY இது மிகப் பெரிய ரன் சேர்ப்பு மட்டுமல்ல, சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் வரலாற்றில் விரைவாக 4000 ரன்கள் சேர்த்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். முன்னதாக … Read more

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா: யார் யாருக்கு என்ன பொறுப்பு?

சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று ராஜினாமா செய்தனர். முதல்வரின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அவர்களிடம் இருந்த துறைகள், அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, … Read more

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்ட ‘SACHET’ மொபைல் செயலி: பயன் என்ன?

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 121-வது அத்தியாத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது ‘SACHET’ என்ற மொபைல் செயலி குறித்து குறிப்பிட்டிருந்தார். “நண்பர்களே, இப்போது நாம் பேரிடர் மேலாண்மை பற்றிப் பேசி வந்தோம். எந்த ஒரு இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ளவும் மிகவும் முக்கியமானது எது என்றால் அது உங்களுடைய எச்சரிக்கையுணர்வு, விழிப்போடு இருத்தல். இந்த எச்சரிக்கையுணர்வுக்கு உதவிகரமாக, உங்களுடைய செல்பேசியில் ஒரு விசேஷமான செயலி உங்களுக்கு ஒத்துழைப்பாக இருக்கும். … Read more