முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

சென்னை:  மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயாா் தயாளு அம்மாள் (வயது 92) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.  இது பரபரப்பைஏற்படுத்தி உள்ளது. 92வயதாகும் தயாளு அம்மள் வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வுபெற்று வந்த நிலையில்,  கோபாலபுரம் இல்லத்தில் இன்று  அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு  ஏற்பட்டது. இதன் காரணமாக,  சென்னையில் உள்ள தனியார் ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.  அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் தொடா் … Read more

Bombay High Court: `நாய் மாஃபியா' – நீதி மன்றத்தை அவமதித்த பெண்; 20,000 அபராதம் விதித்து நடவடிக்கை

கடந்த ஜனவரி மாதம், மும்பையில் தெருநாய்களுக்கு உணவளிப்பதனால், தான் வசிக்கும் குடியிருப்பின் நிர்வாகக் குழு தனக்கு துன்பம் ஏற்படுத்துவதாக லீலா வர்மா என்ற பெண்மணி உயர் நீதிமன்றத்தில் குடியிருப்பு சங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஜனவரி 21 அன்று, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தெரு நாய்களுக்கு உணவு வழங்குதல் அல்லது அதற்கென நியமிக்கப்பட்ட பகுதிகள் குறித்து குடியிருப்பு சங்கத்திற்கு ஏதேனும் குறைகள் இருந்தால், குடியிருப்பாளர்களைத் துன்புறுத்துவதற்குப் பதிலாக நகராட்சியை அணுக வேண்டும் என்று கூறியது. Street Dogs … Read more

பஹல்காம் தாக்குதல் 140 கோடி இந்தியர்கள் மீது தொடுக்கப்பட்ட யுத்தம்: கே.கிருஷ்ணசாமி

சென்னை: பஹல்காம் தாக்குதல் 140 கோடி இந்திய மக்கள் மீது தொடுக்கப்பட்ட யுத்தம் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே. கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஏறக்குறைய 26 பேர் உயிரிழந்து இன்றோடு ஐந்து தினங்கள் ஆகிவிட்டன. இதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கருத இயலாது. 140 கோடி இந்திய மக்கள் மீது … Read more

''பாஜக, பாமக இருக்கும் அணியில் விசிக இடம்பெறாது'': தொல். திருமாவளவன் திட்டவட்டம்

புதுச்சேரி: பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் விசிக இடம்பெறாது என்று அதன் தலைவர் தொல் திருமாளவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி திருபுவனையில் புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கரின் முழு உருவ சிலை திறப்பு நிகழ்வு நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சிலையை திறந்து வைத்து கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியோருக்கு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழகத்தின் வேங்கை வயல், கள்ளக்குறிச்சி, மேல்பாதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக திமுக அரசின் … Read more

தாலிகட்ட தயாராக இருந்த மாப்பிள்ளை! ‘இதை’ கேட்டவுடன் திடீரென நின்ற திருமணம்..

Groom Stops Wedding After Hearing Channa Mereya : ஒரு கல்யாண மாப்பிள்ளை, தனது திருமணத்தை தானே நிறுத்தியிருக்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

பிரபல நடிகர் கலைப்புலி ஜி. சேகரன் நினைவஞ்சலி கூட்டம்!

Actor Kalaipuli G Sekaran Memorial : சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பாக சங்க செயலாளர் கலைப்புலி ஜி. சேகரனின் நினைவஞ்சலி நடைப்பெற்றது. 

ஆல் அவுட்டான லக்னோ.. பாயிண்ட்ஸ் டேபிளில் டாப்புக்கு சென்ற மும்பை அணி!

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 27) இத்தொடரின் 45வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை … Read more

இனி பாகிஸ்தானுக்கு ஒரு நுலி நீர் கூட செல்லாது : மத்திய அமைச்சர்

டெல்லி இனி பாகிஸ்தானுக்கு ஒரு துஇ நீர் கூட செல்லாது என மத்திய அமைச்சர் சி ஆர் பாட்டில் தெரிவித்துள்ளார்/ சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் வரும் நதிகளில் கட்டப்பட்ட அணைகளின் நீர் இருப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா-பாகிஸ்தான் இடையே சிந்து நதிப் படுகையில் உள்ள 6 நதிகளின் நீர் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.ய நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இந்திய … Read more

Homebound: முதல் முதலாக இந்திய திரைப்படத்தில் இணையும் Martin Scorsese!

ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸி, இந்திய சினிமா இயக்குநர் நீரஜ் கைவான் இயக்கிய ஹோம்பவுண்ட் திரைப்பட்டத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பங்களித்துள்ளார். நீரஜ் கைவானின் இரண்டாவது திரைப்படமான ஹோம்பவுண்ட், முதன்முதலாக அடுத்தமாதம் நடைபெறவிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. Cannes இயக்குநர் கரண் ஜோகர், தனது இஸ்டாகிராமில் ஹோம்பவுண்ட் திரைப்பட இயக்குநரைப் பாராட்டி எழுதியதுடன், மார்ட்டின் ஸ்கார்செஸியும் அவரைப் பாராட்டியதாகவும், ‘படத்திற்கு உதவி செய்ய தயார்’ எனக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். “எனக்கு மசான் பிடித்திருந்தது” … Read more

வெயில் தாக்கம் எதிரொலி – புதுச்சேரி, காரைக்கால் அரசு பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை

புதுச்சேரி: வெயில் தாக்கம் அதிகரிப்பால் புதுச்சேரி, காரைக்கால் உட்பட நான்கு பிராந்தியங்களிலும் அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறையை கல்வியமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுவையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. சிபிஎஸ்இ விதிப்படி புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு அடுத்த கல்வியாண்டு நடந்து வருகிறது. ஏப்.1ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு ஏப்.30ம் தேதி வரை தொடர்ந்து … Read more