காலக்கெடு நிறைவு: கண்ணீருடன் விடைபெற்று அட்டாரி வழியாக நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்!

புதுடெல்லி: இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் அட்டாரி வழியாக பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்பி வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.22) பஹல்காமில் நடந்த கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியா, பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை ரத்து செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்தது. அதன்படி சார்க் விசாக்கள் ஏப்.26ம் தேதி நிறைவடைந்தது. மற்ற விசாக்கள் இன்று (ஏப்.27) நிறைவடைகிறது. மருத்துவ விசாக்கள் மட்டும் ஏப்.29 ம் தேதி வரை … Read more

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்.. அரபிக்கடலில் ஏவுகணை சோதனை! வீடியோ

கடல்வழி தாக்குதலை எதிர்கொள்ள இந்திய கடற்படை தயாராக இருப்பதை மேற்கொண்ட ஒத்திகை மூலம் வெளிக்காட்டி உள்ளது.

விஜய்யை பார்க்க மரக்கிளையில் தொங்கிய நபர்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? வைரல் வீடியோ..

Viral Video Of Fan Falling On Vijay Vehicle At Coimbatore : விஜய், கோவைக்கு பூத் கமிட்டி மாநாட்டிற்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில், அவர் ரோட் ஷோ செல்லும் போது அவரை பார்க்க வந்த ஒரு ரசிகர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

சஞ்சீவ் கொயங்கா நீங்கள் நினைப்பது போல் கிடையாது – நிக்கோலஸ் பூரன் ஆதரவு!

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முடிவில் லக்னோ அணி மோசமாக விளையாடும் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் முடிக்கும் என கூறப்பட்ட நிலையில், அந்த அணி 9 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருந்து வருகிறது. பிளே ஆஃப் போட்டியில் அந்த அணியும் உள்ளது.  அதேபோல் லக்னோ அணி தோல்வி அடையும் போதெல்லாம் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு … Read more

SACHET App நிச்சயம் பயன்படுத்துங்க… மன் கீ பாத் நிகழ்ச்சியில் வலியுறுத்திய பிரதமர்

மன் கி பாத் நிகழ்ச்சியின் 121வது அத்தியாயத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கும் உலக மக்களுக்கும் உரையாற்றினார். அப்போது, ​​பிரதமர் மோடி ஒரு செயலியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்த செயலியின் பெயர் SACHET ஆப். இந்த செயலி எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம். சாச்செட் ஆப் என்றால் என்ன? சாச்செட் செயலி மூலம் எந்தவொரு பேரழிவு குறித்தும் முன்கூட்டியே எச்சரிக்கை பெறலாம். இது இந்தியாவில் உள்ள முதல் மற்றும் ஒரே தேசிய … Read more

நாளை முதல் ;புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை  விடுமுறை

புதுச்சேரி நாளை முதல் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. புதுச்சேரி மாநில அமைச்ச்சர் நமச்சிவாயம், ”அதிகரித்து வரும் கடும் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் நாளை (28.04.2025) முதல் வரும் ஜூன் மாதம் (01.06.2025) ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் (02.6.2025) தேதி முதல் வழக்கம் போல் … Read more

“இந்தியா முன்னறிவிப்பு இல்லாமல் ஜீலம் ஆற்றில் நீரை திறந்துவிட்டுள்ளது.." -பாகிஸ்தான் குற்றச்சாட்டு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 இந்திய சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துவருகிறது. பிரதமர் மோடி இதற்கிடையே சிந்து நதி நீரை தடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக இந்தியா தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் ஜீலம் ஆற்றில் இந்தியா திடீரென தண்ணீரை வெளியேற்றியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது. ஜீலம் நதியில் திடீரென அதிகரித்த நீரோட்டம் காரணமாக முஷாபர்பாத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் … Read more

சென்னையில் சாலை விபத்து உயிர் இழப்பு 14% குறைந்தது – மாநகர காவல் ஆணையர் அருண் தகவல்

சென்னை: போக்குவரத்து போலீஸாரின் தொடர் நடவடிக்கைகளால் சென்னையில் விபத்து உயிரிழப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல் ஆணையர் அருண் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘விபத்து, விபத்து உயிரிழப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதுமட்டும் அல்லாமல் நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து, விபத்துக்களைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து போக்குவரத்து போலீஸாருக்கு முறையான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகள், … Read more

நாட்டின் நலன்களை காக்க தயார் நிலையில் இருக்கிறோம்: இந்திய கடற்படை

புதுடெல்லி: இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் சமீபத்தில் வெற்றிகரமாக பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடற்படை செய்தித்தொடர்பாளர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய கடற்படை கப்பல்கள் நீண்ட தூர தாக்குதல், தாக்குதல்களுக்கான தளங்கள், அமைப்புகள் மற்றும் துருப்புகளுக்கான தயார் நிலையை மறுபரிசீலனை செய்து நிரூபிக்கும் வகையில், பல்வேறு சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த வகையிலும் நாட்டின் கடல்சார் நலன்களை பாதுகாப்பதில் இந்திய கடற்படை … Read more

இந்தியா உடனான வர்த்தக முறிவால் பாகிஸ்தானில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு அபாயம்!

இஸ்லாமாபாத்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு எடுத்துள்ளது. அதில் ஒன்று இந்தியா உடனான அனைத்து விதமான வர்த்தகத்தையும் நிறுத்துவது தொடர்பான அறிவிப்பு. இதனால் அந்த நாட்டில் மருந்து விநியோக சங்கிலி பெரிய அளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. ஏனெனில், … Read more