மும்பை அணியில் இணையும் பென் ஸ்டோக்ஸ்? பரபரக்கும் ஐபிஎல் களம்

Ben Stokes, Mumbai Indians : ஐபிஎல் 2025 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல்பாதி ஐபிஎல் நிறைவடைந்து இரண்டாம் பாதி ஐபிஎல் தொடங்கிவிட்டது. இனி வரும் ஒவ்வொரு போட்டியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளை தீர்மானிக்கும். ஒரு போட்டியில் தோற்றால் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும். அந்த அணிகளால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது. அதேநேரத்தில் … Read more

காஷ்மீர் பயங்கரவாத தாகுதல் குறித்து என் ஐ ஏ விசாரணை தொடக்கம்

டெல்லி காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து என் ஐ ஏ தனது விசாரணையை தொடங்கி உள்ளது. கடந்த 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் … Read more

“நீதித்துறை சரியாக இருந்திருந்தால் இவ்வளவு பிரச்னை இருக்காது..'' – விகடன் டாப் 10 மனிதர் லோகநாதன்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை (ஏப்ரல் 26), ஆனந்த விகடனின் `நம்பிக்கை விருதுகள்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அதிகார அத்துமீறல்களை, முறைகேடுகளை, கேள்விக்குள்ளாக்கி அம்பலப்படுத்தும் சமரசமற்ற சட்டப் போராளி.. தகவல் உரிமைச் சட்டத்தை ஆயுதமாகக்கொண்டு கடந்த 25 ஆண்டுகளில் காவல்துறை தொடங்கி உள்ளாட்சி வரைக்கும் பல ஊழல்களை வெளிக்கொணர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.ஐ மனுக்களைப் போட்டு அரசுத்துறைகளை அதிரவைத்த ‘வழக்கறிஞர் லோகநாதன்’ அவர்களுக்கு ‘விட்டுக்கொடுக்காத சட்டப் போராளி’ என விகடன் டாப் 10 மனிதர்கள் … Read more

கோவையில் ஜல்லிக்கட்டு – தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி 

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம், தமிழர் பண்பாட்டு ஜல்லிகட்டு பேரவை, கோவை இணைந்து நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா கோவை செட்டிபாளையம் எல் அண்ட் டி புறவழிச்சாலை அருகே இன்று தொடங்கியது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போட்டியை தொடங்கி வைத்தார். தமிழர் பண்பாட்டு ஜல்லிகட்டு பேரவை தலைவர் தளபதி முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், திமுக, மாநகர் … Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு – அரசு உத்தரவின் பேரில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) எடுத்துக்கொள்கிறது. இதுகுறித்து என்ஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.22) சுற்றுலாப்பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் வழக்கை தேசிய புலனாய்வு முகமை முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நடைமுறையைத் தொடங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்ள்ளது. ஏற்கனவே பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தள்ளியிருக்கும் பைரசன் … Read more

''இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன'' – பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு

லாகூர்: கோரி, ஷாஹீன், கஸ்னவி ஏவுகணைகள் மற்றும் 130 அணு ஆயுதங்கள் இந்தியாவை தாக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியுள்ளார். அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்காக மட்டுமே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 22-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் … Read more

ரியல்மி 14T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் – விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்தியாவில் ரியல்மி 14T 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இது மிட்-செக்மென்ட் ரேஞ்ச் விலை பிரிவு போனாக சந்தையில் வெளிவந்துள்ளது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் … Read more

விஜய் டிவியில் இனி ‘இந்த’ ஹிட் ஷோ கிடையாது?! ரசிகர்கள் வருத்தம்..

Vijay TV Hit Shows Are Being Stopped : விஜய் தொலைக்காட்சி இப்போது வேறு ஒரு நிறுவனத்திடம் சென்று விட்டதாகவும், இதனால் சில நிகழ்ச்சிகள் இனி ஒளிபரப்பாகாது என்றும் கூறப்படுகிறது.  

மழையால் ரத்தான கேகேஆர் – பஞ்சாப் போட்டி! சென்னை அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025 சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களின் கடைசி வாய்ப்பாக இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோட்டையாக இருந்தது நிலையில், இந்த ஆண்டு மற்ற அணிகள் எளிதாக வெற்றி பெற்று சென்று உள்ளனர். … Read more

Pahalgam Attack: “பாகிஸ்தானியர்களும் நம்மைப் போல அமைதியை விரும்புகிறார்கள்'' – நடிகர் விஜய் ஆண்டனி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா உள்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டுகள் எழாதபோதும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்துவது, இங்கிருக்கும் பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற உத்தரவு உள்ளிட்ட நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் மீது மோடி அரசு எடுத்திருக்கிறது. Pahalgam Attack அதேபோல, … Read more