இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் “நிரந்தர போர்நிறுத்தத்தை” ஏற்படுத்துவதில் சீனா ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் என்று திங்களன்று சீனா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் டார், சீன வெளியுறவுத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று பெய்ஜிங் சென்றுள்ள நிலையில் சீனா இவ்வாறு அறிவித்துள்ளது. ‘ஆபரேஷன் சிந்துர்’ மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்த பிறகு, பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல் […]
