இந்த 2 வீரர்கள் விளையாட மாட்டார்கள்? அப்போ மும்பையின் கதை அவ்வளவுதானா?

Mumbai indians players injured: ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று இன்று (மே 30) நியூ சண்டிகரில் நடைபெறுகிறது. இப்போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டரில் விளையாடுவதால், ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

இப்போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதும். இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் தீபக் சாஹர் மற்றும் திலக் வர்மா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் எலிமினேட்டர் சுற்றில் விளையாட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. 

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் வில் ஜாக்ஸ், கார்பன் போஸ் மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் தங்களது சொந்த நாடுக்கு திரும்பி உள்ளனர். இச்சூழலில், தீபக் சாஹர் மற்றும் திலக் வர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை தருகிறது. தீபக் சாஹர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான சமீபத்திய போட்டியின் போது காயம் அடைந்தார். 

அதேபோட்டியில் திலக் வர்மா பீல்டிங் செய்யும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், அண்மையில் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் தீபக் சாஹர் மற்றும் திலக் வர்மா கால்களில் பேண்ட் எய்ட் போடப்பட்டிருப்பது தெரிகிறது. அதை வைத்து பார்க்கையில், அவர்களுக்கு இன்னும் காயம் சரியாகவில்லை என தெரிகிறது. எனவே அவர்கள் எலிமினேட்டரில் விளையாடுவது சந்தேகதம் தான் என கூறப்படுகிறது. 

மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பாண்டு தொடரில் தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கீழே இருந்தது. ஆனால் அதன் பிறகு தொடர் வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மும்பை அணி 6வது கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் எலிமினேட்டர், குவாலிஃபையர் 2 மற்றும் இறுதி போட்டி என மூன்று வெற்றிகளை பெற வேண்டும். இச்சூழலில் அந்த அணியின் வீரர்கள் காயமடைந்துள்ளது பிண்ணடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

மேலும் படிங்க: சுயாஷ், ஃபில் சால்ட் அசத்தல்.. பஞ்சாப்பை எளிதாக வீழ்த்தி பைனலுக்கு முன்னேறிய ஆர்சிபி!

மேலும் படிங்க: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுகளில் மிக குறைவான ஸ்கோரை அடித்த அணிகள் எவை? பஞ்சாப் அணிக்கு எந்த இடம்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.