Thug Life: "எனக்கு 'நாயகன்' படத்தைவிட 'தக் லைஃப்' பெரியதாக இருக்கவேண்டும்!" – கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அப்படக்குழுவினர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றி வருகின்றனர். பல இடங்களில் ‘தக் லைஃப்’ குழுவினர் பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. Kamal – Thug Life அங்கு கமல் பேசுகையில், “இந்தப் படத்திற்கு அற்புதமான குழுவினர் கிடைத்திருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு இப்படியான ப்ரோமோஷன் பணிகள் தேவையே இல்லை. எனக்கு இது போன்றதொரு திரைப்படம் எப்போது கிடைக்கும் எனத் தெரியவில்லை. நான் … Read more

தமிழகத்தில் 66 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இந்த வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.  கடந்த 2022 ஆம் ஆண்டுவரை இதன் தாக்கம் அதிகமாக இருந்து அதன்பிறகு உலகம் சகஜ நிலைக்கு திரும்பியது. பிறகு கொரோனா பாதிப்பு பெரிய அளவில் காணப்படவில்லை. அதேபோல் உயிரிழப்புகளும் இல்லாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி … Read more

திருமணமான பெண்ணுடன் தகாத உறவில் இருந்த 17 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

புதுடெல்லி, டெல்லியில் உள்ள குலாபி நகர் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் தாக்கூர்(வயது 25). இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், சுதாவின் தோழி ஒருவர், டெல்லிக்கு வேலை தேடி வந்த 17 வயது சிறுவனை முகேஷ் தாக்கூருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த சிறுவனை முகேஷ் தாக்கூர் தனக்கு சொந்தமான வீட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு தங்கவைத்துள்ளார். இந்த நிலையில், கடந்த 19-ந்தேதி இரவு முகேஷ் தாக்கூரும், 17 வயது சிறுவனும் … Read more

ஐரோப்பிய லீக் கால்பந்து: 17 ஆண்டுகளுக்குப்பின் கோப்பையை கைப்பற்றிய டோட்டன்ஹாம்

மாட்ரிட், ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையேயான யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப்போட்டி ஸ்பெயினில் உள்ள சென் மாமிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், மான்செஸ்டர் யுனைடட் – டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் 1-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் வெற்றி பெற்றது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பா லீக் கோப்பையை டோட்டன்ஹாம் அணி கைப்பற்றியது. EUROPA LEAGUE … Read more

அணு ஆயுத ஏவுகணை ஏவி அமெரிக்கா சோதனை

வாஷிங்டன், அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அமெரிக்கா சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணை ஏவி சோதனை மேற்கொண்டு உள்ளது. அணு சக்தி திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட்மேன் 111 என்ற ஏவுகணையை அமெரிக்கா ஏவியது. கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி படை தளத்தில் இருந்து மார்ஷல் தீவுக்கு இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. மணிக்கு 15 ஆயிரம் … Read more

“தவெக இன்னொரு பாஜக” – திமுகவில் இணைந்த வைஷ்ணவி விமர்சனம்

இளைஞர்களுக்கான அரசியலை தவெக ஊக்குவிக்கவில்லை. இன்று நான் திமுகவில் இணைந்துள்ளேன். தவெக என்பது இன்னொரு பாஜக என்பதே உண்மை என்று திமுகவில் இணைந்த முன்னாள் தவெக நிர்வாகி வைஷ்ணவி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைஷ்ணவி கூறியதாவது: “தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த ஒரு வருடமாக இணைந்து பயணம் செய்தேன். தவெகவை பொறுத்தவரை இளைஞர்களுக்கான அரசியலை முன்னெடுப்பார்கள் என்றுதான் என்னைப் போன்ற பலரும் அக்கட்சியில் இணைந்தோம். ஆனால் எங்களுக்கு அதிருப்தியே மிச்சம். இளைஞர்களுக்கான அரசியலை அவர்கள் … Read more

தூதுக்குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் மத்திய அரசு – சசி தரூரை தொடர்ந்து ஆனந்த் சர்மாவும் ஆதரவு

புதுடெல்லி: பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்கான ராஜதந்திர முயற்சியாக மத்திய அரசின் வெளிநாட்டுத் தூதுக்குழுக்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா வரவேற்றுள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடந்த ஆபரேஷன் சிந்தூருக்கு உடனடி ஆதரவு அளித்திருந்த காங்கிரஸ் கட்சி, மத்திய அரசின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுக்களை திசைதிருப்பும் முயற்சி என்று விமர்சித்துவரும் நிலையில், மத்திய அரசின் இந்த முயற்சியை சசி தரூருக்கு பின்பு பாராட்டியிருக்கும் இரண்டாவது … Read more

Kalam: `அப்துல் கலாமின் கதையை திரைக்குக் கொண்டுவருவது ஒரு கலைச் சவால்"- படத்தின் இயக்குநர் ஓம் ராவத்

அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் தனுஷ். படத்திற்கு ‘கலாம்’ என தலைப்பும் வைத்திருக்கிறார்கள். இந்தியாவின் 11-வது ஜனாதிபதியான அப்துல் கலாம் வாழ்க்கையின் முக்கியமான பக்கங்களையும் இந்த பயோபிக் புரட்டவிருக்கிறது. இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்றைய தினம் வெளியானது. Abdul Kalam Biopic இப்படத்தின் அறிவிப்பை நேற்றைய தினம் கான் திரைப்பட விழாவில் வைத்து வெளியிட்டிருக்கிறார்கள். ‘நீர்ஜா’, ‘மைதான்’ ஆகிய பயோபிக் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய சைவின் குவாட்ராஸ் இந்த பயோபிக் படத்தின் திரைக்கதையையும் … Read more

டிரம்ப் போரை நிறுத்தியதாக  கூறியதை மோடி ஏன் மறுக்கவில்லை : காங்கிரஸ்

டெல்லி இந்திய பாக் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை பிரதமர் மோடிஏன் மறுக்கவில்லை என காங்கிரஸ் வினா எழுப்பியுள்ளது. தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடனான சந்திப்பின் போது ஓவல் அலுவலகத்தில் பேசிய ட்ரம்ப், “இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டையை நாங்கள்தான் தீர்த்து வைத்தோம். வர்த்தகம் மூலம் நான் தான் அதனை தீர்த்து வைத்தேன். பாகிஸ்தானிலும் சிறந்த மனிதர்கள், நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும் நல்ல நண்பர்கள் மற்றும் மனிதர்கள் இருக்கிறார்கள்” என தெரிவித்தார். … Read more