User ஹேப்பி அண்ணாச்சி! வழக்கறிஞராக மாறிய ChatGPT: ஒரே லெட்டரில் ரூ.2 லட்சம் ரீஃபண்ட்

ChatGPT: சமீப காலங்களில் தொழில்நுட்பம் கற்பனைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன் ஏராளமான மேம்படுகளில் சமீபகால மேம்பாடான ChatGPT, மனிதர்களுக்கு பல வகைகளில் உதவி வருகின்றது. நமது அன்றாட பணிகள் முதல் சிக்கலான அலுவலக மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் வரை, அனைத்திலும் இதற்கான தீர்வு உள்ளது. இதன் மூலம் உதவி பெற்றவர்கள் ஏராளம். சமீபத்தில் சேட்ஜிபிடி மூலம் பெற்ற உதவியை பற்றியும், அதில் தனக்கு கிடைத்த அனுபவத்தை பற்றியும் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதை இங்கே காணலாம். ஒரு … Read more

மீண்டும் தமிழக எல்லைக்கு வந்த கிருஷ்ணா நதி நீர்

சென்னை தமிழக எல்லைக்கு 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் கிருஷ்ணா நதி நீர் வந்துள்ளது. கடந்த 5 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு இந்த தண்ணீர் தமிழக எல்லைக்கு 3 அல்லது 4 நாட்களில் வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திர பகுதியில் சீரமைக்கப்பட்ட கால்வாயில் தண்ணீர் அதிகளவு வந்தால் மீண்டும் கால்வாய் சேதம் அடையும் என்பதால் 500 … Read more

கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்; எந்த சான்றிதழ் படிப்பைத் தேர்வுசெய்து படிக்கலாம்?

கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பைப் பெருக்கிக்கொள்ள சில வழிகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது சான்றிதழ் படிப்புகள். தங்களின் பிரதான டிகிரியுடன் சான்றிதழ் படிப்பு ஒன்றையும் சேர்த்து படித்தால், எளிதில் நல்ல வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மாணவர்களுக்கு பயனளிக்கக்கூடிய சான்றிதழ் படிப்புகளை பற்றி அறிந்துகொள்ள கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தியைத் தொடர்புகொண்டு பேசினோம். சான்றிதழ் படிப்புகள் குறித்து பேசிய அவர், ” ‘கலை & அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு பைனான்சியல் டெக்னாலஜி சார்ந்து நிறைய சான்றிதழ் … Read more

கீழடி அறிக்கையை திருப்பியனுப்பிய மத்திய அரசு: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

சென்னை: கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என ஒன்றிய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ கீழடி எனும் வரலாற்றுத் தொல் நகரம் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் ஒன்றிய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார். ஆனால் ஒன்றிய தொல்லியல் துறை அந்த … Read more

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

புதுடெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ரூ.1000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் சென்னை, விழுப்புரம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் டாஸ்மாக் பொது மேலாளர் (மொத்த விற்பனை மற்றும் நிர்வாகம்) சங்கீதா மற்றும் துணை பொது மேளாளர் (விற்பனை மற்றும் கொள்முதல்) ஜோதி சங்கர் ஆகியோரை அழைத்து … Read more

இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றம்: பாகிஸ்தான் பதில் நடவடிக்கை

இஸ்லாமாபாத்: இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரியை இந்தியா வெளியேற்றியதை அடுத்து, தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், தனது அதிகாரப்பூர்வ அந்தஸ்துக்கு முரணான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அவரை 24 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது. உளவு பார்த்ததன் அடிப்படையிலேயே அவர் வெளியேற்றப்பட்டதாகவும், கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது நடவடிக்கை … Read more

ரவி மோகனுக்கு ஆர்த்தி போட்ட கண்டீஷன்! விவாகரத்து கொடுக்க ‘இதை’ தரணுமாம்..

Aarti Ravi Asked 40 Lakhs Alimony : நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கு, தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில், நேற்றைய விசாரணையில் ஆர்த்தி ரூ.40 லட்சத்தை ஜீவனாம்சமாக கேட்டிருக்கிறார்.  

சென்னை அரசு கல்லூரிகளில் படிக்க மாணவர்களுக்கு விருப்பமா? உங்களுக்கான முக்கிய அப்டேட்

Government Colleges Admission Tamilnadu : சென்னையில் உள்ள பிரபல அரசு கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Soori: 'யாரும் முகம் சுளிக்கும் வகையில் நடந்துக்காதீங்க…' – ரசிகர்கள் குறித்து சூரி

‘விலங்கு’ வெப் சீரிஸ் இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மாமன்’. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருக்கிறார். தவிர ராஜ்கிரண், ஸ்வாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  மே 16 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது. படத்தின் வரவேற்பு குறித்து தொடர்ந்து சூரி செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். ‘மாமன்’ படம் இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சூரி, “எனக்கு நேரம் கிடைக்கும்போது கதைகளை எழுதி வருகிறேன். சினிமா … Read more

கோவையில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா – விழுப்புரத்தில் 110 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!

சென்னை: விழுப்புரத்தில் 110 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர்,  கோவையில் ரூ.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் போதைபொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக,  விழுப்புரம் மாவட்டத்தில் போதை புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றனர். இந்த நிலையில், காவல்துறையினர் குழுவினர் , விழுப்புரம் அருகே உள்ள  … Read more