“சிவில் நீதிபதி தேர்வு எழுத 3 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் வேண்டும்'' – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

நீதிபதிக்கான தேர்வுகள் எழுத மூன்றாண்டு வழக்கறிஞர் அனுபவம் கட்டாயம் தேவை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. “2002 ஆம் ஆண்டு உத்தரவுக்குப் பிறகு, புதிய சட்டப் பட்டதாரிகளை எந்த நடைமுறை அனுபவமும் இல்லாமல் நீதித்துறை சேவையில் சேர அனுமதித்ததால், பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது” என இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் குறிப்பிட்டுள்ளார். Court- Representational Image இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதிகள் ஏ.ஜி.மாசிஹ், கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, … Read more

விவாகரத்து வழக்கு: நடிகர் ரவி மோகன் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தரக் கோரி ஆர்த்தி புதிய மனு

சென்னை: விவகாரத்து கோரிய வழக்கில், நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நேரில் ஆஜராகினர். ரவி மோகன் விவகாரத்துக் கோரியும், ஆர்த்தி மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டும் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்தனர். தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகர் ரவி மோகன். இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து … Read more

ரூ.2,000 கோடி கல்வி நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

புதுடெல்லி: சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் கல்வி நிதியில் ஆண்டுதோறும் ரூ.2000 கோடிக்கும் அதிகமான பங்கை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில், “பிஎம் ஸ்ரீ( PM SHRI) திட்டத்துக்கான நிதியை தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கவில்லை. தேசியக் கல்விக் கொள்கையை(NEP-2020) ஏற்றால் மட்டுமே இந்த நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. தேசியக் கல்விக் கொள்கை மும்மொழி திட்டத்தைக் … Read more

உலகின் காஸ்ட்லியான 'மியாசாகி' மாம்பழம்… ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆவீங்க!

World Costliest Mango: உலகின் மிக விலை உயர்ந்த வகை, மியாசாகி மாம்பழம் தற்போது பீகாரில் விளைவிக்கப்படுகிறது. இந்த மாம்பம் ஒரு கிலோ எவ்வளவு ரூபாய்க்கு விற்பகப்படுகிறது என்பதை இங்கு பார்க்கலாம். 

உண்மையை உடைத்த துளசி.. லட்சுமியின் கோரிக்கையில் குற்ற உணச்சியில் தவிக்கும் வெற்றி: கெட்டிமேளம்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் லட்சுமி துளசி கழுத்தில் தாலி இருப்பதை பார்த்து அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

தமிழ் சினிமாவை ஸ்டாலின் குடும்பம் மிரட்டி வருகிறது – அதிமுக முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு!

சிலரின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு வீழ்ச்சி அடைய வேண்டுமா? சிலரின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு வீழ்ச்சி அடைந்து வருவதை நாம் தடுக்க வேண்டாமா? மக்களே சிந்திக்க வேண்டும். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு.

Samsung Galaxy S24 5G விலையில் அதிரடி வீழ்ச்சி: பிளிப்கார்ட்டில் வாங்கலாம்

Samsung Galaxy S24 5G Offer On Flipkart: சாம்சங் நிறுவனத்தின் போன்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆப்பிள் போனுக்கு ஈடாக இதன் விற்பனை நடந்து வருகிறது. அந்தவகையில் தற்போது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 5ஜி (Samsung Galaxy S24 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மிகவும் குறைந்த எடை கொண்டது. மேலும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. … Read more

ரூ.176.93 கோடி மதிப்பீட்டில் மகளிருக்கான 14 புதிய தோழி விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: தமிழ்நாட்டில் பணிபுரியும் மகளிர் வசதிக்காக ரூ.176.93 கோடி மதிப்பீட்டில்  14 புதிய தோழி விடுதிகளுள் கட்டுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார் . சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் நடைபெற்ற  விழாவில் 3 இடங்களில் 38 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 தோழி விடுதிக் கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், 4 புதிய தோழி விடுதிக;ள கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

Mohanlal: Biography புத்தக அறிவிப்பு; பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மோகன்லாலின் ட்ரீட்!

மலையாள திரையுலகில் தொடர்ந்து முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். சமீபத்தில் அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான ‘எம்புரான்’ மற்றும் ‘தொடரும்’ ஆகிய படங்கள் 200 கோடிக்கு மேல் வசூலித்து மோகன்லாலின் பெருமையை தக்கவைத்திருக்கிறது. அந்த மலையாள சேட்டனுக்கு இன்று (மே 21) 65-வது பிறந்தள். திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மோகன்லால் இந்த நிலையில், மோகன்லால் தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அன்புள்ளவரே, எனது பிறந்தநாளில் மிகுந்த மகிழ்ச்சியை உங்களுடன் … Read more

சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து 5 தொழிலாளிகள் உயிரிழப்பு

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரியில் 400 அடி பள்ளத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சிங்கம்புணரி அருகேயுள்ள மல்லாக்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 400 அடி பள்ளத்தில் 5 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, சாய்வுப் பாதை வழியாக பொக்லைன் இயந்திரம் இறங்கியதில் திடீரென கற்கள் சரிந்தன. இதில், பொக்லைன் ஓட்டுநரான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஜித் … Read more