இந்தியாவின் ராணுவ கண்​டோன்​மென்ட், ஏர்​பேஸ் உள்​ளிட்ட ரகசியங்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய 2 பேர் கைது

சண்டிகர்: எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் பாகிஸ்தானுக்கு நமது நாட்டின் ராணுவ ரகசியங்களை கசியவிட்டதன் குற்றச்சாட்டின் பேரில் பஞ்சாபில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தசூழலில் இந்திய ராணுவத்தின் சில மிக முக்கியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதன் புகாரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, அவர்கள் இந்திய ராணுவத்தின் கண்டோன்மென்ட் பகுதிகள், அமிர்தசரஸில் உள்ள ஏர்பேஸ் உள்ளிட்ட … Read more

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணையை ரத்து செய்ய ட்ரம்ப் தரப்பை நாடும் அதானி

நியூயார்க்: அதானி குழுமம் மீதான ரூ.2,200 கோடி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு புகார் தொடர்பான விசாரணையை ரத்து செய்யக் கோரி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்தை அதானி தரப்பு நாடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து முன்னணி செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு, அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி, முன்னாள் சிஇஓ வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி … Read more

தவெக-வில் இருந்து விலகி பாஜகவில் இணைகிறாரா வைஷ்ணவி? அரசியல் ஆசை தொடர்கிறது?

கோவை பகுதியை சேர்ந்த வைஷ்ணவி என்ற இளம் பெண் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி உள்ள நிலையில், அடுத்ததாக எந்த கட்சியில் இணைய உள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு! சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கே.ஆர்​.​ரா​ம​சாமி

சென்னை: ‘ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?’  என  காங்கிரஸ் சட்டப்பேரவை முன்னாள் தலைவரும்,  முன்னாள் எம்எல்ஏவும்,    காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவருமான கே.ஆர்.ராமசாமி கேள்வி எழுப்பி உள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றிருந்தாலும், அவ்வப்போது ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முதல்  தொண்டர்களிடையே வலுத்து வருகிறது. ஆனால், சிலரின் சுயநலத்துக்காக காங்கிரஸ் கட்சி, திராவிட கட்சிகளை சுமந்து வருகின்றன.  தமிழ்நாட்டில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக … Read more

சமூக ஊடகத்தில் பாகிஸ்தான் வாழ்க என பதிவிட்ட நபர் கைது

லக்னோ, உத்தர பிரதேசத்தின் இட்டா மாவட்டத்தில் ஜலேசார் பகுதியில் உள்ள ஹசன்கார் கிராமத்தில் வசித்து வருபவர் பைசன் கான். இவர், அவருடைய சமூக ஊடக கணக்குகளில் ஒன்றில், பாகிஸ்தான் வாழ்க என்ற அர்த்தத்தில் பதிவை வெளியிட்டு உள்ளார். இதுபற்றி காவல் அதிகாரி ஞானேந்திர பிரதாப் சிங் கூறும்போது, சமூக ஊடகத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவிட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த நபர் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். இதன்பின்னர், சிறையில் அடைக்கப்பட்டார் என கூறினார். பைசன் கானுக்கு எதிராக … Read more

வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்..?: ஐதராபாத் – டெல்லி அணிகள் இன்று மோதல்

ஐதராபாத், 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 54 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இந்நிலையில், இந்த தொடரில் ஐதராபாத்தில் … Read more

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை

இஸ்லாமாபாத், காஷ்மீர் பகல்காமில் கடந்த 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை, எல்லைகள் மூடல் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்து வருகிறது. தற்போது பாகிஸ்தானில் இருந்து எந்த பொருளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. … Read more

Ooty: காட்டு மாட்டை சுட்டுக்கொன்ற கேரள கடத்தல் கும்பல்.. நீலகிரியில் தொடரும் வனவிலங்கு வேட்டை

மரக்கடத்தல் முதல் வனவிலங்கு வேட்டை வரை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வனக்குற்றங்கள் அதிகரித்து வரும் நீலகிரியில் கேரள வேட்டை கும்பலின் அத்துமீறல் தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக காட்டு மாடு வேட்டை கண்மூடித்தனமாக நடைபெற்று வருகிறது. காட்டு மாடு வேட்டை வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கி தோட்டாக்கள், வெட்டி பார்சல் செய்ய கத்தி, கோடாரிகள் கச்சிதமாக காரில் முழு தயாரிப்புடன் சுற்றுலா பயணிகள் போல வாகனங்களில் ஊடுருவும் கேரள வேட்டைக் கும்பல்கள், இரவோடு இரவாக காட்டு மாடுகளை வேட்டையாடி … Read more

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காக்க கோயில்களில் கீற்று பந்தல், பிரகாரங்களில் தேங்காய் நார் விரிப்புகள்

சென்னை: கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காக்க கோயில்களில் கீற்று பந்தல், தேங்காய் நார் விரிப்புகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கோதண்ட ராமர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 2,911 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இன்றையதினம் மட்டும் 31 கோயில்களில் … Read more

“இனி எப்போதும் பாஜக கூட்டணிதான்” – பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் உறுதி!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா பாட்னாவின் நேற்று (மே 4) நடைபெற்றது. இதில் பிஹார் முதல்வர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இனி எப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கப் போகிறேன். முன்பு என்னுடைய கட்சிக்காக இங்கும் அன்றும் செல்ல வேண்டி இருந்தது. ஆனால் அது இனி மீண்டும் நடக்காது. என்னை முதலமைச்சர் ஆக்கியது யார்? அது மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தான்” என்று தெரிவித்தார். … Read more