பொற் கோயிலுக்குள் வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக ராணுவ அதிகாரி கூறியதில் உண்மையில்லை : தலைமை கிரந்தி மறுப்பு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பஞ்சாப் மாநிலம் அமித்சரஸில் உள்ள பொற் கோயில் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும் அதனை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் டி’குன்ஹா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாகிஸ்தானின் அச்சுறுத்தலை முறியடிக்க பொற்கோயிலின் தலைமை கிரந்தி எங்கள் துப்பாக்கிகளை நிலைநிறுத்த அனுமதித்தது மிகவும் நல்லதாக அமைந்தது” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், இதனை மறுத்துள்ள பொற்கோயிலின் தலைமை கிரந்தி கியானி ரக்பீர் சிங் சம்பவம் … Read more

மூன்றரை வயது மகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய்; விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் செங்கமநாடு திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவருக்கும் குறுமசேரி பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் திருமணம் ஆகி மூன்றரை வயதில் கல்யாணி என்ற பெண் குழந்தை இருந்தது. மற்றக்குழி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கல்யாணியை சேர்த்திருந்தனர். பெற்றோர் தினமும் காலையில் அங்கன்வாடிக்கு கொண்டு விட்டுவிட்டு மாலையில் அழைத்துவருவது வழக்கம். நேற்று மாலை அங்கன்வாடி மையத்துக்கு குழந்தையை அழைத்துவர தாய் சந்தியா சென்றார். பின்னர் தனியாக வீடு திரும்பிய அவர் குழந்தையை பேருந்து … Read more

மூடியுள்ள கோயில்களை திறந்து ஒருகால பூஜையாவது நடத்த வேண்டும்: அறநிலைய துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

மூடிக்கிடக்கும் கோயில்களை திறந்து, தினமும் ஒருகால பூஜையாவது நடத்த வேண்டும் என்று அறநிலைய துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான திண்டீஸ்வரர், வீரராகவ விநாயகர் கோயில் உள்ளது. பூஜைகள் நடைபெறாமல் இந்த கோயில் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘பூஜை நடத்த வசதி இல்லாத கோயில்களில், தமிழக அரசின் ஒருகால பூஜை திட்டத்தின்கீழ் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு, … Read more

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது இல்லை: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து 

புதுடெல்லி: வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறும்போது, “பொதுவாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது கிடையாது’’ என்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஏஐஎம்ஐஎம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை அப்போதைய … Read more

அமலாக்கத்துறை டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மீண்டும் சம்மன்

சென்னை அமலாக்கத்துறை இன்று மீண்டும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே நடத்திய சோதனை அடிப்படையில் அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதையொட்டி சமீபத்தில், டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 நாட்கள் சோதனை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்தும் விசாகனிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன் தமிழ் திரைப்பட அதிபர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் வீடு உள்பட மேலும் 7 இடங்களிலும் … Read more

CSK vs RR: தோனி செய்த 3 தவறுகள்; தோல்வியுற்ற CSK – விரிவான அலசல்

‘சென்னை தோல்வி!’ ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. இந்தத் தோல்விக்கு தோனி எடுத்த சில முடிவுகளுமே முக்கிய காரணமாக இருந்தது. அதைப் பற்றிய அலசல். CSK vs RR லாஜிக் இல்லாத பேட்டிங் ஆர்டர்: ‘பேட்டிங் ஆர்டரில் நாங்கள் இன்னும் வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு பேட்டருக்கும் என்ன ரோல் என்பதைக் கண்டடைந்து அடுத்து சீசனுக்குத் தயாராக வேண்டும்.’ டாஸில் தோனி இப்படித்தான் பேசியிருந்தார். இப்படி … Read more

ஆசியாவில் கரோனா அலை: பொது இடங்களில் மாஸ்க் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுரை

சென்னை: ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை உருவாகியுள்ள நிலையில், பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 257-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மே 12-ம் தேதியிலிருந்து 164 பேர் கரோனா தாக்கத்துக்கு ஆளாகியுள்ளதாகவும், தமிழகத்தில் 34 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளானதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்நிலையில், … Read more

இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார்: பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் குறிப்பாக உலகளாவிய தெற்கு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வு ஜெனிவாவில் நடைபெற்றது. இதில், காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரதத்தை நாங்கள் செயல்படுத்துகிறோம். இது 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சையை வழங்குகிறது. இந்தத் திட்டம் … Read more

ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை: இந்தியாவில் 257 பேர் பாதிப்பு

புதுடெல்லி: ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தற்போது பரவி வரும் ஒமைக்ரான் பிஏ.2.86திரிபான ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி போட அறிவுறுத்தல்: மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த ஹாங்காங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கரோனா தொற்று உறுதி … Read more

சிஎஸ்கே-வுக்கு 10வது இடம் உறுதி.. ராஜஸ்தான் ராயல்ஸ் ஈசி வின்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 62 ஆவது லீக் ஆட்டம் இன்று (மே 20) டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதை வென்ற ராஜஸ்தான் ராயல் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து  வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக … Read more