கோபத்துடன் வெளியேறிய சஞ்சீவ் கோயங்கா! ரிஷப் பந்த் தொடர்பாக முக்கிய முடிவு!

ஐபிஎல் 2025 போட்டிகள் தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்து அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில் மூன்று அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதே சமயம் நான்கு அணிகள் இந்த பிளே ஆப் ரேஸில் இருந்து விலகி உள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றதால் பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறி உள்ளது … Read more

பள்ளிகல்வி துறை ஊழியர்கள் பணி நேரம் மாற்றம்

சென்னை பள்ளி கல்வி துறை ஊழியர்களின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்களுக்கான பணி நேரம், காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை இருந்தது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் அமைச்சு பணியாளர்களுக்கான பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றி அமைத்து உத்தரவிடப்பட்டது. பல்வேறு சங்கங்கள் அமைச்சு பணியாளர்களின் … Read more

சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம்: ஆந்திர முதல்வர் சந்திராபாபு நாயுடு கருத்து

கர்னூல்: சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஒரு காலத்தில் கிராமங்களுக்கு செய்திதாள்கள் கூட வருவது கடினம். ரேடியோ மூலமாக மட்டுமே நாம் செய்திகளை அறிய முடிந்தது. யார், யார் சட்டப்பேரவைகளில் நன்றாக பேசினார்களோ அவர்களை தங்கள் அரசியல் தலைவர்களாக மக்கள் ஏற்று கொண்டு அவர்களை தேர்தல்களில் வெற்றி பெற … Read more

சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூடியூபர் 'யாத்ரி டாக்டர்' பாகிஸ்தான் உளவாளியா? – உளவு துறை தீவிர விசாரணை

சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூ டியூபர் ‘யாத்ரி டாக்டரின்’ பாகிஸ்தான் தொடர்புகள் குறித்து இந்திய உளவுத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு உளவாளியாக செயல்பட்ட ஹரியானாவை சேர்ந்த யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரோடு தொடர்புடைய ஒடிசாவை சேர்ந்த யூ டியூபர் பிரியங்கா சேனாபதி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார். இந்த வரிசையில் ஜோதி மல்ஹோத்ராவுடன் நெருங்கி பழகிய யூ டியூபர் ‘யாத்ரி டாக்டரின்’ பாகிஸ்தான் … Read more

தூய்மைப் பணியாளர்கள் திட்ட முறைகேடு வழக்கு: உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்தது உச்சநீதி மன்றம்…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு எதிரான தூய்மைப் பணியாளர்கள் திட்ட முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்துள்ள உச்சநீதிமன்றம்,  செல்வப் பெருந்தகைக்கு எதிரான சவுக்கு சங்கர் வழக்கை ஏன்  இவ்வளவு அவசரமாக விசாரிக்க வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளது. சவுக்கு சங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மீது,  தொடரப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் திட்ட முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை உச்சநீதிமன்றம்  நிறுத்தி வைத்துள்ளது. … Read more

நமக்குள்ளே…

பாலியல் வன்கொடுமை என்பதே கொடூரம்தான். கொடூரத்திலும் கொடூரம்… பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை. தற்போது இந்த வழக்கில், 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, சட்டத்தின் மீதும்… நீதியின் மீதும் ஓரளவு நம்பிக்கையைக் கூட்டுகிறது. கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் இளம்பெண்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோக்களாகப் பதிவு செய்து மிரட்டி, தொடர்ந்து கொடுமைகளை இழைத்து வந்தது ஒரு கும்பல். பாதிக்கப்பட்ட ஒரு பெண், துணிந்து தன் சகோதரரிடம் கூற, விஷயம் வெளியில் … Read more

“ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட விடாமல் தடுக்கிறது திமுக அரசு”- சசிகலா ஆவேசம்

கோத்தகிரி: கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட விடாமல் தடுக்கிறது திமுக அரசு என சசிகலா ஆவேசமாக கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கோடநாடு எஸ்டேட்டுக்கு இன்று மாலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், கோட நாடு எஸ்டேட் பங்கு தாரருமான சசிகலா வந்தார். கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தினர் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் எஸ்டேட் நுழைவு வாயில் பகுதியில் நீண்ட வரிசையில் நின்று அவரை வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கூறியதாவது: … Read more

அமெரிக்க முன்னாள் அதிபர் பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு: விரைவில் குணமடைய மோடி வாழ்த்து

புற்றுநோய் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புராஸ்டேட் வகை புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது உலகத் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இந்த புற்றுநோய் பாதிப்பு ஜோ பைடனின் எலும்புகளுக்கும் பரவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பைடனுக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு மிக மோசமான … Read more

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் தீவிரவாதி அபு கொல்லப்பட்டது எப்படி?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அபு சைபுல்லா, பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் துணை பிரிவான டிஆர்எப் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு கற்பனைக்கும் எட்டாத வகையில் தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக … Read more

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – விவரம் அறிவிப்பு…

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக நாளை (மே 20ந்தேதி)  காலை 9 மணி முதல் மாலை 5 மணி  வரை சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 5 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.  மேலும் … Read more