பள்​ளிக்கல்​வி துறை​யில் பணி​யாற்றி வரும் அமைச்சு பணியாளர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் அமைச்சுப் பணியாளர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு மே 26 முதல் ஜூன் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட அமைச்சுப் பணியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமாகும். அதேபோல், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2025-26 கல்வியாண்டில் அமைச்சுப் பணியாளர்களுக்கு இடமாறுதல், பதவி உயர்வு … Read more

ஹைதராபாத்தில் பயங்கர தீ விபத்து; சிறுவர்கள், பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி, தலைவர்கள் இரங்கல்

ஹைதராபாத்: தெலங்​கானா மாநில தலைநகர் ஹைத​ரா​பாத்​தில் நேற்று அதி​காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 சிறு​வர்​கள், 5 பெண்​கள் உட்பட 17 பேர் உயி​ரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம், மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைத​ரா​பாத்​தில் புகழ்​பெற்ற சார்​மி​னார் அருகே குல்​சார் ஹவுஸ் என்ற வணிக வளாகம் செயல்​படு​கிறது. இந்த வளாகத்​தின் தரைதளத்​தில் நகைக் கடைகளும், மேல்​தளங்​களில் வீடு​களும் உள்​ளன. இங்கு நேற்று அதி​காலை 4 … Read more

10 கிலோ உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆன சர்பராஸ் கான்.. என்ன செய்தார்?

இந்திய கிரிக்கெட் அணி ஐபிஎல் தொடர் முடிந்ததும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடுகிறது. இந்தியாவின் மெயின் அணி விளையாடும் இத்தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 04ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு முன்பாக ஜுன் தொடக்கத்தில் இந்திய ஏ அணி அங்கு சென்று விளையாட இருக்கிறது.  இந்த அணியின் சர்ஃப்ராஸ் கான் இடம் பெற்றுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி கடந்த ஆண்டு … Read more

கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து 15 கவுன்சிலர்கள் திடீர் ராஜிநாமா… டெல்லி அரசியலில் பரபரப்பு..

டெல்லி: முன்னாள் முதல்வரான கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியில் இருந்து ஒரேநேரத்தில் 15 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, ராஜினாமா செய்துள்ள கவுன்சிலர்கள் திய கட்சி தொடங்குவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் பாஜக என்று ஆத்ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது. ஆம்ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள 15 கவுன்சிலர்களும்,  முன்னாள் துணைமுதல்வர் சிசோடியாவின் தீவிர விசுவாசியான, முகேஷ் … Read more

KL Rahul : 'திணறிய டெல்லி; க்ளாஸாக ஆடி சதமடித்த கே.எல்.ராகுல்!

‘ராகுல் சதம்!’ டெல்லிக்கு கட்டாயம் வென்றே ஆக வேண்டிய போட்டி இது. அதுவும் இந்த சீசனில் மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக. ப்ளே ஆப்ஸ் ரேஸில் நீடிக்க வெற்றி தேவையான முக்கியமான போட்டியில் டெல்லி அணிக்காக சதமடித்து அசத்தியிருக்கிறார் கே.எல்.ராகுல். வழக்கம்போல ஒரு க்ளாஸான ஆட்டம்! KL Rahul ‘டெல்லியின் பிரச்சனை!’ டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த சீசனை மிகச்சிறப்பாக தொடங்கியிருந்தது. ஆடிய முதல் 4 போட்டிகளையும் வென்றிருந்தது. புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்தில் இருந்தது. … Read more

‘பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை’ – தமிழிசை

சென்னை: பாஜகவுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றிக் கழகம் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகப் பேட்டியில் அவர், “பாஜகவுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றிக் கழகம் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. தவெக தலைவர் விஜய் இதுவரை எதுவும் சொல்லவில்லை. எனவே மற்றவர்களின் கருத்து குறித்து பதில் கூற முடியாது. எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். திமுக ஆட்சி … Read more

பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்திய ரகசிய தகவல்களை அளித்த ஹரியானா யூடியூபர் – நடந்தது என்ன?

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் ‘டிராவல் வித் ஜோ’ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். பிரபலமான இடங்கள் குறித்து இவரது யூடியூப் சேனலில் தகவல்களைப் பகிர்வதால் சமூக வலைதளத்தில் புகழ்பெற்றுள்ளார் ஜோதி மல்ஹோத்ரா. இந்நிலையில் ஜோதி மல்ஹோத்ரா, குசாலா, யமீன், தேவிந்தர், அர்மான் உட்பட 6 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்துள்ளனர். … Read more

'கூட்டணி இல்லை என விஜய் சொல்லவில்லை' தமிழிசை கருத்து… தவெக பக்கா பதிலடி!

Tamil Nadu News Updates: பாஜக உடன் கூட்டணி இல்லை என விஜய் சொல்லவில்லை என்ற தமிழிசை சௌந்தரராஜன் கருத்துக்கு, தவெக துணைப் பொதுசெயலாளர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

சம்பவம் செய்த சாய் சுதர்சன், கில்.. டெல்லியின் பிளே ஆஃப் கனவு அவ்வளவுதானா?

2025 ஐபிஎல் தொடரின் 60வது லீக் ஆட்டம் இன்று டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதை வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி முதலில் டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதுவரை 2 டவுனில் களம் இறங்கி … Read more

சென்னை ஓஎம்ஆர் சாலையில் பயங்கரம்: ஓடிக்கொண்டிருந்த கார் திடீர் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த பரிதாபம்…

சென்னை:  சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில், அந்த வழியாக வந்த  கார் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட காரில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சென்னை திருவான்மியூர் ஓஎம்ஆர் சாலையில்,  டைட்டல் பார்க் சிக்னல் அருகே திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில், அந்த வழியாக வந்த கார் சிக்கி, கவிழ்ந்தது. சம்பவத்தன்று,  சோழிங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர் நோக்கி வந்துகொண்டிருந்த  கார் … Read more