ஜூலை மாதம் முதல் மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்

சென்னை: ஜூலை மாதம் முதல் மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மாறாக, மின் திட்டங்களை விரைவுபடுத்துவது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் , வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணம் 3.16% உயர்த்தப்படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வாழ்க்கையின் சுமைகளையும், வரிச்சுமைகளையும் தாங்கிக் கொள்ள … Read more

பாஜக ‘ஸ்லீப்பிங் செல்லில்’ இடம்பெற சசி தரூர் முயற்சி – கேரள சிபிஐ விமர்சனம்

திருவனந்தபுரம்: “காங்கிரஸுக்குள் இருக்கும் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லில் இடம்பிடிக்க சசி தரூர் முயற்சி செய்கிறார்.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு யுத்தத்தை பாஜக அரசியல் ஆதாய வேட்டையாக பயன்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் பாஜக ஸ்லீப்பிங் செல் இருப்பதாக ராகுல் காந்தி சொல்வது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. காங்கிரஸுக்குள் இருக்கும் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லில் இடம்பிடிக்க சசி … Read more

வெளிநாடுகளுக்கு ‘அமைதிக் குழு’; இந்தியா அறிவித்த நிலையில் பாகிஸ்தானும் ஏற்பாடு

இஸ்லாமாபாத்: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்குவதற்காக முக்கிய நட்பு நாடுகளுக்கு 7 எம்.பி.க்கள் கொண்ட குழுக்களை இந்தியா அனுப்பவுள்ள நிலையில், பாகிஸ்தானும் அமைதிக்கான தனது தரப்பு நிலைப்பாட்டை விளக்கும் குழுவை உலக நாடுகளுக்கு அனுப்ப இருக்கிறது. முன்னதாக, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் (பிபிபி) பிலாவல் பூட்டோ சர்தாரி, இந்தியா – பாகிஸ்தான் இடையே சமீபத்தில் உருவாகியிருக்கும் பதற்றங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை விளக்க ஒரு குழுவினை வழிநடத்துவதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெரிஃப் தன்னைக் … Read more

ஹைதராபாத் தீ விபத்து: 8 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழப்பு… நடந்தது என்ன?

Hyderabad Fire Broke Out: ஹைதராபாத் நகரின் புகழ்பெற்ற சார்மினார் சுற்றுலா தலம் அருகே உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அனைவரின் ஃபேவரைட் ஷோ 'ஹார்ட் பீட் சீசன் 2'.. எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

Heart Beat Season 2 OTT Release Date Announced: ரசிகர்களின் மனம் கவர்ந்த, ‘ஹார்ட் பீட்’ சீசன் 2 வெப் தொடரின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

ஐபிஎல் பிளே ஆப் : ராஜஸ்தான் 2 மேட்சும் தோற்றால் ஒரு அணியும் பிளே ஆப் செல்ல முடியாது

IPL 2025 Playoffs: ஐபிஎல் 2025 தொடரின் பிளே ஆப்-க்கான கிளைமேக்ஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்று பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பில் பிரகாசமாக நீடிக்கும். அதேநேரத்தில் ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைப்பதை உறுதி செய்ய முடியாது. ஏனென்றால் பஞ்சாப் அணியின் இன்றைய வெற்றி நான்கு இடங்களுக்கான போட்டியை மேலும் அதிகரிக்கும். ஒருவேளை ராஜஸ்தான் ராயல்ஸ் … Read more

168 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு.. கம்மி விலையில் ஜியோவின் சூப்பர் திட்டம்

Reliance Jio Affordable Plan: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு மற்றும் டேட்டா சலுகைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், OTT பயன்பாடுகளுக்கு இலவச சந்தாவையும் வழங்கும் திட்டங்களை வழங்குகின்றன. இதுபோன்ற பல திட்டங்கள் ஜியோ நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவிலும் கிடைக்கின்றன. இன்று நாம் ஜியோவின் அத்தகைய ஒரு திட்டத்தைப் பற்றி தான் காணப் போகிறோம். இந்த திட்டத்தில் நீங்கள் 168 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் பல OTT பயன்பாடுகளுக்கான சந்தாவைப் பெறுவீர்கள். இந்த திட்டத்தின் … Read more

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்? முக்கிய நபரான ரத்தீஷ்  தலைமறைவு – வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ‘சீல்’

சென்னை;  தமிழ்நாடு அரசின் டாஸ்மாக்   மதுபான நிறுவனத்தில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை,  குற்றம் சாட்டி உள்ள நிலையில்,  இந்த முறை கேட்டில் சம்பந்தப்பட்டுள்ள  முக்கிய நபரான ரத்தீஷ்  வீட்டில் சோதனை நடைபெற இருப்பதை அறிந்துகொண்ட அவர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார்.  இதையடுத்து அவரது வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர். அரசு மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு கூறி உள்ளது. அதாவது,  … Read more

ஐதராபாத்தில் பயங்கர தீ விபத்து – பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

ஐதராபாத், ஆந்திர மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சார்மினார் அருகே குல்சார் பேர்ல்ஸ் குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக காலை 6.30 மணியளவில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீயின் தாக்கத்தால் பலர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். பின்னர் பலத்த காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் கட்டிடத்தில் சிக்கி உள்ள சிலரை … Read more

அமெரிக்காவில் சிறையில் இருந்து 10 கைதிகள் தப்பி ஓட்டம்: 4 பேர் சிக்கினர்

வாஷிங்டன், அமெரிக்காவின் லூசியானா மாநிலம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை உள்ளது. அங்கு தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்பட சுமார் 1,500 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறைச்சாலையில் எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். இந்த பாதுகாப்பையும் மீறி கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதிகள் சிலர் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் கழிப்பறை சென்றுள்ளனர். பின்னர் கழிப்பறையின் பின்னால் உள்ள துளை வழியாக 10 … Read more