நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை: தேசிய தேர்வு முகமைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மின் தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து தேசிய தேர்வு முகமைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூரைச் சேர்ந்த சாய் ப்ரியா, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அக்‌ஷயா உள்ளிட்ட 13 நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய மருத்துவ ஆணையத்தின் மூலம் மே 4-ம் … Read more

சசி தரூர், கனிமொழி உள்ளிட்ட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழுவினர் வெளிநாடு பயணம்: முழு விவரம்

புதுடெல்லி: எல்லை தாண்​டிய தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்​து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதா​ரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்​கர் பிர​சாத், சசிதரூர், கனி​மொழி உட்பட 7 பேர் தலை​மை​யில் எம்​.பி.க்​கள் குழுக்​களை மத்​திய அரசு அமைத்​துள்​ளது. இந்த குழு​வினர் பிரிட்​டன், வளை​குடா நாடு​கள் உட்பட பல்​வேறு நாடு​களுக்கும் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டு, இந்​தி​யா​வின் நிலை குறித்து விளக்க உள்​ளனர். காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் கடந்த மாதம் 22-ம் தேதி நடத்​திய கொடூர தாக்குதலில் சுற்​றுலா … Read more

விராட் கோலிக்கு இடமில்லை.. ஆல் டைம் ஐபிஎல் 11 அணியை அறிவித்த முன்னாள் வீரர்!

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக கடந்த மே 8ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இதையடுத்து போர் பதற்றம் குறைந்த நிலையில், மீண்டும் இன்று (மே 17) முதல் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. இந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றில் சிறந்த வீரர்களை தேர்வு செய்து ஒரு அணியை உருவாக்கி இருக்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்.  இந்த அணியில் விராட் கோலிக்கு அவர் இடம் … Read more

"ரேஸிங்கின்போது நடிக்காமல் இருப்பதே சிறந்த வழி என நினைக்கிறேன்" – என்ன சொல்கிறார் அஜித் குமார்?

அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த ‘குட் பேட் அக்லி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. சினிமாவில் மட்டுமல்ல அதே சமயத்தில் ரேஸிங்கிலும் ஒரு வெற்றியைப் பதிவு செய்திருந்தார் அஜித் குமார். Ajith Kumar – அஜித் ரேஸிங் சீசனைக் கணக்கிட்டு தற்போது ரேஸ், சினிமா என இரண்டு பக்கங்களில் கவனம் செலுத்துகிறார் அஜித் குமார். இந்நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில் ரேஸிங், சினிமா என இரண்டையும் கையாள்வது தொடர்பாகப் பேசியிருக்கிறார் அஜித் குமார். … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை…

திருவண்ணாமலை: அதிமுக ஆட்சியின்போது அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் சேவூர் ராமச்சந்திரன். இவரது விட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வான சேவூர் எஸ். ராமச்சந்திரன் வீட்டில் சுமார் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சோதனை நடத்தி வருகின்றனர். அவரது மகன்களான விஜய்குமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சேவூர் … Read more

RCB vs KKR : 'ரத்தான போட்டி; ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த கொல்கத்தா – RCB நிலை என்ன?

‘விடாத மழை!’ பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக ரத்தாகியிருக்கிறது. இதனால் இரு அணிகளுக்கு தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டி ரத்தானதால் ப்ளே ஆஃப் ரேஸில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது? சின்னசாமி மைதானம் ‘வெளியேறிய கொல்கத்தா!’ இந்தப் போட்டி ரத்தாகியிருப்பதால் கொல்கத்தாவுக்குதான் பெரிய பின்னடைவு. ஏனெனில், கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் செல்ல இந்தப் போட்டியில் வென்றே ஆக வேண்டியது கட்டாயம் என்ற நிலை இருந்தது. இப்போது போட்டி ரத்தாகியிருப்பதால், 13 … Read more

பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவதுடன் தரமான ஆசிரியர்களும் வேண்டும்: தம்பிதுரை கருத்து

கிருஷ்ணகிரி: பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவதுடன் தரமான ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என பர்கூரில் அதிமுக எம்பி தம்பிதுரை கருத்து தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாழ்வில் பல முன்னேற்றங்களை பெற கல்வி அவசியமாக இருக்கிறது. ஒரு பேராசிரியராக இருந்த எனக்கு, கல்வியால் தான் துணை சபாநாயகர், மத்திய, மாநில அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகள், பதவிகள் கிடைத்தது. கல்வியும், மருத்துவமும் இன்றைய சூழலில் அவ்வளவு முக்கியமானதாக உள்ளது. இவற்றை வளர்ப்பதற்காக … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் கைது!

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது மற்றும் முக்கிய தகவல்களை பகிர்ந்தது உள்ளிட்ட காரணத்துக்காக ஆறு யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் யூடியூபரும் பாகிஸ்தான் தரப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை 3.77 லட்சம் பேரும், ‘டிராவல் வித் ஜோ 1’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கை 1.32 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். அவரது சமூக வலைதள பக்கத்தில் … Read more

இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்; ஆனால் பெயரும் புகழும் கிடைக்கவில்லை: ட்ரம்ப் வேதனை

இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். ஆனால் அதற்கான பெயரும் புகழும் கிடைக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாக்ஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறேன். அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இடையே பொருளாதார உறவை வலுப்படுத்தி உள்ளேன். என்னைப் பொறுத்தவரை வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தி அமைதியை நிலைநாட்டி வருகிறேன். அண்மையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய போர் … Read more

IPL 2025: எந்தெந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாடுகிறார்கள்? யார் யார் வரவில்லை?

IPL 2025 Restarts, Available Overseas Players: ஐபிஎல் தொடர் இந்தியா – பாகிஸ்தான் பதற்றம் காரணமாக கடந்த மே 8ஆம் தேதி பஞ்சாப் – டெல்லி போட்டியின் போதே பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பின் ஒரு வார காலத்திற்கு ஐபிஎல் தொடர் நிறுத்தப்படுவதாக ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்திருந்தது.  இதனால் பல வெளிநாட்டு வீரர்களும் மே 9ஆம் தேதி அன்றே தங்களின் தாய்நாட்டிற்கு திரும்பினர். வெகு சிலர் மட்டுமே தங்களின் அணிகளுடன் தங்கியிருந்தனர். இந்தியா – பாகிஸ்தான் … Read more