ஐபிஎல் 2025 : பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற ஒவ்வொரு அணியும் எத்தனை வெற்றி பெற வேண்டும்?

IPL 2025 Playoff : இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒரு வார இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குகிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில் இருந்தே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் அணி எது, வெளியேறப்போகும் அணி எது என்பது தெரியப்போகும் என்பதால் ஐபிஎல் 2025 இன்று முதல் சூடுடிபிக்கப்போகிறது. 13 லீக் ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், 10 அணிகளில் ஏழு அணிகள் பிளேஆஃப் இடத்திற்கான போட்டியில் உள்ளன. முன்னாள் சாம்பியன்களான சென்னை … Read more

Vijayakanth: `பத்திரமெல்லாம் வேணாம் பணத்தை வாங்கிட்டுப் போ'- மூப்பனார் பற்றி மனம் திறந்த விஜயகாந்த்

பெற்றோர்களின் நினைவாக… கேப்டன் விஜயகாந்த் தன் பெற்றோர்களின் நினைவாக ஆரம்பித்தது தான் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி. அவர் இதற்கு முன்னர் பெற்றோர்களின் நினைவாக கோயம்பேட்டில் கட்டிய கல்யாண மண்டபம் நெடுஞ்சாலை பணிக்காக இடிக்கப்பட்டதில் அவரே இடிந்து போய்விட்டார். அதற்குப் பிறகு ஆண்டாள் அழகர் கல்லூரியில் கவனம் செலுத்தி வந்தார். அந்தக் கல்லூரிக்கான இடம் கேப்டனின் கைக்கு மாறிய விதமே சுவாரஸ்யமானது. அப்போதுதான் அவர் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்திற்கு முன்னேறிக் கொண்டிருந்தார். அவருக்கு … Read more

பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளில் பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் குழு அமைப்பு

டெல்லி: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை வளர்த்து வரும் நிலையில்,  பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளில் இந்தியா பிரசாரம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான, காங்கிரஸ் எம்.பி. சசிதரர்,  திமுக எம்.பி.  கனிமொழி உங்பட 7 பேர்  தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதை மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத தளத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 22ந்தேதி அன்று ( April 22, 2025) அங்கு சுற்றுலா சென்றிருந்த  இந்து … Read more

மாநகர பேருந்தில் இருந்து முதியவரை இறக்கிவிட்டு தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

சென்னை: மாநகர பேருந்தில் இருந்து இறக்கி முதியவரை தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கிளாம்பாக்கம் – கோயம்பேடு இடையே 70-சி வழித்தடத்தில் மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் நேற்று காலை முதியவர் ஒருவர் ஏறியுள்ளார். அவரை முதியோர் இருக்கையில் அமரக்கூடாது என நடத்துநர் கூறியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. மேலும், முதியவரை நடத்துநர் பேருந்தில் இருந்து இறக்கி சரமாரியாக தாக்கினார். பேருந்தில் இருந்து இறங்கி வந்த … Read more

கர்நாடகாவில் கனமழை: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்துவருகிறது. குடகு, மைசூரு, மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே மேக்கேதாட்டு, கனகபுரா, பிலிகுண்டுலு உள்ளிட்ட வனப்பகுதிகளில் கனமழை பெய்ததால் காவிரியின் … Read more

ரெட்ரோ வசூலை முந்தியதா டூரிஸ்ட் ஃபேமிலி? உண்மையான கலக்ஷன் இதுதான்..

Retro Vs Tourist Family Box Office Collection : சமீபத்தில தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க செயலாளர் ஸ்ரீதர், ரெட்ரோ படத்தின் மொத்த வசூலை டூரிஸ்ட் ஃபேமிலி முந்தி விட்டதாக பேசியிருந்தார். இது, திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

ரியல் எஸ்டேட் : வீட்டுமனை பதிவு, தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு…!

Tamil Nadu Government : ரியல் எஸ்டேட் துறைக்கு தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. வீட்டு மனைப்பிரிவுகள், கட்டடங்களுக்கு அனுமதி பெறுவது குறித்து புதிய விதிமுறை வெளியிட்டுள்ளது.  

Autograph: "இப்போ ஆட்டோகிராஃப் படம் பார்க்கும்போது எனக்கே கிரிஞ்ச்னு தோனுது" – சேரன் ஓப்பன் டாக்

டொவினோ தாமஸ் நடித்திருக்கும் ‘நரிவேட்டை’ திரைப்படம் இம்மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் மூலம் நடிகராக மலையாளத்தில் அறிமுகமாகிறார் நடிகர் சேரன். படத்தில் ஒரு காவல் அதிகாரி கேரக்டரில் இவர் நடித்திருக்கிறார். இவர் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் இன்றுவரை ஒரு கல்ட் படமாக பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. Narivettai – Cheran இத்திரைப்படம் கூடிய விரைவில் ரீ ரிலீஸ் ஆகவிருக்கிறது. ரீ ரிலீஸையொட்டி சமீபத்தில் ஏ.ஐ உதவியுடன் ஒரு … Read more

DigiLocker: உங்கள் முக்கிய ஆவணங்களை டிஜிலாக்கர் மூலம் பாதுகாப்பது எப்படி? முழு செயல்முறை இதோ

DigiLocker: பல அத்தியாவசிய பணிகளை செய்யவும், நமது அடையாளத்தின் அங்கீகாரமாகவும், அரசாங்க திட்டங்களின் பலன்களை பெறவும், இன்னும் பல பணிகளுக்கும் பல ஆவணங்கள் நமக்கு தேவைப்படிகின்றன. இவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது மிக அவசியமாகும். ஆனால், சில அவசர காலங்களில், உங்கள் முக்கியமான ஆவணங்களை நீங்கள் பெற முடியாமல் போகலாம். அல்லது, அவை உங்களிடம் இல்லாமல் இருக்கலாம்.  போர், தொற்றுநோய்கள் போன்ற நிச்சயமற்ற சூழ்நிலைகளில், உங்கள் முக்கியமான அடையாள மற்றும் நிதி ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், தேவைப்பட்டால் … Read more