லெவன் விமர்சனம்: சீரியல் கில்லர் கதையில் சில சறுக்கல்கள்; ஆனாலும் கவனம் ஈர்க்கிறதா இந்த த்ரில்லர்?

சென்னையில் ஒரு மர்மமான நபரால் பலர் ஒரே மாதிரியாக எரித்துக் கொல்லப்படுகின்றனர். அதை விசாரிக்கும் விசாரணை அதிகாரியும் (ஷஷாங்) விபத்தில் சிக்கிக் கொள்ள, அந்தப் பொறுப்பு உதவி ஆணையர் அரவிந்தனுக்கு (நவீன் சந்திரா) வருகிறது. அந்தத் தொடர் கொலைகாரனின் நோக்கம் என்ன, அவனை அரவிந்தன் எப்படி நெருங்குகிறார் என்பதே `லெவன்’ படத்தின் கதை. Eleven Review | லெவன் விமர்சனம் ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தைப் போல உணர்ச்சியின்றி விசாரிக்கும் பாவனையை தன் ஒற்றை வரிப் பதில்கள், கேள்விகள் … Read more

தவெக கட்சி கட்டமைப்பு பணியை விரைந்து முடிக்க விஜய் வலியுறுத்தல்

சென்னை தவெக தலைவர் விஜய் தமது கட்சி பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி உள்ளார். இன்று கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவில்லை  மாறாக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாக ரீதியான 120 மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள் பங்கேற்றனர். சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கப்பட்ட கூட்டத்தில். பூத் கமிட்டி மாநாடு தொடர்பாகவு, மாவட்ட செயலாளர்களிடம் கருத்து … Read more

Rohit Sharma: "இதை நான் கனவில் நினைத்ததில்லை" – வான்கடேவில் கௌரவித்த MCA; நெகிழ்ந்த ரோஹித்

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று மும்பை வான்கடே மைதானம். இந்த மைதானத்தில், சில ஸ்டேண்டுகளுக்கு சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், வினூ மன்கட், திலீப் வெங்சர்க்கார் ஆகிய முன்னாள் வீரர்களின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில், இந்திய அணிக்கு 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையும், 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியும் வென்று கொடுத்த ரோஹித் சர்மாவின் பெயரை, வான்கடே ஸ்டேடியத்தில் ஒரு ஸ்டேண்டுக்கு வைத்து அவரை கௌரவித்திருக்கிறது மும்பை கிரிக்கெட் சங்கம் … Read more

ராமதாஸ் கூட்டத்தைப் புறக்கணித்த அன்புமணி: பாமகவில் புதிய சலசலப்பும் பின்னணியும்!

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் இன்று (மே 16) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், சேலம் … Read more

‘மோடிக்கு ராணுவம் தலைவணங்க வேண்டுமா?’ – ம.பி துணை முதல்வர் பேச்சும், காங்கிரஸ் எதிர்வினையும்

போபால்: “பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய ராணுவம் தலைவணங்க வேண்டும்” என்று மத்தியப் பிரதேச துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்தா பேசியிருப்பது அரசியல் சர்ச்சையாகியுள்ளது. இந்தப் பேச்சு மலிவானது என கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சி, மத்தியப் பிரதேச துணை முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத் துணை முதல்வர் தேவ்தா பேசிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, “நாட்டின் ராணுவம் மற்றும் ராணுவ வீரர்கள், பிரதமர் மோடிக்கு … Read more

What to watch on Theatre: மாமன், DD Next Level, F. Destination, M.Impossible, Lovely-இந்த வார ரிலீஸ்

Devil’s Double Next Level ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் DD Next level Review: படத்துக்குள் மாட்டிக் கொள்ளும் ரிவியூவர்! திரைக்கதை நெக்ஸ்ட் லெவலா ஏமாற்றமா? பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கீதிகா திவாரி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், கெளதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Devil’s Double Next Level’. ஆர்யா இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். ஹாரர், திகில் காமெடி திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. மாமன் … Read more

திரைப்பட தயாரிப்பாளார் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபா தயாரிப்பாலரான ஆகாஷ் பாச்கரன் இருந்து தனுஷ் தயாரிப்பில் சில ஆண்டுகள் முன் வெளியான திரைப்படம் ‘நானும் ரவுடிதான்’. இந்தத் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனின் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பிறகு விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல், பாவ கதைகள் மற்றும் அமரன் ஆகிய திரைப்படங்களில் ஆகாஷ் பணியாற்றியிருந்தார். இவர் தற்போது தனுஷின் இட்லி கடை, … Read more

கவிக்குயில் ஏறிய கவிதைப் பல்லக்கு – சரோஜினி நாயுடு; கடல் தாண்டிய சொற்கள் – பகுதி -6

எல்லாச் சூழலிலும் அறவியல் சிந்தனைகளை இலக்கியப் பெருந்திரட்டுக்குள் கொண்டுவர முடியுமா? எந்தவொரு நல்ல கவிதைக்குள்ளும் அரசியல் சிந்தனைகள் தொற்றிக்கொண்டு நிற்கின்றன என்றாலும் அரசியலை ஆராதிக்கும் ஒரு பெண் புறவயமான உலகில் பயணித்துக்கொண்டே கவிதையோடு இருப்பது எவ்வளவு தூரம் சாத்தியம் என்றெண்ணியபோது அதற்கு முன்னோடியாக விளங்கிய சரோஜினி நாயுடு நினைவுக்கு வந்தார். பெண்களின் உலகம், பெண்ணிய வாழ்வியல் முறை, கலைக்கான கோட்பாடுகள் இவற்றுடன் அரசியல் தன்மையும் இன்னொரு லேயராக ஏறிக்கொள்ளும்போது மானுட முகங்களை, நுட்பமான உணர்வுகளை மனம் தானாக … Read more

“நான் நிம்மதியாக இருக்கிறேன்… ‘கூண்டுக்கிளி’ ஆக விரும்பவில்லை!” – அண்ணாமலை மனம் திறப்பு

திருவண்ணாமலை: “தற்போது வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். என்னை ஏன் கூண்டுக்குள் அடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் சாமானிய மனிதராக இருப்பதையே ஒரு பவராக பார்க்கிறேன்” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழக முதல்வர் 2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரும் எனக் கூறியிருக்கிறார். ஊட்டியில் வெயில் குறைவாக இருந்தால் … Read more