கமலஹாசன் கன்னடம் குறித்து தவறாக பேசவில்லை : நடிகை திவ்யா ஸ்பந்தனா

பெங்களூரு பிரபல நடிகையும் காங்கிரஸ் முன்னாள் எம் பியுமான நடிகை திவ்யா ஸ்பந்தனா கன்னடம் குறித்து தவராக பேச்வில்லை எனக் கூறியுள்ளார். சென்னையில் கடந்த 24ம் தேதி, நடைபெற்ற ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று கூறினார். அவர் இந்த விஷயத்தை பேசி சில நாட்களுக்குப் பின்னர் கன்னட அமைப்பினர் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் போஸ்டர்களை கிழித்தார்கள். இப்படி இருக்கும்போது, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கமல்ஹாசனுக்கு … Read more

“இந்தியா மீது தாக்குதல் நடத்த தயாராக இருந்தோம்; ஆனால், இரவுக்குள்..'' – ஷெபாஸ் ஷெரீப் பேச்சு

இந்தியா பாகிஸ்தானைத் தாக்கியது என்பதை முன்னர் ஒத்துகொள்ளாமல் இருந்த பாகிஸ்தானின் பொய் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதுவும் அவர்களின் வாயில் இருந்தே உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னால், பாகிஸ்தானை இந்தியா தாக்கியது என்று பேசியிருந்தார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப். இப்போது மீண்டும் அதை உறுதி செய்துள்ளார் ஷெபாஸ் ஷெரீப். Operation Sindoor – ஆபரேஷன் சிந்தூர் அஜர்பைஜானில் பேசிய இவர், “மே 9 – 10 நள்ளிரவில், ஃபஜ்ர் பிரார்த்தனைக்குப் பிறகு, … Read more

குற்றாலம் அருவிகளில் குளிக்க 6வது நாளாக தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தினமும் பலத்த மழையும், மாவட்டத்தின் பரவலான பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி: கடந்த 24 மணி நேரத்தில் குண்டாறு அணையில் 68 மி.மீ., அடவிநயினார் அணையில் 56 மி.மீ., கருப்பாநதி அணையில் 55.50 மி.மீ., தென்காசியில் 47 மி.மீ., ராம நதி அணையில் 40 மி.மீ., கடனாநதி அணையில் 39 மி.மீ., … Read more

கேரளாவில் கனமழை; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருவனந்தபுரம்: கேரளாவின் பல மாவட்டங்களில் கனமழை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் இடுக்கி, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று சிவப்பு எச்சரிக்கையும், மீதமுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதனால் பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்களின்படி, “கேரளா … Read more

ரிசர்வ் வங்கியின் தங்க நகைகடன் விதிகள் : தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

Tamilnadu Government, Gold Loan : தங்கநகை கடன் மீதான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி தளர்த்தக்கோரி நிதியமைச்சகம் வலியுறுத்தியிருக்கும் நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் முக்கிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த 2 வீரர்கள் விளையாட மாட்டார்கள்? அப்போ மும்பையின் கதை அவ்வளவுதானா?

Mumbai indians players injured: ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று இன்று (மே 30) நியூ சண்டிகரில் நடைபெறுகிறது. இப்போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டரில் விளையாடுவதால், ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.  இப்போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதும். இந்த … Read more

மெரினா கடற்கரை அருகே போதை பொருள் விற்பனை! வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!

சென்னை: மெரினா கடற்கரை அருகே போதை பொருள் விற்பனை  செய்து வந்த வடமாநில இளைஞர்கள் 3 பேர் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் போதை பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரிகள் மற்றும்  கழிவுநீர் கால்வாய்கள் அருகே மற்றும் குடிசை பகுதிகள், பூங்காங்கள், கடற்கரை பகுதிகளில்  போதை பொருள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் பெண்கள் … Read more

ராஜபுத்திரன் விமர்சனம்: அப்பா – மகன் பாசக்கதைதான்; ஆனால் இது ஏமாற்றமளிக்கும் டெம்ப்ளேட் சினிமா!

90களின் தொடக்கத்தில் நடக்கும் கதையில் ஊரில் நன்மதிப்புடையவராக இருக்கிறார் செல்லையா (பிரபு). தன் மகன் பட்ட முத்துவை (வெற்றி) அதீத பாசத்துடன் வளர்க்கிறார். ஒரு காலத்தில் இருந்த குடும்ப சொத்துகள் எல்லாம் விவசாயம் பொய்த்ததால் கரைந்துவிட, பட்ட முத்து தன் தந்தைக்குத் தெரியாமல் வேலைக்குச் செல்ல முடிவெடுக்கிறார். வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்தை யாருக்கும் தெரியாமல் ஊரிலிருக்கும் சொந்தக்காரர்களிடம் கொண்டு சேர்க்கும் சட்டவிரோத செயலை (வரியைத் தவிர்க்க) செய்யும் லிங்காவிடம் (கோமல் குமார்) பணிக்குச் சேர்கிறார். அங்கு நடக்கும் … Read more

''வைகோவுக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்காதது வருத்தம் அளிக்கிறது'' – துரை வைகோ

திருச்சி: “வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு அளிக்காதது எங்களுக்கு வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. தமிழகத்தின் நலன் கருதி நாங்கள் அதை கடந்து செல்வோம். கூட்டணியில் தொடருவோம்” என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 1978-ம் ஆண்டு தனது 34- வது வயதில் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் … Read more

''முக்கிய பிரச்சினை முடிவுக்கு வந்தது'': காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தை பாராட்டிய சல்மான் குர்ஷித்!

புதுடெல்லி: “ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு பிரிவு 370, அப்பிரதேசம் இந்தியாவின் பிற பகுதியில் இருந்து தனியானது என்ற கருத்தை நீண்ட காலமாக உருவாக்கி வந்தது. அப்பிரிவினை அரசு ரத்து செய்ததன் மூலம் அந்தக் கருத்து இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்கான அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள சல்மான் குர்ஷித், இந்தோனேசியாவில் உள்ள சிந்தனையாளர்கள் … Read more