திருப்பதி பெருமாளை இழிவுபடுத்தி பாடல்; நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை – இந்து தமிழர் கட்சி வலியுறுத்தல்

சென்னை: ‘திருப்பதி பெருமாளை இழிவுபடுத்தி பாடல் வெளியிட்ட நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகைச்சுவை நடிகர் சந்தானம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் திருப்பதி பெருமாளை கேலி செய்யும் விதமாக, ‘பார்க்கிங் காசு கோவிந்தா, பாப்கார்ன் டேக்ஸ் கோவிந்தா, ஹீரோயின் நடிப்பு கோவிந்தா, ஃபேன்ஸோட நிலைமை கோவிந்தா’ என்ற பாடல் … Read more

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு பூஜ்ய வரி பற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடெல்லி: அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை பூஜ்யமாக குறைக்க இந்தியா முன்வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிய நிலையில், அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக தோஹாவுக்கு சென்றுள்ள ட்ரம்ப் அங்குள்ள தொழிலதிபர்கள் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார். அப்போது முதலாவதாக ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் ஆலையை தோஹாவில் அமைப்பது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் … Read more

அமெரிக்காவில் மலையேற்ற விபத்தில் இந்தியர் உட்பட 3 பேர் உயிரிழப்பு

நியூயார்க்: அமெரிக்காவில் நிகழ்ந்த மலையேற்ற விபத்தில் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். வடமேற்கு அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் காஸ்கேட்ஸ் மலைத்தொடர் உள்ளது. இந்நிலையில் சியாட்டில் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநரான விஷ்ணு இரிகிரெட்டி (48) கடந்த சனிக்கிழமை தனது 3 அமெரிக்க நண்பர்களுடன் இந்த மலைத்தொடரின் ‘நார்த் இயர்லி வின்ட்டர் ஸ்பயர்’ பகுதியில் ஏறினார். அப்போது புயல் வருவதை கவனித்த மலேயற்ற குழு பின்வாங்கத் தொடங்கியது. அவர்கள் இறங்கும்போது … Read more

கூலி படத்திற்காக ரூ. 280 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி? லோகேஷ் சம்பளம் எவ்வளவு?

Rajinikanth Salary: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இன்று வெளியாகிறது 10, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்  வெளியாகிறது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இன்று  காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என அறிவிப்பு. தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in,  www.tnresults.nic.in இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் … Read more

இந்திய முறைப்படி மஞ்சள் பூசி, கிரேக்க முறைப்படி திருமணம் செய்த இளவரசி.. வைரலாகும் புகைப்படம்!

கிரேக்கத்தில் 1973-ம் ஆண்டு முடியாட்சி ஒழிப்பு அறிவிக்கப்பட்டபோது மன்னராக இருந்தவர் மன்னர் கான்ஸ்டன்டைன். இவர்தான் கிரேக்கத்தின் கடைசி மன்னர். முடியாட்சி ஒழிக்கப்பட்டாலும் மன்னர் குடும்பத்தினர் சடங்கு ரீதியாகப் பயன்படுத்த மரியாதைக்குரிய பட்டங்களை இன்னும் பயன்படுத்துகின்றனர். இறுதி மன்னர் கான்ஸ்டன்டைனுக்கும் ராணி ஆன்மேரிக்கும் பிறந்த 4-வது குழந்தைதான் இளவரசி தியோடோரா. கிரேக்க இளவரசி திருமணம் லண்டனில் பிறந்த தியோடோரா அங்கேயே வளர்ந்தார். உயர்கல்விக்காக அமெரிக்காவிற்குச் சென்ற அவர் “தியோடோரா கிரீஸ்” என்ற பெயரில் நடிப்பு வாழ்க்கையைத் தொடர்ந்தார். அமெரிக்காவில் … Read more

பிற மத பாடல்களை இப்படி பயன்படுத்துவீர்களா? – சந்தானம் படக்குழுவுக்கு நீதிபதிகள் கேள்வி

சென்னை: சந்தானம் நடித்துள்ள திரைப்படத்தின் பாடலுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பாடலில் சர்ச்சை வரிகள் நீக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘சீனிவாசா கோவிந்தா’ எனும் பாடல், திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் எம்ஜிடி. பாலாஜி தாக்கல் … Read more

சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தவரை திருப்பி அனுப்பும் பணி தொடக்கம்

அகர்தலா: நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களை திருப்பி அனுப்பும் பணி தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கணக்கெடுக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, எந்தவித சட்டப்பூர்வமான ஆவணங்களும் இன்றி நாட்டின் பல பகுதிகளில் தங்கியிருந்த வங்க தேசத்தவர் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானங்கள் மூலமாக திரிபுரா மாநிலம் … Read more

தமிழில் அறிமுகமாகும் 'HIT 3' புகழ் கோமலி பிரசாத்! எந்த படத்தில் தெரியுமா?

HIT 3 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள கோமலி பிரசாத் விரைவில் தமிழில் அறிமுகமாக உள்ளார். விஜய் சேதுபதி, தனுஷ் உடன் நடிக்க ஆசை என்று தெரிவித்துள்ளார்.

பெண்களின் பாதுகாவலனாக திகழ்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் – ஐ.லியோனி!

கோவையில் நடைபெற்ற கழக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு. மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் Ex Mla தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு.