தரமான பேட்டரி, மாஸ் கேமராவுடன் iQOO புதிய ஸ்மார்ட்ஃபோன்.. முழு விவரம் இதோ

iQOO Z10 5G Smartphone Full Details In Tamil: நீங்கள் சீன நிறுவனமான iQOO ஸ்மார்ட்ஃபோனின் புதிய மற்றும் தரமான ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இனி ஒரு செகண்ட் கூட நேரத்தை வீண் அடிக்காமல் iQOO Z10 5G ஸ்மார்ட்ஃபோனை வாங்கிவிடுங்கள். ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 3 செயலி பொருத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு இருக்கிறது. மேலும் அமேசானின் இந்த ஸ்மார்ட்ஃபோனுக்கு மிகப்பெரிய தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த 7,300mAh பேட்டரி கொண்ட இந்த … Read more

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது இன்று சென்னை வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழக,, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 20ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு … Read more

IPL 2025 : 'வேகவேகமாக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்யும் அணிகள்!' – பட்லருக்கு பதில் யார் தெரியுமா?

இந்தியா – பாகிஸ்தான் பதற்ற நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் தொடர் நாளை மறுநாள் முதல் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், வரவிருக்கும் போட்டிகளில் ஆட முடியாத சூழலில் இருக்கும் வீரர்களுக்கு பதிலாக வேகவேகமாக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. IPL 2025 ‘புதிய விதி!’ நடப்பு சீசன் ஒரு வார காலம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்குவதால் போட்டி அட்டவணையில் நிறைய மாற்றங்கள் இருக்கிறது. இதனால் ஒரு சில வெளிநாட்டு வீரர்களால் எஞ்சியிருக்கும் போட்டிகளில் அல்லது ப்ளே ஆப்ஸ் … Read more

விழுப்புரம் நகர நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் நேருஜி வீதி – கிழக்கு பாண்டி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டன. விழுப்புரம் நகரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து ராகவன்பேட்டை வரை நேருஜி வீதி மற்றும் கிழக்கு பாண்டி சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதேபோல் முத்தாம்பாளையம் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு முதல் ஜானகிபுரம் ரயில்வே மேம்பாலம் வரை சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் … Read more

“இந்தியராக பேசினேன்” – லட்சுமண ரேகையை மீறிவிட்டதாக காங். சாடியதற்கு சசி தரூர் விளக்கம்

புதுடெல்லி: “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைப் பொறுத்தவரை நான் ஓர் இந்தியராகப் பேசினேன். நான் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அல்ல” என்று சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டதற்கு, வர்த்தக ரீதியாக தான் கொடுத்த அழுத்தமே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சி அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்றதா? ட்ரம்ப் கூறியதற்கு பிரதமர் மோடி ஏன் … Read more

“புத்திசாலித்தனமா, மிருகத்தனமா… ஈரானுக்கு இரண்டே தீர்வுகள்தான்!” – சொல்கிறார் ட்ரம்ப்

கத்தார்: ஈரானின் அணுசக்தி திட்டத்தைப் பொறுத்தவரை, புத்திசாலித்தனமான தீர்வு வேண்டுமா அல்லது கொடூரத் தாக்குதல் வேண்டுமா என்பதை அந்நாடு முடிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அணு ஆயுத உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் அமெரிக்கா தொடர்ந்து ஈரானை எச்சரித்து வருகிறது. இந்நிலையில், கத்தார் தலைநகர் தோஹா வந்த அமெரிக்க அதிபர் … Read more

இந்த வீரருக்கு இந்திய அணியில் இடமில்லை? யார் அந்த வீரர்? என்ன காரணம்?

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இத்தொடரில் இந்திய அணியில் மாற்று வீரராக மட்டுமே இடம்பெறுவார். அவருக்கு பிளேயிங் 11 இடம் கிடைக்காது என தகவல் வெளியாகி உள்ளது.  தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமானார். இதுவரை 9 … Read more

அமேசானில் மாஸ் அதிரடி ஆஃபர்: 40% தள்ளுபடியில் கிடைக்கும் டாப் லேப்டாப்கள்

Amazon Deals: நீங்கள் ஆன்லைனில் படிக்க விரும்பினாலும் சரி அல்லது வீட்டில் உட்கார்ந்து அலுவலக வேலை செய்ய விரும்பினாலும் சரி. இந்த அனைத்து பணிகளுக்கும் லேப்டாப் மிகவும் தேவைப்படுகிறது. ஆனால் அதன் அதிக விலையின் காரணமாக பெரும்பாலான மக்களால் லேப்டாப் வாங்க முடியவில்லை போகிறது. அதனால்தான், குறைந்த விலையில் வீட்டிற்குக் கொண்டு வருவதற்காக, 40% தள்ளுபடியில் கிடைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில லேப்டாப்களை மக்களுக்காகக் கொண்டு வந்துள்ளோம். அதன் முழு விவரத்தை இங்கே பார்ப்போம்… ஹெச்பி 15 – … Read more

கர்னல் சோபியா குரேஷி : பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி உச்சநீதிமன்றம் கர்னல் சோபியா குரேஷி குறித்து தவறாக பேசிய பாஜக அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வயோமிகா சிங் ஆகியோர் தலைமையிலான இந்திய ராணுவம் பதிலடி கொடுத்திருந்து இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளுக்கு, இந்திய பெண்கள் மூலமே இந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவ்விருபெண்களும் இணையத்தில் வைரலாகினர். மத்திய பிரதேச மாநிலம், மன்பூர் பகுதியில் நடைபெற்ற அரசு … Read more

`ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய சல்யூட்; பாகிஸ்தானால் இதை மறக்க முடியாது!' – ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஶ்ரீநகரில் ராணுவ வீரர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது… “உங்களை (ராணுவ வீரர்கள்) காண்பதில் நான் பெருமை கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஆபரேஷன் சிந்தூரில் நீங்கள் செய்த அனைத்தின் குறித்தும் ஒட்டுமொத்த நாடுமே பெருமை கொள்கிறது. நான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆவதற்கு முன்பு நான் ஒரு இந்தியக் குடிமகன். பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தாலும், ஓர் இந்தியக் … Read more