“பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும், மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை” – புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை,” என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவத்தை பாராட்டி, புதுச்சேரியில் தேசியக் கொடி ஏந்தி பாஜக சார்பில் வெற்றி பேரணி இன்று நடைபெற்றது. புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணிக்கு பாஜக மாநில தலைவர் செல்வகணபதி தலைமை தாங்கினார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், … Read more

ட்ரம்பை விமர்சித்து பதிந்த கருத்தை நீக்கிய கங்கனா – நட்டா அறிவுரை ஏற்பு

புதுடெல்லி: இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்க கூடாது என அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் வசம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அவரது இந்த கருத்தை விமர்சித்து பாஜக எம்.பி-யும் நடிகையுமான கங்கனா ரனாவத் ட்வீட் செய்திருந்தார். பின்னர் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின்படி அதை நீக்கியதாக கங்கனா தெரிவித்துள்ளார். “இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதிகளவில் உற்பத்தியில் ஈடுபட வேண்டாம் என டிம் குக் வசம் ட்ரம்ப் சொன்னது தொடர்பாக நான் பதிவு செய்த … Read more

எங்களின் அணு ஆயுதங்கள் குறித்து இந்தியா கூறியது விரக்தியின் வெளிப்பாடு: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷஃப்கத் அலி கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தக் கருத்து பொறுப்பற்றது. இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான பாகிஸ்தானின் பாரம்பரிய பாதுகாப்பு வழிமுறைகள் மீது இந்தியாவுக்கு உள்ள ஆழ்ந்த விரக்தியையே இது வெளிப்படுத்துகிறது. ‘அணுசக்தி அச்சுறுத்தல்’ இருப்பதாக … Read more

ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தை சேர்ந்த மொபைல் போன் உற்பத்தி நிறுவனம் ஐடெல் மொபைல். பெரும்பாலும் பட்ஜெட் விலையில் சர்வதேச சந்தையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் தற்போது ஐடெல் ஏ90 மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது ‘ஏ’ வரிசை மாடல்களில் ஒன்றாக வெளிவந்துள்ளது. பட்ஜெட் விலையில் … Read more

சிந்து நதி நீர் விவகாரம்: இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. ஆனா கண்டிசன் இதுதான்!

இந்தியா – பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், சிந்து நதி ஒப்பந்தத்தை மீண்டும் தொடர பாகிஸ்தான் கேட்டிருக்கிறது. 

சத்யராஜ் – காளி வெங்கட் நடிக்கும் மெட்ராஸ் மேட்னி! வெளியானது பர்ஸ்ட் லுக்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் – சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெங்கட் பிரபு – ஜீ.வி. பிரகாஷ் குமார் இணைந்து வெளியிட்டனர்.

அமலுக்கு வந்த புதிய விதி.. ஐபிஎல் அணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக மே 8ஆம் தேதி ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தப்பட்டதால் வரும் 17ஆம் தேதி ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க உள்ளது. இதில் சில வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த நிலையில், ஐபிஎல் நிர்வாகம் ஒரு அதிரடி விதியை … Read more

உங்கள் வீட்டு ஏசி வெடிக்காமல் இருக்க நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!!

AC Tech News Tamil : கோடைக்காலத்தில் ஏர் கண்டிஷனர் (ஏசி) இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஆனால், சரியான பராமரிப்பு இல்லாவிட்டால் அல்லது தவறான பயன்பாடு காரணமாக ஏசி வெடிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. இது மின்சார கோளாறுகள், கூலிங் காரணமாக ஏற்படும் கசிவுகள் அல்லது அதிகப்படியான அழுத்தம் போன்ற காரணிகளால் ஏற்படலாம். இதனால் உயிருக்கும், உங்கள் வீட்டுக்கும் பெரும் இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் ஏசியை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிமுறைகளை இங்கே தெரிந்து … Read more

துருக்கியில் இருந்து ஆப்பிள் இறக்குமதியைப் புறக்கணித்ததற்காக புனே-வைச் சேர்ந்த வர்த்தகருக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல்

துருக்கியிலிருந்து ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை நிறுத்த சில நாட்களுக்கு முன் முடிவு செய்த புனே-வைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு இன்று பாகிஸ்தானிலிருந்து மிரட்டல் வந்துள்ளது. துருக்கியிலிருந்து ஆப்பிள், லிச்சி, பிளம்ஸ், செர்ரி மற்றும் உலர் பழங்களை புனே வர்த்தகர்கள் இறக்குமதி செய்து வந்தனர். இதில் ஆப்பிள் இறக்குமதி மட்டும் ₹1,200 கோடி மதிப்புடையது என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவான துருக்கியின் நிலைப்பாட்டை எதிர்த்து புனேவில் உள்ள பழ வியாபாரிகள் குழு ஒன்று துருக்கிய ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை … Read more

இத்தாலி ஓபன் டென்னிஸ்: லோரென்சோ முசெட்டி அரையிறுதிக்கு தகுதி

ரோம், பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் லோரென்சோ முசெட்டி (இத்தாலி), அலெக்சாண்டர் சுவரெவ் (ஜெர்மனி) உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டமுசெட்டி 7-6 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இவர் அரையிறுதியில் கார்லஸ் அல்காரஸ் உடன் மோத … Read more