''முஸ்லிம்களையோ, காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள்'': உயிரிழந்த கடற்படை அதிகாரியின் மனைவி வேண்டுகோள்
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக, முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள் என்று தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி வேண்டுகோள் விடுத்துள்ளார். வினய் நர்வாலின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின் கர்னாலில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், நர்வாலின் தாயார் மற்றும் மனைவி ஹிமான்ஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய குருகிராமைச் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற ஹிமான்ஷி நர்வால், “அவர் எங்கிருந்தாலும், … Read more