'அன்றும், இன்றும், என்றும் அருணாச்சல் எங்களுடையதே' – இந்தியா திட்டவட்டம்

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. பெயரை மாற்றினாலும் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை சீனாவால் மாற்ற முடியாது என்று கண்டனத்தைக் காட்டமாக பதிவு செய்துள்ளது இந்தியா. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அருணாச்சாலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கிறது. இதில் சீனாவின் முயற்சிகள் எல்லாமே வீணானவை, அபத்தமானவை. … Read more

மேலும் ஒரு பாலியல் வழக்கில் ஞானசேகரன்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வாக்கு போடப்பட்டுள்ளது/ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் … Read more

சலசலக்கும் நீரில் படர்ந்த ஈரம் – ரீட்டா டவ் | கடல் தாண்டிய சொற்கள் – பகுதி – 5

நீங்கள் வேலை முடிந்து சோர்வாகப் பேருந்தின் முன்பக்கத்தில் அமர்ந்து சென்று கொண்டிருக்கும்போது யாரேனும் அருகில் வந்து இருக்கையிலிருந்து எழுப்பி விட்டிருக்கிறார்களா? வெளியில் சொல்ல முடியாதவற்றை மௌனமாகக் கடந்து செல்வதும், பேச முடிந்ததைப் பேச்சு மொழியிலோ எழுத்து மொழியிலோ வெளிப்படுத்துவதும் சமூகத்தின் இயல்பே என்றாலும் கவிஞர்கள் புறவாழ்வியலின் நிகழ்முறைகளைப் படைப்புக்கான கச்சாப்பொருட்களாக எடுத்துக்கொண்டு சமூகக் கவிதைகளில் புற யதார்த்தத்தை மையப்படுத்துகின்றனர். கவிஞர் ரீட்டா டவ் கவிதையின் வழியாகச் சமூக அரசியலை, போதாமைகளை நறுக்குத் தெறித்தாற்போல் சொல்வது எளிதாக அமைவதில்லை. … Read more

பாதுகாப்பு தளவாட ஆலைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப ஊழியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை: “பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்” என பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டிஆர்டிஓ மாநாட்டில் பேசிய போது ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் தரம் மற்றும் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும், பாதுகாப்பு துறை பொதுத்துறை நிறுவனங்கள் சர்வதேச தர சவால்களை எதிர்கொள்ளவும் ஏற்றுமதி சார்ந்த … Read more

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பாதுகாப்பு அதிகரிப்பு: பின்னணி என்ன?

புதுடெல்லி: பாகிஸ்தான் – இந்தியா போர் பதற்றம் சற்று தணிந்திருக்கும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 70 வயதான வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் அதிகரித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது பாதுகாப்பில் சிறப்பு குண்டு துளைக்காத கார் சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அவரது வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜெய்சங்கருக்கு ஏற்கெனவே மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமாண்டோக்களால் வழங்கப்படும் Z-பிரிவு … Read more

விராட் கோலி, ரோஹித் சர்மா சம்பளம் ஓய்வுக்கு பின் குறையுமா…?

India National Cricket Team: இந்திய கிரிக்கெட் சமூகத்திற்கு கடந்த வாரம் என்பது மிகவும் துயரமான, வருந்தத்தக்க வாரம் என்றே கூறலாம். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றது மட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட்டின் உச்சம்பெற்ற இந்திய நட்சத்திரமான விராட் கோலியும் ஓய்வை (Virat Kohli Retirement) அறிவித்தது இந்திய கிரிக்கெட் மனதில் வலியை ஏற்படுத்தியிருக்கிறது.  ரோஹித் சர்மா (Rohit Sharma) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் மூலம் … Read more

பொள்ளாச்சி வழக்கு.. மூன்று தரப்புக்கு பாடம்..

பொள்ளாச்சி வழக்கு.. மூன்று தரப்புக்கு பாடம்.. இளம் பெண்களிடம் நெருக்கமாக பழகி வற்புறுத்தியும் மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவும் எடுத்து ஒரு கும்பலே மிரட்டி வந்ததுதான் பொள்ளாச்சி பயங்கரம். 2019 ஆம் ஆண்டு துவக்கத்தில் நண்பரை நம்பி காரில் ஏறிச் சென்ற ஒரு இளம் பெண் நான்கு இளைஞர்களால் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டு தொடர் சித்ரவதைகளுக்கு ஆளானார். வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று கும்பல் அடிக்கடி மிரட்டி பணம் கேட்டதால் வேறு … Read more

ஊட்டியில் உற்சாகம் காட்டிய முதல்வர் ஸ்டாலின்! | Photo Album

ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் தமிழக முதல்வர் ஸ்டாலின் Source link

முன்னாள் தலைமைச் செயலர் இறையன்புவின் தந்தை மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சேலம்: தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் சேலத்தில் இன்று (மே 14) காலமானார். அவருக்கு வயது 91. அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு சேலத்தைச் சேர்ந்தவர். சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகரில் இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் வசித்து வந்தார். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக, வெங்கடாசலம் (91) அவரது இல்லத்தில் இன்று மதியம் காலமானார். மறைந்த வெங்கடாசலத்தின் மனைவி … Read more

கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: ம.பி அமைச்சர் மீது வழக்குப் பதிய ஐகோர்ட் உத்தரவு

போபால்: கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அமைச்சர் விஜய் ஷா மீது நான்கு மணி நேரத்துக்குள் வழக்குப் பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்னல் சோபியா குரேஷியை ‘பயங்கரவாதத்தின் சகோதரி’ என்று அவர் அழைத்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி அதுல் ஸ்ரீதரன், … Read more