பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர் இந்தியாவிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி, காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, அட்டாரி-வாகா எல்லை மூடல் என அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்தது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில், பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் பகுதியில் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லை பாதுகாப்பு … Read more

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

துபாய், மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டின் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்டர்களின் தரவரிசையில் இந்திய துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (727 புள்ளி), ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் … Read more

ஈகுவடார் நாட்டில் 55 நாட்கள் நடுக்கடலில் சிக்கி தவித்த மீனவர்கள் பத்திரமாக மீட்பு

லிமா, தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லிமாவில் இருந்து மீன்பிடி படகு ஒன்று புறப்பட்டது. 5 மீனவர்களுடன் சென்ற அந்த படகு கடந்த ஜனவரி மாதம் சேதம் அடைந்தது. இதனால் வீடு திரும்ப முடியாமல் மீனவர்கள் நடுக்கடலில் சிக்கிக்கொண்டனர். எனவே அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பக்கத்து நாடான ஈக்வடாரின் கலபகோஸ் தீவு அருகே 5 மீனவர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பெரு நாட்டுக்கு பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். 55 நாட்கள் … Read more

யானைகளுக்கு கரும்பு, பாகன்களுக்கு குடியிருப்பு! – முதல்வர் ஸ்டாலின் முதுமலை ட்ரிப் அப்டேட்ஸ்..

நீலகிரி கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வான 127 – ம் ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சியை நாளை ( 15-05-2025) காலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஊட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்‌. முதல்வர் ஸ்டாலின் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நேற்று மனைவியுடன் சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு கரும்பு உள்ளிட்ட உணவுகளை வழங்கினார். முதல்வர் ஸ்டாலினின் … Read more

சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கூடுதல் மருந்து கவுன்ட்டர்கள் இன்று திறப்பு: இயக்குநர் ஆர்.மணி தகவல்

சென்னை: சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகள் சிரமப்படாமல் இருக்க கூடுதலாக மருந்து கவுன்ட்டர்கள் இன்று திறக்கப்படுகிறது என்று மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மருந்தகத்தில் மருந்து வாங்குவதற்காக பெரிய வரிசை இருப்பதை அரசு விரும்புகிறதா? என்று ஒரு செய்தி சமூக வலைதளத்தில் நேற்று பரவியது. தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அந்த செய்தியை … Read more

இந்தியா – பாக். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்க தலையீடு: மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப்

சவுதி அரேபியா: இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தனது தலையீடு இருந்தது என்று மீண்டும் வலியுறுத்திப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். “நண்பர்களே வாருங்கள் நாம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம். கொஞ்சம் வர்த்தகம் செய்வோம். அணு ஆயுதங்களை விற்க வேண்டாம். நீங்கள் உருவாக்கும் அழகான பொருட்களை விற்பனை செய்வோம். இரண்டு நாடுகளிலும் சக்தி வாய்ந்த, வலிமையான, நல்ல தலைவர்கள் உள்ளனர் என்றேன்.” என்று தனது சமரசப் பேச்சு விவரத்தை அவர் பகிர்ந்துள்ளார். சவுதி … Read more

தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் வரை கடன்! எந்த ஒரு ஆவணமும் தேவை இல்லை!

தொழில் முனைவோரை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குறைந்த வட்டியில் கடன் திட்டங்கள் உள்ளது.

பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் ரெஜினா கசாண்ட்ரா!

தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அங்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. இதனிடையே அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – எப்படி விண்ணப்பிப்பது?

12th supplementary examination : 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இந்த துணைத் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது, துணைத்தேர்வுகள் நடக்கும் தேதிகள் என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..

ஸ்கிப்பிங் செய்தே 95 கிலோவை குறைத்த பெண்… ஜிம்முக்கு போகாமல் உடல் எடை கரைத்தது எப்படி?

Weight Loss Journey: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமாக அறியப்படும் பெண் தான் ஜைனப் ஜெய்யேசிமி (Zainab Jaiyesimi) என்பவர் அவரது உடல் எடை குறைப்பு பயணம் குறித்து தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்துள்ளார்.  Weight Loss Journey: 95 கிலோ உடல் எடையை குறைத்த பெண்! Zainylee என்ற அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் 95 கிலோ அளவிற்கு உடல் எடையை குறைத்த தனது முயற்சி குறித்து பதிவு செய்திருக்கிறார். கடந்த … Read more