WhatsApp மூலம் நிமிடங்களில் LIC பிரீமியம் செலுத்துவது எப்படி? முழு செயல்முறை இதோ

LIC Premium Payment: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) முதலீட்டாளர்களுக்கு பல்வேறு வகையான காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது. இவற்றில் ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு மற்றும் ஓய்வூதியம் தொடர்பான திட்டங்கள் போன்றவை அடங்கும். LIC நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். மேலும் LIC ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பாலிசிகளை வெளியிடுகிறது. எந்தவொரு பாலிசியை பெற வேண்டுமானாலும், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை பிரீமியமாக டெபாசிட் செய்ய வேண்டும். முதிர்வு நேரத்தில் எவ்வளவு … Read more

யு பி எஸ் சி தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமனம்

டெல்லி யு பி எஸ் சி தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமிக்கப்பட்டுல்ள்ளார். மத்திய பணியாளர் தேர்வாணையமான் யுபிஎஸ்சி இந்தியாவின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.  யுபிஎஸ்சி தலைவராக பிரீத்தி சூடான் பணி புரிந்து வந்தார். கடந்த ஏப்ரல் 29ம் தேதியன்று பிரீத்தி சூடானின் பதவிக்காலம் முடிந்த பிறகு, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவர் பதவி காலியாக இருந்தது. எனவே புதிய யு.பி.எஸ்.சி. தலைவராக … Read more

"அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் வர்த்தக விவகாரம் வரவில்லை" – ட்ரம்ப் கூற்றுக்கு இந்தியா மறுப்பு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் (ஏப்ரல் 22) பதிலடியாக இந்திய ராணுவம், மே 7-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor)’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. அடுத்தநாளே, ஜம்மு காஷ்மீர் மீது ட்ரோன் தாக்குதல் நடைபெற, இந்திய ராணுவமும் பாகிஸ்தான் மீது எதிர் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரிக்கவே, அமெரிக்கா இதில் தலையிட்டது. மோடி – ட்ரம்ப் … Read more

ரூ.587 கோடியில் கட்டப்பட்ட 5,180 வீடுகளை விரைவில் முதல்வர் திறக்கிறார்: அமைச்சர் அன்பரசன் தகவல்

சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 13 திட்டப் பகுதிகளில் ரூ.586.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கைலாசபுரம், மீனவர் குடியிருப்பு, செட்டித் தோட்டம் மற்றும் மீனாம்பாள் சிவராஜ் நகர் ஆகிய திட்டப் பகுதிகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: … Read more

இந்தியாவை விட்டு செல்லமாட்டேன்: தாய் வீடு என ரஷ்ய பெண் உருக்கம்

புதுடெல்லி: எல்லையில் பாகிஸ்தானுடன் போர்ப்பதற்றம் இருந்தபோதிலும் இந்தியாவை விட்டு செல்லமாட்டேன் என்று இந்தியாவில் வசிக்கும் ரஷ்யாவை சேர்ந்த பெண் உருக்கமாக பேசியுள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்தவர் போலினா அக்ரவால். நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியுள்ளார். அவர் தற்போு உத்தராகண்ட் மாநிலம் குர்கானில் வசித்து வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தானுடனான எல்லைப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியையும், ராணுவ வீரர்களையும் அவர் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகியுள்ளது. … Read more

‘ஜி’ லோகோவை அப்டேட் செய்த கூகுள் நிறுவனம்!

நியூயார்க்: கூகுள் நிறுவனம் தனது ‘கூகுள் தேடல்’ (Google Search) செயலியில் உள்ள ‘ஜி’ லோகோவை கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அப்டேட் செய்துள்ளது. இதன் மூலம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இதற்கு முன்பு சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் என நான்கு வண்ணங்களும் தனித்தனியே இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நான்கு வண்ணங்களும் ஒன்றோடு ஒன்றாக கலந்து ‘கிரேடியண்ட்’ லுக்கில் உள்ளது. இந்த புதிய லோகோ ஆப்பிள் போன் பயனர்கள் மற்றும் கூகுளின் … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக கனிமொழி சொன்ன முக்கிய தகவல்!

இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு காயத்திற்கு மருந்து போடுவது போல் இருக்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு இருப்பது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதீ கிடைப்பதாக இருக்கிறது – கனிமொழி.

Vijayakanth: அம்மா அப்பா பேரை ஆசையா வச்சார் – 'ஆண்டாள் அழகர்' கல்லூரி குறித்து விஜயகாந்த் ரசிகர்கள்

சென்னையை அடுத்த மாமண்டூரில் மறைந்த நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனருமான விஜயகாந்த் நிறுவிய ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை வேறொரு கல்விக் குழுமத்திற்கு விற்பனை செய்திருக்கிறார்கள் விஜயகாந்த் குடும்பத்தினர். பெரம்பலூரைத் தலைமையிடமாக் கொண்டு இயங்கி வரும் தனலட்சுமி ஶ்ரீனிவாசன் கல்விக் குழுமம் ஆண்டாள் அழகர் கல்லூரியை வாங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கல்லூரியை நிர்வகிப்பதில் சிரமங்களைச் சந்தித்து வந்ததாலேயே இப்படியொரு முடிவை விஜயகாந்த் குடும்பம் எடுத்ததாகத் தெரிய வருகிறது.  சுமார் 150 கோடி ரூபாய் … Read more

என் சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி

சென்னை டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்பட வெற்றியால் தனத் சம்பளத்தை உயர்த்தப்போவதில்லை என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். சசிகுமார் தற்போது நடித்துள்ள ‘டூரிஸ்ட் பேமலி’. படத்தை அபிஷன் ஜீவிந்த் இயக்க சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த மே 1-ந் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் நடந்த நன்றி தெரிவிக்கும் … Read more

Thudarum: “மௌன ராகம் மல்லிகாவ மக்கள் கொண்டாடுறாங்க" – நடிகை, தயாரிப்பாளர் சிப்பி ரஞ்சித் பேட்டி

‘துடரும்’ படம் வெற்றி பெறும்னு தெரியும். ஆனால், இந்தளவுக்கு ஒரு மாபெரும் வெற்றி அடையும்னு எதிர்பார்க்கல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுவும், தமிழ் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறாங்க!” – என உற்சாகத்தோடு பேச ஆரம்பிக்கிறார்கள், ரஞ்சித் – சிப்பி தம்பதியர். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி 200 கோடி ரூபாய்க்குமேல் வசூலை வாரிக்குவித்து ‘தொடர்’ சாதனை செய்துகொண்டிருக்கும் ‘துடரும்’ படத்தின் தயாரிப்பாளர்கள்தான் ரஞ்சித்தும் அவரின் மனைவி நடிகை சிப்பியும். அதுவும், நடிகை சிப்பி ‘மெளனராகம்’ சீரியல் மூலம் … Read more