மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி: மாவட்ட ஆட்சியர் தகவல்

சென்னை: குரூப் – 4 தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சென்னையில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். அனைத்துவகை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதையொட்டி தேர்வெழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத் … Read more

அமெரிக்கா, சீனாவை அதிர்ச்சியில் உறைய வைத்த ‘ஆகாஷ்தீர்’

புதுடெல்லி: இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு கவசமான ‘ஆகாஷ்தீர்’, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. கடந்த 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது. இந்த போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவும் துருக்கியும் நேரடியாக களம் இறங்கின. துருக்கியின் சார்பில் அதிநவீன பைகார் யிஹா3 ரக ட்ரோன்கள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன. கடந்த சில நாட்களாக லடாக், காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் எல்லைப் பகுதிகளில் … Read more

பாகிஸ்தானின் தீவிரவாத செயலை பொறுத்துக்கொண்டால் உலக நாடுகளின் அழிவுக்கு வழிவகுக்கும்: பலுசிஸ்தான் விடுதலை படை

இஸ்லாமாபாத்: சர்வதேச சமூகம் பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களை தொடர்ந்து பொறுத்துக்கொண்டால் அது முழு உலகின் அழிவுக்கும் வழிவகுக்கும் என்று பலூசிஸ்தான் விடுதலை படை (பிஎல்ஏ) தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிஎல்ஏ செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலூச் கூறியதாவது: பாகிஸ்தானின் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் தொடர்ந்து சகிப்புத்தன்மை காட்டுவது தெற்காசிய பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையை உருவாக்கும். சர்வதேச பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கும் பாகிஸ்தான் இருப்பு முழு உலக அழிவுக்கும் விரைவில் வழிவகுக்கும். ஏனெனில், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற … Read more

சூர்யா படத்தில் நடிக்கும் விஜய்? வெளியான முக்கிய தகவல்!

Suriya 46 Update: லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தனது 46வது படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

எம்பி கனிமொழியிடம் தூத்துக்குடி சங்கம் வைத்த முக்கிய கோரிக்கை!

தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க  நிர்வாகிகள் நேற்று எம்பி கனிமொழியை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி மத்திய அரசு பாகிஸ்தான் தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. பஹல்காமில் நட்ந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது.  இந்தியா பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாவை இந்தியா ரத்து செய்து நாட்டை விட்டு வெளியேற்றியது. இதே நடவடிக்கையை பாகிஸ்தானும் எடுத்தது. மேலு, இருநாடுகளும் வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்களில் பரஸ்பரம் நடவடிக்கை எடுத்தன. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து இருநாடுகளும் ஏவுகணை, டிரோன் மூலம் நடத்திய தாக்குதல் தற்போது … Read more

தென்காசி: பணி அனுபவ சான்று வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம்; கல்வித்துறை அதிகாரி கைது!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் திருவேங்கடம் வட்டம், செவல்குளத்தில் உள்ள செயின்ட் பவுல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அவர், அந்த பள்ளியில் பணிபுரிந்த காலங்களுக்கு பணி அனுபவ சான்று கேட்டு பள்ளி தாளாளரிடம் விண்ணப்பித்துள்ளார். அதன்படி, பணி அனுபவ சான்றை தயார் செய்த பள்ளி தாளாளர் நாகராஜ் (46) என்பவர், அதில் மேலொப்பம் பெற்று, அலுவலக நடைமுறைகளை முடித்து தருவதற்காக தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்தில் (தனியார் பள்ளி) சமர்ப்பித்துள்ளார். … Read more

தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்கக் கோரி மே 23-ல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

நாமக்கல்: தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை திறக்கக் கோரி வரும் 23-ம் தேதி மாநில அளவில் மணல் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மணல்லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் 55 ஆயிரம் மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, தமிழகத்தில் உடனடியாக அரசு மணல் குவாரிகளைத் திறக்க அரசு … Read more

இந்தியா- பாகிஸ்தான் போருக்குப் பின் பிரம்மோஸ், ஆகாஷ் ஏவுகணைகளை விரைந்து விநியோகிக்க அறிவுறுத்தல்

ஹைதராபாத்: பிரமோஸ், ஆகாஷ் போன்ற ஏவுகணைகள் மற்றும் ஏவுகணைகளின் பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் விரைந்து விநியோகம் செய்ய மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரில் தரை வழி தாக்குதலை விட வான் வழி தாக்குதல்களான ஏவுகணை தாக்குதல் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்தான் அதிகளவில் இருந்தது. பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழிக்க இந்தியாவும் அதிகளவிலான வான் பாதுகாப்பு ஏவுகணைகளை பயன்படுத்தியது. அதேபோல் பாகிஸ்தான் மீதான தாக்குதல் நடவடிக்கைகளுக்கும் ஸ்கால்ப், ஹேமர், … Read more

தமிழ்நாடு இல்லை! GST மூலம் அதிக வருமானம் தரும் மாநிலம் எது தெரியுமா?

இந்தியாவிற்கு GST வருமானம் முக்கிய ஆதாரமாக இருந்து வரும் நிலையில், அதிக GST வருமானம் தரும் மாநிலங்கள் எது என்று தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டிற்கு எத்தனையாவது இடம்?