ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும்.. இந்த 3 அணிகளுக்கு பெரிய பாதிப்பு!

ஐபிஎல் 2025 போட்டி மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட அனைத்து லீக் போட்டிகளும் முடிவடைந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக மீதமுள்ள போட்டிகள் நிறுத்தப்பட்டது. கடந்த வாரம் தரம்சாலாவில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் போட்டிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி அனைவரது மத்தியில் இருந்தது. இதனால் … Read more

DD Next Level: "கடவுளை அவமதிக்கும் 'கோவிந்தா' பாடலை நீக்க வேண்டும்"-பவன் கல்யாண் கட்சியினர் கோரிக்கை

சந்தானம் நடித்திருக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்யா தயாரிப்பில் சந்தானத்துடன் கௌதம் மேனன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கிறார்கள். சினிமா விமர்சகராக சந்தானம் நடித்திருக்கும் காமெடி கலாட்டா வகையிலான இப்படத்தின் ‘Kissa 47’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இப்பாடலில் கடவுள் பெருமாளின் ‘ஶ்ரீனிவாச கோவிந்தா’ வரிகள் இடம்பெற்றிருக்கும். ஜாலியான, குத்தாட்டம் போடும் பாடலில் கடவுள் குறித்து வரிகள் சேர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. … Read more

நாளை மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் மாற்றுப்பதையில் இயக்கம்

சென்னை பராமரிப்பு பணி காரணமாக நாளை மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில். “மதுரை கோட்டத்தில் கொடைக்கானல் சாலை மற்றும் வாடிப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மயிலாடுதுறையில் இருந்து நாளை (புதன்கிழமை) பகல் 12.10 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்:16847) மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, … Read more

பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். … Read more

ஸ்ரீநகர் விமான நிலையம் திறப்பு: ஹஜ் விமான சேவையை தொடர ஸ்பைஸ் ஜெட் திட்டம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் திறக்கப்பட்ட ஸ்ரீநகர் விமானநிலையத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) முதல் மீண்டும் ஹஜ்-க்கு விமான சேவையைத் தொடங்க ஸ்பைஸ் ஜெட் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியா பாகிஸ்தானிடையே நிலவிய பதற்றம் காரணமாக நாட்டில் மூடப்பட்ட 32 விமானநிலையங்களில் ஸ்ரீநகர் விமானநிலையமும் ஒன்று. இந்த விமானநிலையம் குடிமக்களின் பயன்பாட்டுக்கு நேற்று (திங்கள்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டது. ஹஜ் விமான சேவை குறித்து ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், அதன் ஹஜ் … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை வரவேற்கும் தலைவர்கள்

சென்னை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டதை தலைவர்கள் வரவேற்றுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கினார்.  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். நீதி நிலைநாட்டப்பட்டது என தெரிவித்து வருகிறார்கள். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தலைவர்கள் … Read more

கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் தாலி கட்டிக்கொண்டு ஆடிப்பாடிய திருநங்கைகள்

கள்ளக்குறிச்சி: கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் பூசாரி கரங்களால் தாலிக் கட்டிக் கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் 18 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இதில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் திருநங்கைகள் திரளாக கூத்தாண்டவரை மணவாளனாக ஏற்று, திருமணம் செய்துகொள்கின்றனர். அதன்படி, கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 19-ம் தேதி … Read more

குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: கேரள நீதிமன்றம் தீர்ப்பு

திருவனந்தபுரம்: கேரளாவின் நந்தன்கோட்டில் 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது பெற்றோர், சகோதரி உட்பட குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கேரளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவனந்தபுரம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் 4-ன் நீதிபதி கே.விஷ்ணு இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார். வழக்கு விசாரணையின் போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர், குற்றவாளியான கேடல் ஜேன்சன் ராஜாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதாடினார். ஆனால், நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று மூத்த காவல் துறை அதிகாரி … Read more

வைகை அணையில் நீர் திறப்பு நிறுத்தம்

மதுரை மதுரையில் சித்திரை திருவிழா முடிவடந்ததால் வைகை அணையில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதியில் இருந்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் முதல் நாளில் வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு பிறகு அடுத்தடுத்த நாட்களில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. கள்ளழகர் … Read more

கோவை, வேலூர், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், வேலூர், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (மே 15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டம் சோலையாரில் 7 செ.மீ., சின்கோனாவில் 6 செ.மீ. மழை பதிவாகியது. … Read more