இக்கட்டான நிலையில் ஆர்சிபி… ரஜத் பட்டிதார் காயத்தால் கேப்டன்ஸி யாருக்கு போகும்?

IPL 2025, Royal Challengers Bangalore: இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக மே 9ஆம் தேதி ஐபிஎல் நிர்வாகக் குழுவால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஐபிஎல் தொடரின் மீதமுள்ள 13 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் ஆட்டங்களுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. IPL 2025 RCB: பிளே ஆப் ரேஸ்ஸில் யார் யார்? பெங்களூரு, டெல்லி, ஜெய்ப்பூர், அகமதாபாத், லக்னோ, மும்பை என … Read more

பாஜக மாநிலத்தலைவர் பொள்ளாச்சி தீர்ப்புக்கு வரவேற்பு

சென்னை பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை வரவேற்றுள்ளார்,  பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில், ”பல பெண்களின் வாழ்வை சீரழித்து, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மிகவும் வரவேற்பிற்குரியது. பெண்கள் பாதுகாப்பை உருக்குலைக்கும் குற்றாவாளிகள் நீதியின் பிடியில் இருந்து என்றும் தப்பிக்க … Read more

`பாகிஸ்தானிடமிருந்து பறிமுதல்செய்த ஆயுதங்களை எங்களிடம் கொடுங்கள்'- இந்தியாவிடம் பலுசிஸ்தான் கோரிக்கை

பலுசிஸ்தான் விடுதலை முன்னணி (BLF) தளபதி அல்லா நாசர் பலோச்சின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 30 நிமிடம் நீளும் அந்த வீடியோவில் அவர், சர்வதேச சமூகம் மற்றும் இந்திய நோக்கி பேசுகிறார். பாகிஸ்தானை பாசிச அரசு என விமர்சிக்கும் அவர், பலுசிஸ்தான் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அல்லா நாசர் பலோச் நீண்டநாட்களாக பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு அவர் இந்தியாவில் மரணமடைந்ததாக கூறப்பட்டது. … Read more

திமுக Vs அதிமுக: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பும், எதிர்வினை அரசியலும்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து திமுக, அதிமுக எதிர்வினை ஆற்றியுள்ளன. 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி … Read more

போர் நிறுத்தத்துக்கு ட்ரம்ப்பின் ‘வர்த்தக அச்சுறுத்தல்’ காரணமா? – இந்தியா திட்டவட்ட மறுப்பு

புதுடெல்லி: ‘போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் வர்த்தகம் நிறுத்தப்படும்’ என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை, ட்ரம்ப்பின் வர்த்தக அச்சுறுத்தல் கூற்று உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அவற்றுக்கு பதிலளித்த ரந்திர் ஜெய்ஷ்வால், “ஜம்மு காஷ்மீர் தொடர்பான எந்தவொரு பிரச்சினையும் பாகிஸ்தானுடன் இருதரப்பு ரீதியாக மட்டுமே விவாதிக்கப்படும் … Read more

CBSE Result 2025: சிபிஎஸ்இ 12 தேர்வு முடிவுகள் வெளியானது, Digilocker மூலம் செக் செய்வது எப்படி?

CBSE Result 2025: மாணவர்கள் CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான cbse.gov.in, results.cbse.nic.in ஆகியவற்றில் பார்க்கலாம். CBSE தேர்வு முடிவுகளை வலைத்தளங்களைத் தவிர, மாணவர்கள் SMS, Digilocker மற்றும் UMANG செயலி மூலமும் தெரிந்துகொள்ளலாம்.

Tourist Family: `20 வருஷத்துக்கு அப்புறம் இந்த மாதிரி ஒரு கதாபாத்திரம்…' – நடிகை சிம்ரன்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடிப்பில் வெளியான படம் `டூரிஸ்ட் ஃபேமிலி’. ‘குட் நைட்’, ‘லவ்வர்’ படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருந்தது. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். டூரிஸ்ட் ஃபேமிலி மே 1 … Read more

திமுக அரசு சட்டபூர்வ உரிமைகளை நிலைநாட்டுகிறது : துணை முதல்வர் உதயநிதி

சென்னை திமுக அரசு மக்களின் சட்டபூர்வ உரிமைகளை நிலை நாட்டுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், ”சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா கிடைப்பதில் இருந்த சிரமங்களை நீக்கி பட்டா வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் பேரில், ஓராண்டுக்குள் 1.38 இலட்சம் பட்டாக்களை நம் திராவிட மாடல் அரசு வழங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம், திருவொற்றியூரில் நடைபெற்ற அரசு விழாவில் … Read more

சுனாமியை வர வைக்கும் பயங்கர ஆயுதம்… இந்த 2 நாடுகளிடம் மட்டுமே இருக்கு!

Dangerous Underwater Weapon: சுனாமியையே ஏற்படுத்தும் நீருக்கடியில் இயங்கக்கூடிய ஆயுதங்களை இந்த இரண்டு நாடுகள் தன்வசம் வைத்துள்ளன. அவை குறித்து இங்கு பார்க்கலாம்.

`அதிமுக வெட்கி தலைகுனிய வேண்டும்; யாரைக் காப்பாற்ற நினைத்தார்களோ…' – தீர்ப்பு குறித்து கனிமொழி

 பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை என்ற கடுமையான தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பெண்களுக்கு நடத்த கொடுமைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு  நியாயமானது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஒரு நியாயம் கிடைத்திருக்கிறது. குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கனிமொழி பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்கள் வெளியிடாமல் அவர்களுக்கு  நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. … Read more