DD Next Level: "நான் கடவுளைக் கிண்டல் செய்யமாட்டேன்" – 'கோவிந்தா' பாடல் விவகாரத்தில் சந்தானம் பளீச்

சந்தானம் நடித்திருக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்யா தயாரிப்பில் சந்தானத்துடன் கௌதம் மேனன், யாஷிகா ஆனந்த் ஆகியோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் ஆர்யா, சந்தானம், இயக்குநர் பிரேம் ஆனந்த் என மூவரும் கலந்து கொண்டனர். செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சந்தானம், “‘கோவிந்தா’ பாடல் கடவுளைக் கிண்டல் செய்வது கிடையாது. நிறையப் பேர் நிறைய விஷயங்களைச் சொல்வார்கள். படம் … Read more

அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்தே போர் நிறுத்தம் ஏற்பட்டது : அதிபர் டிரம்ப் புதிய தகவல்

“அமெரிக்கா உடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக போரை நிறுத்துங்கள்” என்று கூறியதாலேயே இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை கூறினார். ரஷ்யா – உக்ரைன் போன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டும் அணு ஆயுதம் வைத்திருக்கும் அண்டை நாடுகள் என்ற போதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுடன் இந்தியா மோதுவது அணு ஆயுதப் போருக்கு வழி வகுத்திருக்கும் … Read more

Vetrimaaran: "20 ஆண்டுகளுக்கு முன்பு, நானும் அதே சூழலில்தான் இருந்தேன்" – வெற்றி மாறன் ஓப்பன் டாக்

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் ‘விடுதலை 2’ திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது ‘வாடிவாசல்’ படத்தின் முதற்கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்கவிருக்கிறது. இயக்குநர் வெற்றி மாறன் இந்நிலையில் ‘தி இந்து’ ஊடகம் நடத்திய ‘ஹடில்’ நிகழ்வில் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன். ‘விடுதலை’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலிருந்தும் தான் கற்றுக் கொண்ட பாடங்களை அங்குப் பகிர்ந்திருக்கிறார். அவர் பேசுகையில், “இந்தத் திட்டத்திலிருந்து நான் கற்ற … Read more

மதுரை சித்திரைத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்த 2 பெண் ஆளுமைகள்!

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சித்ரா ஆகியோர் லட்சக்கணக்கானோர் திரண்ட தமிழகத்தின் முக்கியமான சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கடந்த ஒரு மாதமாக இரவு, பகலாக ஓய்வில்லாமல் ஏற்பாடுகளை செய்து வெற்றிகரமாக நடத்திக் காட்டி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளனர். மதுரை சித்திரைத் திருவிழாவை கடந்த காலத்தை காட்டிலும் நடப்பாண்டு சிறப்பாக நடத்துவது, மாவட்ட நிர்வாகத்துக்கும், மாநகராட்சிக்கும், காவல்துறைக்கும் சவாலாக இருந்தது. ஏனெனில், கடந்த காலத்தில் இந்த விழாவுக்காக பக்தர்கள் அதிகம் கூடும் கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் … Read more

பாகிஸ்தானின் ‘பயங்கரவாத ஆதரவு தாக்குதல்’ முடிவு பரிதாபத்துக்கு உரியது: ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி

புதுடெல்லி: பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது என தெரிவித்த இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, அதன் காரணமாகவே இந்தியா பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா அறிவித்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக முப்படைகளின் டிஜிஎம்ஓக்கள் (ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள்) இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளித்த ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, “ஜம்மு காஷ்மீர் … Read more

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது: ட்ரம்ப்

வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை அமெரிக்க தடுத்து நிறுத்தியதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் இதனை தெரிவித்தார். “இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் சார்ந்து அமெரிக்க அரசு நிர்வாக ரீதியாக முக்கிய பங்காற்றியது. இரு தரப்புக்கும் வர்த்தக ரீதியான அழுத்தம் கொடுத்து போரை தவிர்க்கச் செய்தோம். இந்தப் போர் நிறுத்தம் நிரந்தரமானதாக இருக்கும் என கருதுகிறேன். சனிக்கிழமை அன்று இதை … Read more

'PoK, பயங்கரவாதம்…' உலக நாடுகளிடம் கட் அண்ட் ரைட்டாக சொன்ன பிரதமர் மோடி

PM Narendra Modi: பயங்கரவாதம், PoK குறித்து மட்டுமே இனி பேச்சுவார்த்தை இருக்கும் என்று சர்வதேச சமூகத்திற்கு நான் சொல்ல விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான்- பிரபுதேவா புது பட அப்டேட்; வெளியானது டைட்டில்

ஏ ஆர் ரஹ்மான் மற்றும் பிரபுதேவா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகும் ‘மூன்வாக்’ திரைப்படம். உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியது.    

ஐபிஎல்க்கு பிறகு ஒட்டுமொத்தமாக மாறும் இந்திய அணி! இவர்களுக்கு வாய்ப்பு இல்லை!

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஜூன் 20ஆம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த தொடர் இந்திய அணிக்கு பெரும் சவாலாக அமைய உள்ளது. காரணம் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். “டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் முதன்முதலில் விளையாடி … Read more

பாகிஸ்தான் இனி பேச்சு பேச்சாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி எச்சரிக்கை…

பாகிஸ்தான் இனி பேச்சு பேச்சாக இருக்க வேண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தனது எல்லைக் கோட்டை தாண்டினால் தகுந்த பதிலடி கிடைக்கும் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் தொலைக்காட்சி மூலமாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உயரையாற்றினார். அப்போது பேசிய அவர், மே 7ம் தேதி இரவு ஆபரேஷன் சிந்தூரின் முதல் கட்ட நடவடிக்கையாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் … Read more