தென்மேற்கு பருவமழை மே 27-ல் தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் 27-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளிலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிறது. குறிப்பாக, வேலூர், கரூர் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருமவழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல், … Read more

எல்லை மாநிலங்களில் மீண்டும் அமைதி திரும்பியது

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய எல்லை மாநிலங்களில் 4 நாட்களுக்கு பிறகு, நேற்று அமைதி திரும்பியது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்தியா கடந்த 7-ம் தேதி மேற்கொண்டது. அன்று முதல் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப்,ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மக்களிடம் பதற்றம் நிலவியது. எல்லை பகுதியை ஒட்டி உள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் … Read more

தமிழக முதல்வர் நாளை ஊட்டி பயணம்

ஊட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை ஊட்டி செல்கிறார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளின் அரசி என அழைக்கப்படு, ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.  ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கவும், கவரவும் மாவட்டம் நிர்வாகம் சார்பில் கோடைக்காலத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கன மலர் கண்காட்சி ஊட்டி … Read more

Ukraine: "அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால்…" – ஜெலன்ஸ்கி சொல்வதென்ன?

ரஷ்யா – உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிப்பது குறித்து சமீபத்தில் பேசியுள்ளார் விளாதிமிர் புதின். இதற்கு பதிலளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா இறுதியாக, போருக்கு முற்றுப்புள்ளிக்கு நடவடிக்கைகளை எடுக்க முன்வருவது மகிழ்ச்சியளித்தாலும், எந்தவொரு அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் முன்னர் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். Russia – Ukraine – புதின் ரஷ்யா போர் நிறுத்தம் குறித்துப் பேசுவதை நேர்மறையானதாக கருதும் ஜெலன்ஸ்கி, “மொத்த உலகமும் இதைக் … Read more

“திமுக என்ற தீயசக்தி வீழ்த்தப்பட வேண்டும்” – டி.டி.வி. தினகரன் 

சாத்தூர்: தேர்தல் என்பது திமுகவை வீழ்த்துவதற்கான ஜனநாயக போர். திமுக என்ற தீய சக்தி வீழ்த்தப்பட வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளோம். எங்கள் கூட்டணி மேலும் வலுப்பெறும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறினார். அமமுக விருதுநகர் மத்திய மாவட்டம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சாத்தூரில் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது … Read more

''ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக, ராணுவ உறுதியின் சின்னம்'' – ராஜ்நாத் சிங்

லக்னோ: பாகிஸ்தானுக்குள் இருக்கும் இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு இந்திய ஆயுதப்படைகள் தீர்க்கமான அடியை வழங்கியிருப்பதாகக் கூறி ஆபரேஷன் சிந்தூரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பாராட்டியுள்ளார். மேலும் ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் லக்னோவில் பிரம்மோஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தின் தொடக்க விழாவில் காணொலி மூலம் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல. அது … Read more

பஞ்சாப் எல்லையில் தொடரும் பதற்றம், அதிகாலையில் இந்தியா பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

India Pakistan : பஞ்சாப் எல்லையில் தொடரும் பதற்றம் காரணமாக இந்திய அரசு அதிகாலையில் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

போர் நிறுத்தம் குறித்து திருமாவளவன் அறிக்கை

சென்னை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போர் நிறுத்தம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ”இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்றுவந்த போர் நேற்று மாலை 5.00 மணியுடன் நிறுத்தப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்து இரண்டு நாடுகளும் பேசித் தீர்வு காண வேண்டும். பகாஷ்மீரிலுள்ள பஹல்காமில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுக்கும் – பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடித்தது. அது மேலும் விரிவடையக்கூடாது; போர் … Read more

"தனியார் துறைகள், நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு வேண்டும்" – பாமக மாநாடு தீர்மானங்கள் ஹைலைட்ஸ்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தையடுத்த திருவிடந்தை பகுதியில் நடைபெற்றது. இன்று மாலை நான்கு மணிக்குத் தொடங்கிய மாநாட்டில், இசை, நடன கலைநிகழ்ச்சிகள், பாராகிளைடரில் வன்னியர் சங்க கொடியை பறக்கவிடுதல், ட்ரோன் காட்சி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. #இனமேஎழுஉரிமைபெறு #சித்திரைமுழுநிலவுமாநாடு pic.twitter.com/RRimY1g1Wo — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 10, 2025 மாநாட்டைத் தொடங்கிவைத்த பாமக நிறுவனர் ராமதாஸ், தொண்டர்கள் ஆர்பரிப்புக்கு இடையே கட்சிக் கொடியை ஏற்றினார். … Read more

“போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா அறிவித்தது தவறான முன்னுதாரணம்” – கிருஷ்ணசாமி கருத்து

கோவில்பட்டி: அமெரிக்கா தலையீட்டில் போர் நிறுத்தம் என்று செய்திகள் வருகின்றன. இதனையே இந்திய அரசும் தெரிவித்துள்ளது. 5-வது வல்லரசு நாடாக இந்தியா உள்ளது. நம்முடைய நிலமையை இன்னொரு நாடு முடிவெடுப்பது இருப்பது ஏற்புடையது அல்ல. போர் நிறுத்தம் என்பதை இந்தியா தான் அறிவிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த ஏப்.30-ம் தேதி முதல் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை … Read more