'ஸ்ரீநகரில் குண்டுகள் வெடிக்கும் சத்தம்; அமைதி ஒப்பந்தத்துக்கு என்ன ஆச்சு?’ – ஒமர் அப்துல்லா

‘ஒமர் அப்துல்லா பதிவு!’ இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் எல்லாவற்றையும் முழுமையாக நிறுத்திக் கொள்வதாக இரு நாடுகளும் அறிவித்த நிலையில், மீண்டும் தாக்குதல் நடப்பதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்வீட் செய்திருக்கிறார். ஒமர் அப்துல்லா பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் ஜெனரலின் அழைப்பையும் கோரிக்கையையும் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இரு நாடுகளும் … Read more

வடகாடு சம்பவத்துக்கு காவல் துறை அலட்சியமும், செயலற்ற நிலையுமே முக்கியக் காரணம்: முத்தரசன்

சென்னை: “வடகாடு கிராமத்தில் குடிபோதையில் இருந்த சிலரால் ஏற்பட்ட சம்பவம் சமூக மோதலாக சித்தரிக்கப்பட்டு, வதந்திகளும் பரப்பப்பட்டுள்ளன. இச் சம்பவம் கைமீறி சென்றதற்கு காவல் துறையின் அலட்சியமும், செயலற்ற நிலையும்தான் முக்கியக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தகராறு நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் வாய்மூடி மவுன சாட்சியாக நின்று இருந்தனர் என்பது வெட்கப்பட வேண்டிய செயலாகும்,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், … Read more

இந்தியா – பாக். போர் நிறுத்தம்: அமைச்சர்கள், முப்படை தளபதிகள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் நிறுத்தம் என இரு நாடுகளும் முடிவு செய்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், முப்படைகளின் தளபதிகள், வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சனிக்கிழமை (மே 10) போர் நிறுத்தம் என அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் என்பது கவனிக்கத்தக்கது. இந்தக் … Read more

பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒரு கோழை: நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்.பி. ஆவேசம்

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் இஸ்லாமாபாத்திலுள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.பி. ஷாகித் கட்டக் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் அவர் பேசியதாவது: நமது பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒரு கோழை. எந்த முடிவையும் எடுக்க தைரியம் இல்லாமல் இருக்கிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை உச்சரிக்கக் கூட அவருக்கு தைரியம் இல்லை. மிகவும் பலம் … Read more

சாம்சங் கேலக்சி F56 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி எஃப்56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி … Read more

பாகிஸ்தானை பிளாக்மெயில் செய்ததா அமெரிக்கா? திடீர் சமாதானத்திற்கு என்ன காரணம்?

India Pakistan Ceasefire: இந்தியா – பாகிஸ்தான் இடையே திடீர் போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கும், அதில் அமெரிக்காவுக்கு உள்ள தொடர்பின் பின்னணி குறித்தும் இங்கு காணலாம்.

எஸ்.எஸ்.ராஜமௌலி எடுத்த மிகப்பெரிய முடிவு.. ரசிகர்களுக்கு ஷாக்

இந்திய சினிமாவுக்கு பிரமாண்டாமான படம் தந்து வரும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தற்போது மிகப்பெரிய முடிவு ஒன்றை வெளியிடப் போவதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு இந்தியா இறுதி எச்சரிக்கை… மீண்டும் பயங்கரவாத தாக்குதல் ஏற்பட்டால் அது போருக்கு சமம்…

எதிர்காலத்தில் நிகழும் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் போருக்குச் சமமான செயலாகக் கருதப்பட்டு அதற்கேற்ப பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. ‘ஆபரேஷன் சிந்துர்’ ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்த நிலையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவின் மூலம், பயங்கரவாதச் செயல்களை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு ‘தங்குமிடம்’ வழங்கி வரும் பாகிஸ்தானுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்புவதே இதன் … Read more

India – Pakistan:“தேசத்தைக் காக்க எப்போதும் தயாராக இருக்கிறோம்"- Ceasefire குறித்து இந்திய ராணுவம்!

இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்த மோதல் போக்கை கைவிடுமாறு அமெரிக்கா இரண்டு நாட்டிடமும் கோரிக்கை வைத்துவந்தது. இது தொடர்பாக இரு நாட்டின் தலைவர்களிடமும் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த நிலையில், இரு நாடுகளும் இந்த மோதல் போக்கை நிறுத்துவதாக ஒப்புக்கொண்டன என அமெரிக்க அதிபர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் அதிகாரிகள் இரு நாடுகளும் வான், கடல், தரை வழித் தாக்குதல்களை நிறுத்துவதாக அறிவித்தனர். Commodore Raghu R Nair இந்த நிலையில், இந்தியா … Read more

பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,019 நாட்களாக நடைபெற்று வந்த பரந்தூர் விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டம் இன்று (மே 10) ஒத்திவைக்கப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இந்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக போராடக் குழுவினர் அறிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 13 கிராமங்களை உள்ளடக்கி சென்னையின் 2-வது பசுமை வழி விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இதற்காக சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த உள்ளனர். இந்த விமான … Read more