தேவதாசின் தேவதை: காதல் மணம் கமழும் ஆல்பம் பாடல்!

மாஸ் ரவியின் ஒளிப்பதிவு இயக்கத்தில் ‘தேவதாசின் தேவதை’ என்றொரு தலைப்பில் காதல் மணம் கமழும் ஆல்பம் பாடல் உருவாகி உள்ளது. 

Ajith Kumar: “கடனை அடைப்பதற்குதான் சினிமாவிற்கு வந்தேன்!'' – பகிர்கிறார் அஜித்

கடந்த திங்கட்கிழமை நடிகர் அஜித் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷன் விருதைப் பெற்றார். விருது பெற்ற கையோடு இந்திய ஊடகங்கள் சிலவற்றுக்கு பேட்டிகள் கொடுத்திருக்கிறார். நடிகர் அஜித் குமார் இது நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு அஜித் கொடுக்கும் பேட்டி என்பதால், அவர் பேசிய பல விஷயங்களும் இணையத்தில் வைரலாயின. ‘இந்தியா டுடே’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், சினிமாவுக்கு வந்ததற்கான காரணம் குறித்தும், அவர் நடித்த படங்களில் அவருக்கு மிகவும் பிடித்த … Read more

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும்… யூனுஸ் உதவியாளரின் ஆத்திரமூட்டும் பேச்சு…

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் உதவியாளர் கூறியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களையும் பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். வங்கதேச ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு) ALM ஃபஸ்லுர் ரஹ்மானின் இந்த பேச்சு இந்திய அதிகாரிகளை ஆத்திரமடையச் செய்துள்ளது. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் அசினா-வுக்கு … Read more

Ajith: “ஒரு குற்றவுணர்ச்சியால் தான் `நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தேன்!'' – அஜித் ஓப்பன் டாக்

அஜித் நடித்திருந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. கடந்த திங்கட்கிழமை ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவரிடமிருந்து அஜித் பத்ம பூஷன் விருதைப் பெற்றார். இதைத் தொடர்ந்து பல ஊடகங்களுக்கும் பேட்டி அளித்திருக்கிறார் அஜித். Ajith – Nerkonda Paarvai அப்படி ‘இந்தியா டுடே’ ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் ‘பிங்க்’ படத்தை ரீமேக் செய்ததற்கான காரணத்தைக் கூறியிருக்கிறார். அந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பேசத் தொடங்கிய அஜித், “நான் ‘பிங்க்’ திரைப்படத்தை தமிழில் … Read more

பாஜக கூட்டணிக்கு பாராட்டு முதல் திமுக அரசுக்கு கண்டனம் வரை: அதிமுக செயற்குழுவின் 16 தீர்மானங்கள்

சென்னை: அதிமுக தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில், அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று (மே 2) நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம்: > 2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக-வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, மகத்தான வெற்றியைப் பெறுவதற்கு, அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் தொடக்கமாக பாஜகவுடன் கூட்டணியை அமைத்தும், திமுக என்கிற பொது எதிரியை … Read more

“உங்கள் பேட்டியை திரும்பத் திரும்ப பார்த்தேன்…!” – கடற்படை அதிகாரி மனைவிக்கு லலிதா ராம்தாஸ் பாராட்டு

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை வீரர் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷியை பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார் பெருமை மிக்க இந்திய கடற்படை குடும்ப உறுப்பினரும், கல்வியாளருமான லலிதா ராம்தாஸ். முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகள் குறிவைக்கப்படுவதற்கு எதிராக ஹிமான்ஷி பேசியது பேசுபொருளானது நிலையில், இந்தப் பாராட்டு முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் வினய் நர்வாலும் ஒருவர். திருமணமாகி ஒரு வாரமே ஆன … Read more

இந்த மாத OTT ரிலீஸ்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்? லிஸ்ட் இதோ

New OTT Releases This Month: இந்த மாதம் பல ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் படங்களின் தொகுபப்பை பார்க்கலாம்.

“கட்டிட விழா நடந்தால் தான் எனக்கு திருமணம்; அதற்கு 9 வருடங்கள் ஆகிவிட்டது, ஒரு வழியா..'' – விஷால்

ஆகஸ்ட் 15ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும் என சங்கத்தின் செயலாளரும் நடிகருமான விஷால் தெரிவித்திருக்கிறார். பெப்சி அமைப்பு  தொழிலாளர் தினத்தை (மே 1) நேற்று கொண்டாடி இருக்கின்றனர். இதில் நடிகர் சங்கத்தின் செயலாளரும், நடிகருமான விஷால் கலந்துகொண்டிருக்கிறார். அந்நிகழ்வில் பேசிய விஷால், “ எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த தலைவர் ஆர்.கே செல்வமணி சார். (பெப்சி தலைவர்) அவரிடம் உதவி இயக்குநராகப் பணிப்புரிய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நான் கனவில் கூட நினைக்கவில்லை … Read more

Amazon Summer Sale: டாப் 3 ஸமார்ட்போன்கள் ரூ.25,000-க்கும் குறைவான விலையில்!! முந்துங்கள்!

Amazon Summer Sale: கோடை வெயில் நாடெங்கிலும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், மனதை குளிர்விக்கும் வகையில் ஆன்லைன் விறபனை தளமான அமேசான் பல தள்ளுபடி சலுகைகளை கொடுவந்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். Amazon Smartphone Sale: 50MP செல்ஃபி கேமராக்கள் மற்றும் 100MP முதன்மை கேமராக்கள் கொண்ட சாம்சங்க் போன் மூன்று ஸ்டைலிஷ் போன்களின் பட்டியலில் சாம்சங் சேர்க்கப்பட்டுள்ளது. இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட இந்த போன்களில் ஐம்பது … Read more

இந்திய யூடியூபர்களின் கடந்த 3 ஆண்டு வருமானம் ரூ. 21,000 கோடி

டெல்லி கடந்த 3 ஆண்டுகளில் இந்திய யூடியூபர்கள் ரூ.21000 கோடி வருமானம் ஈட்டி உளனர்/ யூடியூப் உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளம் என்பதால் இதில் பலர் வீடியோக்களை, பதிவேற்றம் செய்தும் பதிவிறக்கம் செய்தும் வருகின்றனர். யூடியூப் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதில் உலகம் முழுவதும் இதுவரை 20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன இந்த வீடியோக்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வீடியோக்களை பதிவிடுபவர்களுக்கு யூடியூப் நிறுவனம் பணம் வழங்கி வருகிறது.  வீடியோக்கள் மூலம் கடந்த … Read more