ஸ்டார்லிங்க் : இந்தியாவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இன்டர்நெட் சேவைக்கு அனுமதி

எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு, நாட்டில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளைத் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக தொலைத்தொடர்புத் துறை ஒரு விருப்பக் கடிதத்தை வெளியிட்டுள்ளது. விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் என்று ஒப்பந்தக் கடிதத்தில் ஸ்டார்லிங்கிற்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. பூமியிலிருந்து சுமார் 500 முதல் 550 கி.மீ உயரத்தில் அமைந்துள்ள செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி இணைய சேவை வழங்கப்படுகிறது. கடுமையான குளிர், மூடுபனி, ஆலங்கட்டி மழை மற்றும் புயல் … Read more

எல்லையில் இந்தியா – பாகிஸ்தான் பயங்கர மோதல்.. அமெரிக்கா வைத்த முக்கியமான கோரிக்கை

India Pakistan War Latest News: இந்தியாவுக்கு ஆத்ரவாக அமெரிக்கா இருந்தாலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இருநாடுகளுக்கும் முக்கிய கோரிக்கை வைத்துள்ளது. தாக்குதலுக்கு வேண்டாம் என்றும், பேச்சு வார்த்தையில் ஈடுபடுங்கள் என்றும் அமெரிக்கா கோரிக்கை.

இந்தியாவின் பதில் தாக்குதல் எதிரொலி; பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும் பாகிஸ்தான் பிரதமர்?

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்று விதமாக மே 7 ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளைக் குறிவைத்து, இந்தியா அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் திடீரென்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அதனை வானிலேயே தடுத்து அழித்தது இந்திய ராணுவம். மேலும் பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும், பதற்றமான சூழல் … Read more

சிந்தாதிரிப்பேட்டை ஜோதியம்மாள் நகரில் ரூ.2.92 கோடியில் நவீன மீன் அங்காடி: துணை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.2.92 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சென்னையில் உள்ள மீன் அங்காடிகளில் சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி, முக்கியமானது. மீன் அங்காடிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிந்தாதிரிப்பேட்டை, ஜோதியம்மாள் நகரில், சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் ரூ.2.92 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 82 கடைகளுடன் … Read more

ராஜஸ்தான் எல்லையில் உயிருடன் பிடிபட்ட பாக். விமானி!

ஜெய்சல்மார்: பாகிஸ்தான் போர் விமானத்தின் விமானி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் பயணித்த எஃப் 16 ரக விமானத்தை இந்திய பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்திய நிலையில், அதிலிருந்து வெளியேறிய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்சல்மாரை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதலை மேற்கொண்டதாக தகவல். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லையோர பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உள்ளூர் நிர்வாகம் ‘யாரும் வெளிவர வேண்டாம்’ என எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தகவல். … Read more

இந்தியா – பாக். இடையே அமெரிக்கா சமரச முயற்சி: பதில் தாக்குதலில் அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சமரசம் ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆகியோரை தொடர்பு கொண்டு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ பேசியுள்ளார். அவரிடம் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிராக பதில் தாக்குதலை இந்தியா கொடுக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அமெரிக்கா மட்டுமல்லாது கத்தார், ஸ்பெயின், ஜெர்மனி, … Read more

இந்தியா – பாகிஸ்தான் போர்: நாடு முழுவதும் பறந்த முக்கிய அறிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: அரசு ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்து மேற்கு வங்க அரசு உத்தரவு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் விடுமுறையை ரத்து செய்வதாக மேற்கு வங்க அரசு இன்று உத்தரவிட்டது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறி, மாநில நிதித்துறை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. “மறு உத்தரவு வரும் வரை மாநில அரசு ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்படாது.” ஏற்கனவே விடுப்பில் உள்ளவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். மருத்துவ … Read more

IPL 2025 : 'பாதியில் நிறுத்தப்படுகிறதா ஐ.பி.எல் தொடர்?' – புதிய அப்டேட்!

‘பதற்றம்!’ இந்தியா – பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவங்கள் வலுவடைந்துள்ள நிலையில், ஐ.பி.எல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்படுமா எனும் கேள்வி எழுந்திருந்தது. இந்த விவகாரத்தில் இப்போது ஒரு புதிய அப்டேட் கிடைத்திருக்கிறது. Operation Sindoor பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா ‘ஆப்பரேஷன் சிந்தூர்!’ என்கிற மிஷனை முன்னெடுத்தது. இதன் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை இந்திய இராணுவம் தாக்கி அழித்தது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையே … Read more

பிளஸ் 2 பொதுத் தேர்வில் பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். இதில் பாடவாரியாக 100-க்கு 100 முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. கணினி அறிவியலில் அதிகமானோரும், விலங்கியலில் குறைவானோரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ்: 135 இயற்பியல்: 1,125 வேதியியல்: 3,181 உயிரியல்: 827 கணிதம்: 3.022 தாவரவியல்: 269 விலங்கியல்: 36 கணினி அறிவியல்: 9,536 வணிகவியல் 1,624 … Read more