இதுவரை இல்லாத அளவுக்கு வசூல்: ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.2.37 லட்சம் கோடி….

டெல்லி:  நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி வருவாய் அதிகரித்து சாதனை படைத்துள்ளது.  ஜிஎஸ்டி வருவாயில் புதிய உச்சமாக ஏப்ரல் 2025 மாத ஜிஎஸ்டி வருவாய்  ரூ.2.37 லட்சம் கோடி என மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. இது பொருளாதார மீள்தன்மையை பிரதிபலிக்கிறது என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.2.37 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வருவாய் வசூல் என மத்திய ய அரசு தெரிவித்துள்ளது. 2017-ல் ஜி.எஸ்.டி அமல்படுத்தியதில் இருந்து இதுவே அதிகபட்ச … Read more

முன்னாள் மத்திய மந்திரி கிரிஜா வியாஸ் மறைவு; ராஜஸ்தான் முதல்-மந்திரி இரங்கல்

ஆமதாபாத், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியான கிரிஜா வியாஸ், ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 31-ந்தேதி நடந்த ஆரத்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, அவருடைய துப்பட்டாவில் தீப்பிடித்து கொண்டது. இதனால், அவருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. உதய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் பின்பு, ஆமதாபாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், ஒருமாத … Read more

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட், பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) , அமெரிக்கா வீராங்கனை கோகோ காப் மோதினர் இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் 1-6,1-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் கோகோ காப் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் 1 More update தினத்தந்தி Related Tags : … Read more

விமானி அறைக்குள் நுழைய முயன்ற பெண் பயணிக்கு அடி, உதை; வைரலான வீடியோ

சாவோ பாவ்லோ, பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர் நோக்கி, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஏ.ஏ.950 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று புறப்பட தயாரானது. எனினும் அது புறப்பட்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பெண் பயணி ஒருவர் எழுந்து விமானத்தின் முன்பகுதிக்கு சென்றுள்ளார். திடீரென விமானி அறையின் கதவை திறந்து உள்ளே நுழைய முயன்றார். அவர் ஆவேசத்துடன், விமான ஊழியர் ஒருவரை கடுமையான சொற்களால் … Read more

உலகிலேயே அதீத 'கசப்பு' சுவை கொண்ட பொருள் கண்டுபிடிப்பு – இதை சாப்பிட்டால் என்ன ஆகும்?

உலகிலேயே அதீத கசப்புச் சுவை கொண்ட பொருளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உணவு ஆராய்ச்சியாளர்கள், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் பரவலாக காண்டப்படும் காளான்தான் உலகிலேயே அதிக கசப்பு சுவை உள்ளது என்றும் அதற்கு காரணமாக வேதிப் பொருளையும் கண்டறிந்துள்ளனர். பொதுவாக கசப்பு சுவை உள்ள காளான்கள் உண்ணத்தகுந்தவை அல்ல என்ற கருத்து பரவலாக நம்பப்படும், ஆனால் இந்த காளான் உண்பதற்கு பாதுகாப்பானது என்றும் கூறியுள்ளனர். Mushroom (Representational) இந்த காளானின் பெயர் … Read more

உலகில் எங்கிருந்தாலும் உங்களின் ஒரே வீடு இந்தியாதான்: அமெரிக்காவின் அரிசோனா பல்கலை.யில் அண்ணாமலை உரை 

அமெரிக்​கா​வின் அரிசோனா பல்​கலைக்​கழகத்​தின் இந்​திய கொள்கை மற்​றும் பொருளா​தார ஆய்வு கிளப் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இந்​திய மாணவர்​களிடம் பாஜக மூத்த தலை​வர் அண்​ணா​மலை பேசி​ய​தாவது: அமெரிக்​கா​வின் அரிசோனா பல்​கைலைக்​கழகத்​தில் படிக்​கும் நீங்​கள் அதிர்​ஷ்ட​சாலிகள். இங்கு உலகளா​விய அறிவை உங்​களால் பெற முடி​யும். படிக்​கும் காலத்​தில் நாம் அடுத்த 30 அல்​லது 40 ஆண்​டு​களுக்​கான வாழ்க்​கைக்கு நம்மை தயார் செய்​வது முக்​கி​யம். இந்​தியா வளர்ச்சிப் பாதை​யில் சென்று கொண்​டிருக்​கிறது. தொழில்​துறை வளர்ந்து கொண்​டிருக்​கிறது. ஸ்டார்ட் அப் தொழில் … Read more

முன்னாள் அமைச்சர் சாட்டர்ஜி மீது வழக்கு: மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் அனுமதி

கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் அனுமதி வழங்கியுள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த 2011 முதல் 2021 வரை கல்வி அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. இடைநிலைப் பள்ளி ஆட்சேர்க்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ளார். இவருக்கு ஜாமீன் வழங்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பரில் மறுத்துவிட்டது. இந்நிலையில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான சட்டவிரோத … Read more

இந்தியா – பாகிஸ்தான் எல்லை முழுமையாக மூடல்

டெல்லி இந்தியா அளித்த காலக்கெடு முடிந்ததால் இந்திய பாகிச்தான் எல்லை முழுமையாக மூடப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்தியா எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுக்கும் என அந்நாட்டு அமைச்சர்கள் அறிவித்து வருகின்றனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லையை மூட இந்தியா முடிவு செய்தது. இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற … Read more

பஹல்காம் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

பெங்களூரு, காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பஹல்காம் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;- “பஹல்காம் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இந்த … Read more

ஐ.பி.எல்.: மும்பை இந்தியன்ஸ் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஜெய்ப்பூர், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன் இருவரும் அரை சதமடித்து அசத்தினர். ரியான் ரிக்கல்டன் 61 ரன்களும், ரோகித் சர்மா 53 ரன்களும் … Read more