கல்லாலங்குடி ஜல்லிக்கட்டில் 40 பேர் காயம்: 2 காளைகள் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 691 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 40 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் (பொ) அக்பர்அலி தொடங்கிவைத்தார். புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த 691 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்குவதற்கு 250 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். காளைகள் முட்டியதில் 40 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேர் … Read more

ஹெலிகாப்டர் தோற்றத்தில் கார் – அனுமதி பெறாத வடிவம் என்பதால் பறிமுதல் செய்த உ.பி போலீஸார்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் தோற்றத்தில் இருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்புக்கான அனுமதி பெறவில்லை என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் பட்டி காவல் நிலையப் பகுதியில் போலீஸார் ஒரு தனித்துவமான காரை பறிமுதல் செய்துள்ளனர். இது, ஜோன்பூர் மாவட்டம் மஹராஜ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள லோஹிந்தாவைச் சேர்ந்த ராஜ் நாராயண் என்பவருக்கு சொந்தமானது. இவர் தனது காரை ஹெலிகாப்டர் போன்ற … Read more

விஜய் பயணிக்கும் இந்த தனி விமானத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

விஜய் மதுரை மற்றும் கோவைக்கு தனி விமானத்தின் மூலம் பயணம் செய்தார். இதற்கான செலவுகள் மற்றும் தனி விமானத்தின் விலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஆசிரியர் நியமன ஊழல்: முன்னாள் அமைச்சர் சாட்டர்ஜி மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநர் அனுமதி

கொல்கத்தா: ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக மேற்கு வங்க முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் அனுமதி வழங்கியுள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியில்  கடந்த 2011 முதல் 2021 வரை கல்வி அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி.  இவர் ஆசிரியர் பணிக்கு பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனங்களை வழங்கியதாகபுகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில், அவர்மீதான … Read more

Dhoni : 'நானே பழியை ஏற்கிறேன்!' – தோல்வி குறித்து தோனி பேச்சு

‘சென்னை தோல்வி!’ சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. தோல்விக்குப் பிறகு, ‘இந்தத் தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.’ என தோனி பேசியிருக்கிறார். Dhoni & Jadeja ‘பொறுப்பை ஏற்ற தோனி!’ தோனி பேசியதாவது, ‘இந்தத் தோல்விக்கான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். நான் களத்துக்குள் சென்ற … Read more

“4 ஆண்டு கால திமுக ஆட்சியில் வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல்” – சீமான் விமர்சனம்

சென்னை: “தனிப்பட்ட கொலை, முன்விரோத கொலை, குடும்பக் கொலை, குடிபோதை கொலை, எங்கோ ஓரிடத்தில் கொலை என்று படுகொலைகளை வகை பிரித்து பாகுபடுத்தி, சட்டம் – ஒழுங்கு சீரழிவை நியாயப்படுத்தும் முதல்வர் ஸ்டாலின் கூறிய எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி இதுதானா?” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி, வெளாங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த மேகரையான் தோட்டத்தில் … Read more

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை – பின்னணி என்ன?

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து அனைத்து பொருட்கள் இறக்குமதிக்கும் இந்தியா தடை விதித்துள்ளது. இருதரப்பு கடித போக்குவரத்து, இந்திய துறைமுகங்களில் கப்பல்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. … Read more

கூலி படத்தின் விமர்சனம்.. இசையமைப்பாளர் அனிருத் சொன்ன சர்ப்ரைஸ் நியூஸ்

Lokesh Kanagaraj Coolie First Review: ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது படத்தின் இசையமைப்பாளர் தன்னுடைய கருத்தை தெரிந்துள்ளார்.

கடைசி ஓவர் பரபரப்பு! மீண்டும் சென்னையை வீழ்த்தியது ஆர்சிபி!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறி இருந்தாலும் இன்றைய போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கினர். மறுபுறம் ஆர்சிபி அணிக்கு இன்றைய வெற்றி அவர்களின் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்வதற்கு முக்கியமானதாக இருந்தது. டாஸ் வென்ற தோனி முதலில் … Read more

சொத்து வரி உயர்த்தபடவில்லை! தமிழ்நாடு அரசு விளக்கம்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மீண்டும் 6 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தியதாக  தகவல்கள் வெளியான  நிலையில், அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு அரசு விளக்கம் வெளியிட்டுள்ளது.  2023ல் உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு, 6 சதவீதம் வரை, உள்ளாட்சி அமைப்புகளே, சொத்து வரியை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டது.  அதன் அடிப்படையில்,  கடந்த ஆண்டை போல,  இந்த ஆண்டும் எந்தவித முன்னறிவிப்பு 6 சதவீதம் அளவுக்கு சொத்துவரிகள் … Read more