1971-க்குப் பிறகு… – போர்க்கால ஒத்திகைக்கு இந்தியா தயாராகி வருவது எப்படி?

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நாளை (மே 7) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடைபெறுகின்றன. சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 259 இடங்களில் நடைபெறும் இந்த ஒத்திகைகளுக்கான முன்தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளையொட்டி, நாடு தழுவிய அளவில் சிவில் பாதுகாப்பு தயார் நிலையை மதிப்பிடுவதற்கும், ஒருங்கிணைப்பதற்குமான முக்கியமான கூட்டத்துக்கு உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலத் தலைமைச் செயலர்களும், … Read more

''எல்லை கட்டுப்பாடு கோடு அருகே இந்தியா தாக்கலாம்'' – பாக். அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: எல்லைக்கட்டுப்பாடு கோட்டின் எந்த ஒரு இடத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பின்பு இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கவாஜா ஆசிப், “எல்லைக் கட்டுப்பாடு கோட்டின் எந்த இடத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. அந்தத் தாக்குதல் (பஹல்காம் தாக்குதல்) சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு சர்வதேச விசாரணைக் … Read more

விபத்தில் சிக்கினால்… இனி இலவச சிகிச்சை – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

Union Government: நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைந்தால் இனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜன நாயகன் படத்தில் விஜய்யின் பெயர்..ரொம்ப வித்தியாசமா இருக்கே! என்ன தெரியுமா?

Vijay Name In Jana Nayagan Movie : விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம், ஜன நாயகன். இந்த படத்தில் அவரது பெயர் என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.  

மீண்டும் இந்திய அணியின் கேப்டன் ஆகும் விராட் கோலி? பிசிசிஐ திட்டவட்டம்!

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2 ஆண்டுகளில் 2 உலக கோப்பையை கைப்பற்றி உள்ளது. டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வென்று கோப்பையை கைப்பற்றியது. ஆனால் டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து செளதப்பி வருகிறது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடுத்தடுத்து மோசமான தோல்விகளை இந்திய அணி சந்தித்திருந்தது. இத்தொடர்களில் மூத்த வீரர்கள் பெரிதாக ரன்கள் சேர்க்காததே தோல்விகளுக்கு காரணமாக இருந்தது. அதனால் ரோகித் சர்மா மற்றும் கோலி ஆகியோரை அணியில் இருந்து நீக்க … Read more

STR: “கமல் சார் நடித்துக் காட்டிய 7 பேர் காட்சி; மிரண்டு விட்டேன்"- பிரமித்த சிலம்பரசன்

மணி ரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஜூன் 5-ம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தக் லைப் படத்தின் புரொமோஷனுக்காக நேர்காணல் ஒன்றை ஒருங்கிணைத்து அதைக் காணொளியாக ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த நேர்காணலில் சிம்பு, கமல்ஹாசன் குறித்துப் பேசியிருக்கிறார். கமல் குறித்து பேசிய சிம்பு, ” … Read more

Amazon vs Flipkart: ஆரம்பம் ஆனது சம்மர் சேல்…. ஸ்மார்ட்போன்களில் எங்கு அதிக தள்ளுபடி?

Amazon / Flipkart Summer Sale 2025: ஆன்லைன் விற்பனை தளங்களில் 2025 கோடைக்கால விற்பனை தொடங்கிவிட்டது. குறிப்பாக, பிரபலமான ஆன்லைன் விற்பனை தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் ஒரு பெரிய கோடைக்கால விற்பனை நடந்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு இந்த இரண்டு ஷாப்பிங் தளங்களிலும் மிகப்பெரிய சலுகைகள் கிடைக்கின்றன.  Smartphone: ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய சலுகைகள் ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு இந்த சேல் மிகப்பெரிய நன்மையை அளிக்கும். இவற்றில் கிடைக்கும் சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்கள் பெரிய அளவிலான … Read more

21 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து  விவரங்கள் வெளியீடு

டெல்லி இணையத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.   கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதிகள் சொத்து விவரங்களை இணைய தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட நீதிபதிகளின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மீதம் உள்ள நீதிபதிகளின் சொத்து விவரங்களும் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி கொலீஜியத்தில் உள்ள 5 நீதிபதிகளும் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். இதைத் தவிர 2 பெண் நீதிபதிகளில் ஒருவர் சொத்து மதிப்பு விவரங்களை … Read more

'ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள்; அடிமைக் கட்சியல்ல திமுக!' – முதல்வர் ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்து நாளையுடன்( மே 7) நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் ‘தமிழ்நாடெங்கும் முழங்கட்டும் திராவிட மாடல் சாதனைகள்’ ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ எனப் பதவியேற்பு உறுதிமொழி ஏற்று, இந்த மே மாதம் 7-ஆம் நாளுடன் நான்காண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்களில் ஒருவனான என் தலைமையிலான … Read more

திருவள்ளூர் | தெப்பக் குளத்தில் தவறி விழுந்து வேத பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவபெருமாள் கோயில் தெப்பக் குளத்தில் தவறி விழுந்து, சேலையூர் வேத பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம், பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வீரராகவபெருமாள் கோயிலில் தற்போது சித்திரை பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர் பகுதியில் உள்ள மடம் ஒன்றில் உள்ள வேத பாடசாலை மாணவர்களான ஹரிஹரன்(16), வெங்கட்ராமன்(17), வீரராகவன்(24) ஆகிய 3 பேர் வேத பாராயணம் படித்து … Read more