''பிரதமர் மோடி ஒரு போராளி; அவர் ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவார்'': ரஜினி

மும்பை: பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது, இரக்கமில்லாதது என்று தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் அமைதியை கொண்டுவரும் போராளி என்று பாராட்டியுள்ளார். மும்பையில் நடந்த சர்வதேச ஆடியோ விஷுவல் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் (WAVES) உச்சி மாநாடு – 2025-ல் கலந்து கொண்ட ரஜினி இவ்வாறு தெரிவித்தார். மாநாட்டில் பேசிய ரஜினிகாந்த், “பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான இரக்கமற்றத் தாக்குதலுக்கு பின்னர், இந்த நிகழ்வின் பொருள் பொழுதுபோக்கு என்பதால் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்க, அரசு இந்த நிகழ்ச்சியைத் … Read more

மும்பை ரசிகர்களுக்கு ஷாக்.. அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் சொதப்பி முதல் 5 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அடுத்த 5 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று தற்போது புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதன்படி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றுள்ளது.  இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இத்தொடரில் அறிமுகமான இளம் வீரர் விக்னேஷ் புத்தூர் தற்போது விலகி உள்ளார். அவருக்கு தாடை பகுதியில் எலும்பு அழுத்த எதிர்வினை … Read more

1700க்கும் மேற்பட்ட பணமோசடி வழக்குகள் விசாரணையில் உள்ளன : ED இயக்குநர்

அமலாக்க இயக்குநரகம் (ED) தற்போது விசாரித்து வரும் 1,700க்கும் மேற்பட்ட பணமோசடி வழக்குகள் விசாரணையில் இருப்பதாக ED இயக்குநர் ராகுல் நவீன் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். மேலும் நாட்டின் நீதி அமைப்பில் உள்ள சில உள்ளார்ந்த தாமதங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். 1956 மே 1ம் தேதி நடைமுறைக்கு வந்த அமலாக்கத்துறை தனது 69 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் நவீன் இவ்வாறு பேசினார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் … Read more

"என் கணவர், குழந்தைகளுடன் வாழ உதவுங்கள்" – புதுச்சேரி முதல்வரிடம் உதவி கேட்கும் பாகிஸ்தான் பெண்

ப்பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் மக்கள் அனைவரையும் வெளியேற உத்தரவிட்டிருக்கும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும் அதற்கான ஆணையை அனுப்பி வைத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக மருத்துவ உதவிகளுக்காக இந்தியா வந்தவர்களும், திருமணம் செய்துகொண்டு இந்தியாவுக்கு வந்தவர்களும் மத்திய அரசிடம் உதவி கேட்டு வருகின்றனர். அதன்படி இந்தியாவுக்குத் திருமணம் செய்து கொண்டு வந்த பாகிஸ்தான் பெண் ஒருவர், புதுச்சேரி முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹனீப்கான் … Read more

மதுரைக்கு வருகை தந்த தவெக தலைவர் விஜய் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

மதுரை: கொடைக்கானலில் நடைபெறும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மதுரை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்யை காண வந்த ஏராளமான தொண்டர்களும், ரசிகர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடக்கும் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்துகொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து அவர் விமானம் மூலம் மதுரை வருவதையொட்டி விஜய்யை பார்க்க, காலை முதலே அவரது கட்சியினர், ரசிகர்கள் மதுரை விமான நிலைய பகுதியில் திரண்டனர். அவர்கள் விமான நிலையத்திற்குள் நுழைய … Read more

''இது உளவுத்துறையின் தோல்வி'' – பஹல்காம் தாக்குதல் குறித்து பரூக் அப்துல்லா கருத்து

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்துள்ள தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, இது பாதுகாப்பு தோல்வி என்றும் ஜம்மு காஷ்மீரை சீர்குலைப்பதற்கான பாகிஸ்தானின் முயற்சி என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா கூறுகையில், “இது பாதுகாப்புத் தோல்வி மற்றும் உளவுத்துறை குறைபாடு விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை. நாங்கள் எங்களின் வாழ்க்கை சிறப்பாக செல்வதை அவர்கள் (பாகிஸ்தான்) விரும்பியிருக்க மாட்டார்கள். எங்கள் மக்களுக்கிடையில் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. … Read more

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஐஎஸ்ஐ தலைவர் லெப். ஜெனரல் முகம்மது அசிம் மாலிக் நியமனம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக லெப்டினட் ஜெனரல் முகம்மது அசிம் மாலிக்கை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. அதே வேலையில் அவர் இன்டர் சர்வீஸ் இன்டலிஜன்ஸ் (ஐஎஸ்ஐ) தலைவராகவும் தொடர்கிறார். ஜம்மு காஷ்மீரின் பஹஸ்காமில் நடந்த பயங்ரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியாவின் சாத்தியமான எதிர்வினை குறித்த கவலைகளுக்கு மத்தியில் இது நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தான் அமைச்சரவை பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, முகம்மது அசிம் மாலிக்கிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசனை பொறுப்பு முறையாக … Read more

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி.. பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸுக்கு வந்த சோதனை!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 49வது லீக் ஆட்டம் நேற்று (ஏப்ரல் 30) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணியே முதலில் பேட்டிங் செய்தது. மற்ற பேட்டர்கள் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சாம் கரன் மட்டும் களத்தில் நின்று ரன்களை குவித்தார். அவர் 47 பந்துகளில் 88 ரன்களை சேர்த்தார். இதனால் சாம் கரனை விக்கெட்டை பஞ்சாப் அணி வீழ்த்திய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.  இந்த அழுத்தம் காரணமாக ஓவர்களை வீச பஞ்சாப் அணி … Read more

வரும் 7 ஆம் தேதி சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை வரும் 7 ஆம் தேதி சென்னையில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாமலும், மக்களின் பல்வேறு அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்றாமலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்காமலும் இருந்து வரும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும் மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் … Read more

திருப்பூர்: தலை நசுக்கப்பட்டு இளம்பெண் படுகொலை; தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் குடியிருப்பில் உள்ள காலி இடத்தில் இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அத்தகவலின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த பெண்ணின் தலை மற்றும் கைகளில் கற்களால் அடித்து நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பெண்ணைக் கொலை செய்யப் பயன்படுத்திய கல் உள்ளிட்டவற்றில் பதிவான … Read more