தமிழகத்தில் தங்கியுள்ள பாக்., வங்கதேசத்தினரை வெளியேற்ற எல்.முருகன் வலியுறுத்தல்

சென்னை: ராணுவம் பற்றி விஷமக் கருத்து பரப்புவோர் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். “சட்டத்துக்கு புறம்பாக தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த நபர்களை உடனடியாக தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். தமிழக முதல்வர் இவ்விவகாரத்தில் துரிதமாக செயல்பட வேண்டும்” என்று மத்திய இணையமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வளைதள பதிவில், “காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா … Read more

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு நல்குவதாக மோடியிடம் புதின் உறுதி!

புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு ரஷ்யா முழு ஆதரவை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஷ்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் அழைத்து, இந்தியாவின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்தார். அப்பாவி உயிர்கள் இழப்புக்கு அவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான … Read more

CBSE Result 2025: சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை எப்படி சரிபார்ப்பது

CBSE Result 2025: இந்த ஆண்டு நடைபெற்ற சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான முழு தகவலை இங்கே பெறுங்கள்.

NEET | தமிழகத்தில் நீட் தேர்வின் புனிதத்தன்மையை கெடுக்க முயற்சி… தமிழிசை ஆவேசம்!

Tamilisai Soundararajan News In Tamil: தமிழ்நாட்டில் நீட் தேர்வின் புனித தன்மையை கெடுக்க சிலர் வேண்டும் என்றே முயற்சி செய்வதாக பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

வன்ஷ் பேடி விலகல்… CSK-வில் இணைந்த இளம் சிங்கம்… யார் இந்த உர்வில் படேல்?

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் இந்த சீசனில் அதிகமாக ஒரு வீரருக்கு வாய்ப்பு கேட்டிருப்பார்கள் என்றால், அந்த வீரர் வன்ஷ் பேடியாக (Vansh Bedi) தான் இருந்திருப்பார். டெல்லி பிரீமியர் லீக்கில் அனைவரையும் கவர்ந்த வன்ஷ் பேடியை சிஎஸ்கே மெகா ஏலத்தில் ரூ.55 லட்சம் கொடுத்து எடுத்தது. CSK: வன்ஷ் பேடி விலகல் முதல் 10 போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், கடந்த ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. … Read more

நடிகர் கவுண்டமணி மனைவி சாந்தி காலமானார் – திரையுலகம் அஞ்சலி

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 67. தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நகைச்சுவை நடிகர் என்றால் அது நடிகர் கவுண்டமணிதான். சினிமாவுக்கு வந்த நாள் முதல் இப்போது வரை இவரின் நகைச்சுவைக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. கவுண்டமணி செந்தில் கூட்டணிக்கென்றே அதிக நாட்கள் ஓடிய படங்களெல்லாம் உண்டு கவுண்டமணி மனைவியின் பெயர் சாந்தி. இவர்களது திருமணம் காதல் திருமணம். கவுண்டமணி சினிமாவில் உச்சத்திலிருந்தாலும் கவுண்டமணி தன் மனைவி … Read more

பிரபல நடிகர் கவுண்டமணியின் மனைவி மரணம்

சென்னை பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின்  மனைவு மரணம் அடைந்துள்ளார். கடந்த 80-களில் துவங்கி இன்று வரை அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ’16 வயதினிலே’ படத்தின் மூலமாக முக்கிய கதாபாத்திர நடிகராக அறிமுகமானார். இதன்பின் கவுண்டமணி தொடர்ந்து பல வருடங்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். நடிகர் கவுண்டமணி, சாந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் … Read more

Video: போர் வந்தாலும் ராணுவத்திற்கு ஆதரவில்லை; பாக்., மக்களின் மனநிலை இதுதான்!

Pakistan Civil Unrest: பாகிஸ்தான் ராணுவம் மீது அந்நாட்டில் ஏற்கெனவே கடும் அதிருப்தி நிலவும் நிலையில், அந்நாட்டு ராணுவ தலைமை தளபசதி அசிம் மூனிருக்கு கடும் அழுத்தம் உருவாகி உள்ளது.

Thalaivan Thalaivi : புரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி – அழகான காதலுடன் ஆக்ஷன் டச்!

இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் ஆகியோரை வைத்து ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன், நித்யா மேனன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு ‘தலைவன் தலைவி’ எனப் பெயரிட்டு கடந்த மே 3-ம் தேதி டைட்டில் டீசர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். Thalaivan & Thalaivi – Vijay Sethupathi Film இந்த டைட்டில் டீசரும் தற்போது மக்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. படத்தில் புரோட்டா … Read more

மே 20-ல் நாடு தழுவிய பந்த்: பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஆதரவு

சென்னை: மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைக்கு எதிராக வரும் 20-ம் தேதி ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஒருமணி நேரம் காலதாமதாக பணிக்கு செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தொழிலாளர் விரோத கொள்கைகளினால் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் பெரும் துயருக்கு … Read more