சொத்துகளை ஆன்லைனில் பதிய சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு

புதுடெல்லி: சொத்துக்களை பதிவு செய்தல், விற்பனை ஒப்பந்தம், சொத்துக்களை விற்பதற்கான அதிகாரம் வழங்குதல், விற்பனை சான்றிதழ்கள் மற்றும் அடமானம் உட்பட அனைத்து நடைமுறைகளையும் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வரைவு மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இது 117 ஆண்டு கால பத்திரபதிவு சட்டத்தை மாற்றும். சொத்துக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வகையில் பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்ய பல மாநிலங்கள் முடிவு செய்தன. இதனால் சொத்துக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வரைவு மசோதாவை … Read more

அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து எலான் மஸ்க் விலகல் – பின்னணி என்ன?

வாஷிங்டன்: அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனை எக்ஸ் தள பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார். “சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும் நிலையில், தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் வாய்ப்பை அளித்த அதிபர் டொனல்டுக்கு ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையின் நோக்கம் காலப்போக்கில் வலுப்பெறும்” என மஸ்க் தெரிவித்துள்ளார். இதை வெள்ளை மாளிகை அதிகாரி … Read more

அமெரிக்கர்களை பிளாக் செய்தால் நோ விசா…

அமெரிக்கர்களை பிளாக் செய்தால் நோ விசா. டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்ற முதல் நாளில் இருந்தே வெளியாக ஆரம்பித்த அறிவிப்புகள் இன்று வரை ஓய்ந்தபாடில்லை. சமூக வலைத்தளங்களில் அமெரிக்காவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தால், அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி நிறுத்தி வைக்குமாறு உலகம் முழுவதும் உள்ள தூதரகங்களுக்கு நேற்று முன் தான் உத்தரவு பறந்தது. இப்போது அடுத்த அதிரடி. சமூக வலைத்தளங்கள் அமெரிக்கர்களை பிளாக் செய்யும் வெளிநாட்டு … Read more

`என்ன லவ் பண்ண மாட்டியா..' – வீடு புகுந்து பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்; நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகிலுள்ள புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த கார்பென்டர் ஜெகத்குமார். இவரின் மனைவி பிரியா. இவர்களுக்கு நளினி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) உள்பட 2 பிள்ளைகள். இந்த நிலையில், கணவனுடன் ஏற்பட்ட கருத்து முரணால் பிள்ளைகளையும் பிரிந்து பிரியா சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், புலிவலம் சந்தைமேடு பகுதியில் புதிதாக வீடு கட்டி பிள்ளைகளுடன் வசித்துவந்தார் கார்பென்டர் ஜெகத்குமார். பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன் கே.ஜி.கண்டிகை பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்புப் படித்துவந்த நளினி … Read more

இ.டி.க்கு பயமில்லை என்றால் நண்பர்களை வெளிநாட்டுக்கு அனுப்பியது ஏன்? – உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

மதுரை: ‘இ.டி.க்கு பயமில்லை என்றால் நண்பர்களை வெளிநாட்டுக்கு அனுப்பியது ஏன்?’ என துணை முதல்வர் உதயநிதிக்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திமுகவுக்கு பயம்: பாஜக – அதிமுக கூட்டணியை பார்த்து திமுகவுக்கு பயம் வந்திருப்பது உண்மை. பிரதமர் மோடிக்கும் பயப்பட மாட்டேன், இ.டி.க்கும் (அமலாக்கத் துறை) பயப்படமாட்டேன் என துணை முதல்வர் உதயநிதி தொடர்ந்து பேசி வருகிறார். திமுகவினரும் … Read more

கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு

பெங்களூரு: கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிடில் ‘தக் லைஃப்’ படத்துக்கு தடை விதிக்கப்படும் என அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி எச்சரிக்கை விடுத்தார். இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள‌ தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். … Read more

தமிழில் இருந்து தான் கன்னட மொழி வந்ததா? வரலாற்று உண்மை என்ன? பிரபலங்கள் கருத்து!

தக் லைப் படத்தின் ப்ரமோஷன் விழாவில் கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கவலையை அதிகரித்துள்ளது. 

TNPSC படிப்பவர்களுக்கு மாதம் ரூ. 4000 உதவித்தொகை! எப்படி விண்ணப்பிப்பது?

மத்திய தமிழ்நாடு பல்கலைக்கழகம் (Central Tamil Nadu University) UPSC மற்றும் TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்குகிறது.

இந்திய பொருளாதாரத்தில் நிலவும் சமத்துவமின்மை அதிகரிப்பு : காங்கிரஸ்

டெல்லி இந்திய பொருளாதாரத்தில் நிலவும் சமத்துவமின்மை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கூறி உள்ளது. நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில், :இந்திய தொழில்துறை மீண்டும் ஒருமுறை அபாய சங்கை ஊதியுள்ளது. இம்முறை வாகன விற்பனைக்காக அது நடந்துள்ளது. 2018-19ல் மொத்த வாகன விற்பனையில் பயணிகள் கார்களின் பங்கு 65 சதவீதமாக இருந்த நிலையில், இப்போது 31 சதவீதமாக சரிந்துள்ளது. அதுவே விலையுயர்ந்த எஸ்யுவி மற்றும் பல்நோக்கு வாகனங்கள் விற்பனை 65 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆரோக்கியமான … Read more