ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்

குமி, 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நேற்று தொடங்கியது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா சார்பில் 59 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது. மும்முறை தாண்டுதல் விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்த பிரவின் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 16.09 மீ. தூரம் தாண்டி … Read more

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவில் நாளுக்குநாள் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில் அந்நாட்டின் பிலடெல்பியா மாகாணம் லெமன் ஹில்ஸ் டிரைவ் பகுதியில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் நேற்று இரவு இளைஞர்கள் பலர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இளைஞர், இளம்பெண் என 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்புக்கு பதிவேற்றம் தொடங்கியது

சென்னை: ஒருங்கிணைந்த குரூப்-2 முதன்மை தேர்வில் கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ்களை ஜூன் 6-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் எஸ்.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த குரூப்-2 முதன்மை தேர்வின் முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண், தரவரிசை பட்டியல் ஆகியவை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) மே 15-ம் தேதி வெளியிடப்பட்டன. தற்போது கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் பட்டியல் இணையதளத்தில் … Read more

மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காத ஒப்பந்ததாரர்களுக்கு மும்பை மாநகராட்சி அபராதம்

மும்பை: மும்பையில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கும் சூழலில் அங்கு தேங்கிய மழை நீரை வெளியேற்றும் நிலையங்களை ஒழுங்காக பராமரித்து சரியாக இயக்காத ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது. ஹிண்ட்மடா, காந்தி மார்கெட், யெல்லோ கேட் மற்றும் சுன்னாபட்டி ஆகிய நான்கு இடங்களில் உள்ள மழைநீர் வெளியேற்று நிலையங்களின் ஒப்பந்ததாரர்களுக்கும் தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள், மேற்கூறிய பகுதிகளில் செயல்பட்டு வந்த மழைநீர் … Read more

சென்னையில் கோவிட் தொற்றால் 60 வயது முதியவர் உயிரிழந்தார்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கோவிட்-19 தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார். மோகன் என அடையாளம் காணப்பட்ட இறந்தவர், ஏற்கனவே பல உடல்நலக் குறைபாடுகளுடன் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது நோயின் தீவிரத்திற்கு அவரது பிற நோய்கள் பங்களித்ததாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சென்னையில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளுடன் ஒப்பிடும்போது மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாக … Read more

பஞ்சாப்: கொரோனா தொற்றுக்கு 40 வயது நபர் பலி

சண்டிகார், சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. பின்னர், அது உலக நாடுகளுக்கு பரவியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. விமானம், ரெயில், பஸ் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் முடங்கியது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். தொற்று பாதித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்தியாவில் முதல் மற்றும் 2-ம் அலையின்போது தொற்று எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது. இந்த சூழலில், இந்தியாவில் தடுப்பூசிகள் … Read more

ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் ஒன்று மட்டும் மாறாமல் இருந்தது – சென்னை வீரர் பதிரனா உருக்கம்

மும்பை, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் வழக்கத்திற்கு மாறாக தடுமாற்றமாக செயல்பட்டு வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பரிதாபமாக வெளியேறியது.முன்னதாக நடப்பு சீசனின் தொடக்க கட்டத்தில் சில போட்டிகளில் ஆடிய சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதனால் சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டார். … Read more

ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் கொலை – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

ஜெருசலேம், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ … Read more

Vijay -க்கு ஆதரவாக வந்த Seeman | டெல்லியில் Kamal – சோகத்தில் வைகோ? | DMK| Imperfect Show 28.5.2025

* ஞானசேகரன் குற்றவாளி எனச் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு! * திமுக அரசைக் கேள்வியெழுப்பும் எடப்பாடி பழனிசாமி! * மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு * மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்! * திமுக கூட்டணியில் தொடர்வோம்: துரை வைகோ * யம்மா நிறுத்துமா தேர.. அரசியல் பண்ற இடமா இது”ஈபிஎஸ் படத்துடன் தேரை இழுத்த காயத்ரி * தாக்கப்பட தவெக பெண் நிர்வாகி: விஜய் காட்டம்? … Read more

தமிழகத்தில் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசும்: கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு அதிகனமழை – வானிலை ஆய்வு மையம்

சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 50 கி.மீ. வேகம் வரை தரைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டி, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மெதுவாக … Read more