இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு… சாதியையும் சேர்த்து கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும்?

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பல வருட தாமதங்களுக்குப் பிறகு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் அதை முடிக்க அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது. 2020 மற்றும் 2021 க்கு இடையில் நடத்தப்படவிருந்த புதிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அதிகாரப்பூர்வ காலக்கெடுவை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. “சாதி கணக்கெடுப்பைச் சேர்ப்பதா இல்லையா என்ற ஒரே காரணத்தால் தாமதம் ஏற்பட்டு வந்த … Read more

“எல்லாமே மாறிவிட்டது'' – 16 வருடத்துக்குப் பிறகு இந்தியா வந்த நபரின் வைரல் வீடியோ!

இங்கிலாந்தைச் சேர்ந்க காண்டன்ட் கிரேயேட்டர் ரால்ஃப் லெங். இவரின் குழந்தைப்பருவம் இந்தியாவில் கழிந்திருக்கிறது. அதற்குப் பிறகு சில காரணங்களால் அவர் தன் குடும்பத்துடன் மீண்டும் இங்கிலாந்து சென்றுவிட்டார். தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அவர், சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் தன் குழந்தைப் பருவத்தை கழித்த இந்திய வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இது தொடர்பாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘என் சிறுவயதில் வசித்த இடத்துக்குப் போகப்போகிறோம்’ என தன் பார்வையாளர்களை … Read more

காமராஜர் துறைமுகம் – எண்ணூர் இடையே ரூ.197 கோடி​ செலவில் நிலக்கரி கொண்டு செல்ல 2 இயந்திரங்கள்

சென்னை: காமராஜர் துறைமுகத்திலிருந்து எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரியை கொண்டு செல்வதற்காக ரூ.197 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாட்டை மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நிலக்கரி முனையம் 3-ல், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை கொண்டு செல்லும் வகையில் கூடுதலாக 2 நிலக்கரி இறக்கும் இயந்திரங்கள் தமிழக மின்வாரியத்தின் மூலம் ரூ.197 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு முடிவுக்கு ராகுல் காந்தி ரியாக்‌ஷன் என்ன?

புதுடெல்லி: நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதை வரவேற்றுள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “இது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும்” என்றார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன். 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பையும் நீக்குவோம் என்று கூறினேன். ஆனால், மத்திய அரசு … Read more

Tourist Family Review: இலங்கை அகதிகள் கதையில் சிரிப்புடன் இழையோடும் அரசியல்; இந்த டூர் நல்லாருக்கே!

இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தாஸ் (சசிக்குமார்), அவரது மனைவி வசந்தி (சிம்ரன்), இரு மகன்கள் (மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ்) ஆகிய நால்வரும், அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், பொருளாதார அகதிகளாக ஆக்கப்பட்டு படகில் ராமேஸ்வரத்திற்குத் தப்பித்து வருகிறார்கள். அங்கிருந்து, வசந்தியின் அண்ணன் (யோகி பாபு) உதவியுடன் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் குடியேறி புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறது தாஸின் குடும்பம். Tourist Family review தெருக்காரர்களிடம் ஈழத் தமிழர்கள் என்பதை மறைத்து, சகஜமாக வாழத்தொடங்கும்போது, ராமேஸ்வரத்தில் … Read more

சென்னை மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை இரு மடங்காக உயர்வு! மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் நடப்பாண்டுக்கான  மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், வீடு வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில்,   இதுவரை  13 ஆயிரத்து 800 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும்,. இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிம் என  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது சென்னை பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நகரில் 69 நடுநிலைப் பள்ளிகள், 72 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உட்பட … Read more

ஐ.பி.எல். வரலாற்றில்… சென்னை அணி 5 முறை சேப்பாக்கில் தொடர் தோல்வி

சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ததும், சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 19.2 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து 191 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி, … Read more

Health: டைப் 5 நீரிழிவு யாருக்கு வரும்.. என்ன தீர்வு; தடுக்க முடியுமா? – மருத்துவர் விளக்கம்!

சமீபத்தில் நடந்த உலக நீரிழிவு மாநாட்டில் டைப் 5 நீரிழிவு கண்டறியப்பட்டது மிகப்பெரிய பேசுபொருளானது. இந்த நோய் முதன்முதலில் 1960-களில் காணப்பட்டது. இது J-வகை நீரிழிவு நோய் என்று குறிப்பிடப்பட்டது. இது 1985-ல் உலக சுகாதார அமைப்பால் வகைப்படுத்தப்பட்டு பின் 1998-ல் உடலியல் சான்றுகள் இல்லாததால் நீக்கப்பட்டது. அந்த நேரத்தில், இது டைப் 1 மற்றும் டைப் 2-ன் தவறாக கண்டறியப்பட்ட நிலை என்று நிபுணர்கள் நம்பினர். தற்போதைய ஆராய்ச்சி, டைப் 5 நீரிழிவு நோய் வேறுபட்டது … Read more

தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிராக விசிக சார்பில் திருமாவளவன் மேல்முறையீடு

மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற கெடு விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அதன் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. மதுரையில் 2 இடங்களில் அதிமுக சார்பில் கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அக்கட்சி நிர்வாகிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, … Read more

ஆம் ஆத்மி ஆட்சியில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்: மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் மீது புதிய வழக்கு

புதுடெல்லி: டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் சுமார் ரூ.2,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி முன்னாள் அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில் 12,748 வகுப்பறைகளுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. இவை அதிக செலவில் கட்டப்பட்டதாகவும், இதன் மூலம் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் டெல்லி காவல் துறையின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏசிபி) கண்டறிந்துள்ளது. இதையடுத்து … Read more