ஏஐ வருகையால் ஐபிஎம்-ல் 8,000 பேர் வேலையிழப்பு

புதுடெல்லி: ஏஐ தொழில்நுட்பத்தின் வருகையை அடுத்து தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை அண்மைக்காலமாக அதிக பணிநீக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்போது, ஐபிஎம் நிறுவனம் 8,000 பணியாளர்களை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. இதில், மனிதவள துறையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது. அந்த பணிகளை செய்ய ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்தில் இந்த பணிநீக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகவல்தொழில்நுட்ப துறையைப் பொருத்தவரையில் … Read more

சினிமாவை மிஞ்சும் மோசடி! 40 வயது பெண்களை குறிவைக்கும் இளைஞர்!

 பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மிஞ்சும் வகையில் கோவை வாலிபர் தொழிலதிபரின் மனைவிக்கு காதல் வலை விரித்தது மட்டுமல்லாமல் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே வாரத்தில் சூடானில் காலரா நோயால் 170 பேர் மரணம்

கார்ட்டூம் ஒரே வாரத்தில் சூடான் நாட்டில் 170 பேர் காலரா நோயால் உயிரிழந்துள்ளனர்/ தற்போது சூடானில் பரவிய புதிய காலரா தொற்று காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 170-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.  பெரும்பாலான நோய்த் தொற்று பாதிப்புகள் தலைநகரான கார்ட்டூம் மற்றும் ஓம்டுர்மனில் பதிவாகியுள்ளன. ஆயினும் வடக்கு கோர்டோபான், சென்னார், காசிரா, வெள்ளை நைல் மற்றும் நைல் நதி மாகாணங்களிலும் காலரா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து சூடானின் சுகாதார அமைசச்சர் … Read more

Fever: தமிழ்நாட்டில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்; எப்படி பரவுகிறது; தடுக்க முடியுமா?

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தமிழ்நாட்டிலும் பரவிக்கொண்டிருக்கிறது என்கிற ஆய்வு முடிவு ஒன்று கடந்த சில தினங்களாக பலருடைய கண்களிலும் தென்பட்டிருக்கும். விளைவாக, ‘ஏற்கெனவே கொரோனா பரவல் அதிகரித்து விட்டது என்கிற பயத்தில் இருக்கிறோம். இப்போது ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்கிற புது வியாதியை சொல்லி பயப்படுத்துகிறீர்களே’ என்கிற பயம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். பயத்தைத் தள்ளி வைத்துவிட்டு, காரணங்களையும் தீர்வுகளையும் தெரிந்துகொண்டால் வருமுன் தடுக்கலாமே… இதுதொடர்பாக சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லாவிடம் பேசினோம். க்யூலெக்ஸ் கொசு புதிய நோய் … Read more

பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயிலில் எளிதில் மக்கும் ‘பயோ பேக்’கில் பிரசாதம் விற்பனை

பழநி: பழநி முருகன் கோயிலில் பாலித்தீன் கவருக்கு மாற்றாக எளிதில் மட்கும் ‘பயோ பேக்’கில் பிரசாதம் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது தவிர, கோயில் நிர்வாகம் சார்பில் லட்டு, அதிரசம், முறுக்கு, தினை மாவு, புளியோதரை, சர்க்கரை பொங்கல், பொங்கல் தலா ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை பக்தர்கள் அதிகளவில் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். தினமும் 2 லட்சம் ரூபாய்க்கு பிரசாதம் … Read more

ஹரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரில் சடலமாக மீட்பு

சண்டிகர்: ஹரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் நகரை சேர்ந்தவர் பிரவீன் மிட்டல் (42). இவர் தனது பெற்றோர், மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் நேற்று முன்தினம் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள பாகேஸ்வர் கோயிலுக்கு வந்தார். இக்கோயிலில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இரவு பஞ்ச்குலா நகரின் 27-வது செக்டாரில் உள்ள … Read more

500 ரூபாய் நோட்டுகளும் விரைவில் நிறுத்தப்படுமா? மத்திய அரசு சொல்வது என்ன?

ஆந்திர பிரதேசம் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழலை ஒழிப்பதற்காக 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ருதுராஜ் விலகியதற்கு காயம் மட்டும் காரணம் இல்லையா? நிர்வாகம் சொல்வது என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது ஐபிஎல் 2025 பயணத்தை முடித்துள்ளது. இந்த சீசன் தொடக்கத்தில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றியை பெற்றிருந்தாலும், அதனை தக்க வைத்துக் கொள்ள தவறினர். தொடர் தோல்விகளை சந்தித்த பின்னர் சீசனில் மொத்தமாக நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றியை பதிவு செய்துள்ளனர். தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இமாலய வெற்றியை பதிவு செய்தனர். இதன் மூலம் அடுத்த ஆண்டு பலம் வாய்ந்த … Read more

வியாசர்பாடியில் தவெக பெண் நிர்வாகிகள் தாக்கப்படவில்லை : காவல்துறை விளக்கம்

சென்னை வியாசர்பாடியில் தவெக பெண் நிர்வாகிகள் தாக்கப்படவில்லை என காவல்துறை ஆணையர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. த.வெ.க. பெண் நிர்வாகிகள் சென்னை வியாசர்பாடி தீ விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவி வழங்கியபோது அவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகம் அளித்த விளக்கத்தில் மறுத்துள்ளது. சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் குடிசைபகுதியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு சில அமைப்பின் நிர்வாகிகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக சமூக … Read more

மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு என்ன? – பிரேமலதா விளக்கம்

சென்னை: ‘மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள்’ என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் சாதக, பாதகங்களை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். இதற்கு ஒற்றை வரியில் பதில் அளிக்க முடியாது. முதல்வர் ஸ்டாலின் எதற்காக டெல்லி சென்றார் என்பதை அவர்தான் கூறவேண்டும். இதனால் தமிழக மக்கள் பயன் அடைந்தால் வரவேற்போம். அதேபோல், அமலாக்கத் துறையும் சோதனைக்குப் … Read more